RSS

மடமடவென டைப் அடிக்கத் தொடங்கினேன். முதல் வரி ‘how old are you?’.

11 Jun

10351468_10204162318365201_1247078645843324619_nஓரிரு மாதங்கள் முன்பாக தோழர் Geeta Ilangovan அந்த ஸ்டேட்டஸை இட்டதுமே அவரை தனிமடலில் தொடர்பு கொண்டேன். ”நீங்கள் எழுதியிருக்கும் பெண்மணியை பற்றி எங்கள் பத்திரிகையில் கட்டுரை எழுத விரும்புகிறோம்”

உடனே சம்பந்தப்பட்டவரிடம் பேசிவிட்டு ஒப்புதல் தந்தார். “தாராளமாக எழுதுங்கள். ஆனால் அவருக்கு தெலுங்குதான் தெரியும். ஆங்கிலம் அவ்வளவாக வராது. தெலுங்கில் பேசி பேட்டி எடுக்க முடியுமா?”

 • பகீரென்றது. அதுவரை தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டும் பேட்டி எடுத்திருக்கிறேன். வேறு வழியில்லை. ’முப்பது நாளில் தெலுங்கு பாஷை’ வாங்கி வாசித்தேன். ஜெமினி, தெலுங்கு மூவி க்ளப், ஜெமினி மூவீஸ் என்று தெலுங்கு சேனல்களாக பார்த்துத் தள்ளினேன். காசினோவில் அடுத்தடுத்து லெஜெண்ட், ரேஸ்குர்ரம் என்று தெலுங்கு படங்களாக பார்த்து ஓரளவுக்கு பிக்கப் செய்தேன்.

  சாஸ்திரி பவனில் இருந்த அவருடைய அலுவலகத்தில் பேட்டிக்காக சந்திக்கும்போது, அதுவரை இருந்த தன்னம்பிக்கை முற்றிலுமாக குலைந்தது.

  “கொஞ்சம் கொஞ்சம் தெலுகு மாட்லாடுதுனு. பாலகிருஷ்ணா படமந்தா நிண்டா சூசி உண்டானு” என்று உடைந்த தெலுங்கில் ஆரம்பித்தேன்.

  ”நோ பிராப்ளம். ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் தமிழ்” என்று கம்பீரமாக ஆரம்பித்தார் பாலாமணி. சில வார்த்தைகளை ஆங்கிலத்திலும், பெரும்பாலான பேச்சை தெலுங்கிலும் (ஒருமாதிரி ப்யூர் தெலுங்கு. சென்னைவாசிகளுக்கு புரிவது கடினம்) மடமடவென்று பேசினார். நல்ல வேளை கீதாவுக்கு தெலுங்கு நன்றாக தெரிந்திருந்ததால் தப்பித்தேன். எங்களுக்கு இடையே டிரான்ஸ்லேட்டராக அவர் பணிபுரிந்தார். இத்தனைக்கும் கீதா அவருக்கு மேலதிகாரி.

  இவ்வாறாக என்னுடைய முதல் தெலுங்கு பேட்டி முடிந்தது.

  ’பெண்ணியம்’ என்றெல்லாம் க்ளெய்ம் செய்துக்கொள்ளாத – ஆனால் – தீவிரமான பெண்ணியவாதி அவர். சீமான் தெ பொவாரையெல்லாம் அவருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவரிடம் மிளிரும் பெண்ணம்பிக்கை வேறு யாருக்கும் சளைத்ததல்ல. கணவரின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்துப்போய் நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிட்ட ஐம்பது வயது பெண்மணி, தன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்காக போராடிய போராட்டங்கள்தான் அவருடைய கதை.

  “ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு குடும்பத்தலைவி அரசு வேலையில் சேர்ந்து பணியாற்றுவது நியாயமா? இந்த வயதில் உங்களுக்கு மத்திய அரசு பணி கொடுத்திருப்பதால், வேலையில்லாத ஏதோ ஒரு இளைஞன் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறான் இல்லையா?” என்று கேட்டால்,

  “அப்படியெல்லாம் தர்க்கம் பேசி எங்களை முடக்கிவிட முடியாது தம்பி. ஐம்பது வயதில் ஓர் ஆணுக்கு என்னவெல்லாம் இங்கு சாத்தியமோ, அதெல்லாம் பெண்ணுக்கும் சாத்தியம்தான். நான் வேலைக்கு வருவது என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. பல நூறு ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் எங்கள் உரிமைகளை கேட்டு வெல்வது. இப்போது நான் பெற்றிருக்கும் சுதந்திரம் சாதாரணமானதல்ல. இது தனிப்பட்ட வெற்றியுமல்ல. என்னை பின்பற்றி ஏராளமானோர் வருவார்கள். காத்திருங்கள்” என்கிறார் பாலாமணி.

  அவரிடம் பேசியதை தொகுத்து கட்டுரையாக்க முற்படும்போது, எங்கே ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். பேட்டி எடுத்து ஒரு வாரம் ஆகியும் எழுத வராமல் அல்லல் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மஞ்சுவாரியர் நடித்த திரைப்படத்தை காண சந்தர்ப்பம் வாய்த்தது. படம் முடிந்ததுமே பாலாமணி குறித்த கட்டுரையை எங்கே ஆரம்பிப்பது என்கிற சீக்ரெட் புலப்பட்டது.

  அலுவலகம் வந்து மடமடவென டைப் அடிக்கத் தொடங்கினேன். முதல் வரி ‘how old are you?’.

  கட்டுரைக்கு தலைப்பும் அதேதான். உள்ளடக்கம் மற்றும் வடிவரீதியாக முழு திருப்தியை கொடுத்த கட்டுரை. ஒரு கட்டுரையை எழுதி முடித்ததுமே ‘பக்கா’ என்கிற எண்ணம் ஏற்படுவது அபூர்வம். திரும்பவும் எடிட் செய்யவேண்டிய அவசியமே இல்லாத தன்னம்பிக்கை அம்மாதிரி சந்தர்ப்பங்களில் கிடைக்கும். அது இக்கட்டுரையில் எனக்கு சாத்தியமானது. வரும் வெள்ளிக்கிழமை கடைகளில் கிடைக்கும் ‘புதிய தலைமுறை’ வார இதழில் நீங்களும் வாசிக்கலாம்.
  1010203_10203920897129821_6423824321004679685_nYuva Krishna

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: