RSS

சாலைவிதி மீறல் குற்ற தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

04 Jun

10363832_10152450595731575_617560797387914812_n
நேற்றைய செய்தித்தாளில் சவூதி அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

போக்குவரத்து சமிஞ்சை (Signal)யில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியபின் சாலையைக் கடப்பவரை ”கொலைக்குற்றம்” புரிந்தவர் என்ற வகையில் வழக்குத்தொடரப்படும் எனவும் மேற்கொண்டு சில கடுமையான அபராதம் விதிக்கும் வகையிலும் சட்டம் இயற்றப்பட்டு 1ம் தேதி முதல் அமலில் உள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் முஹம்மது பின் நயீஃப் அறிவித்திருந்தார்.

  • இதேபோல சட்டம் இங்கு (துபையில்) நடைமுறையில் இருக்கிறது.
    சிவப்பு விளக்கை கடந்தால் 2000 திர்ஹம் அபராதம், 12 கரும்புள்ளிகள் (24 புள்ளிகள் பெற்றுவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும்) இதுதவிர 30 நாள்கள் கார் போலீஸ் நிலையத்தில் சிறைபிடிப்பு அதற்கான அபராதம் என ஒரு வழியாகிவிடும்.

    இதற்கிடையில் இந்த விதிமீறலினால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டால் நீதிமன்ற முடிவுக்கு உட்படவேண்டும். அது ஒரு பெருங்கதை……

    அன்றாடம் நமது நாட்டில் நடக்கும் சாலை விபத்து அதன் காரணமாய் ஏற்படும் உயிர்பலி தொடர்கதையாகி வருவதையும், இதுபோன்ற கடுமையான சட்டங்கள் நம்நாட்டிலும் ஏன் அமல்படுத்தக்கூடாது?
    முழுமையான போக்குவரத்து விதிகளேதும் அறியாமலே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. என்று அந்தச் (சவூதி நளிதழ் ) செய்தியினை படிக்கும் போது நினைவில் ஏக்கமாய் வந்துபோனது…..

    இன்று காலையில், மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலைவிபத்தில் மரணம் என்ற செய்தியோடு, விபத்திற்கான காரணம் எதிரே வந்த கார் அமைச்சரின் காரில் மோதி விபத்துக்குள்ளானது. அமைச்சர் கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிரவைத்தது.
    (அமைச்சர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அவரது மரணம் நிகழ்ந்ததாகவும் சொல்லப் படுகின்றது)

    சாலைவிதி மீறல் குற்றம் தான்.
    சாலைவிதி மீறல் குற்ற தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
    ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வுகள், பயிற்சிமுறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.
    விலைமதிப்பில்லா உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    செய்யுமா இந்த புதிய அரசு?
    Rafeek Sulaiman-MIXRafeeq Sulaiman (புதுசுரபி)

     
  • Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: