RSS

வசியத் தமிழுக்கு வாழ்த்துக்கள்…

13 Jul

10525786_838298886194852_4105569148738110738_n

10537422_838299032861504_4310151929200691774_nமுதல் படத்தில் ஒரு குழந்தை தலையில் பூவோடு நடுவில் நிற்கிறது பாருங்கள்…அந்தக் குழந்தைக்கு இன்று 60 வது பிறந்தநாள்…
அடுத்த படம், பெரும்புகழ் பெற்ற பிள்ளையைப் பெற்றவர்கள்….. அக்குழந்தை கவிப்பேரரசு வைரமுத்து.. அடுத்த படத்தில் அவரது தந்தை ராமசாமித்தேவர்,தாயார் அங்கம்மாள்….

சில ஆண்டுகளுக்கு முன் பெரியகுளம் பொதுக்கூட்டத்திற்குச் சென்றபோது, கவிஞரிடம் சொல்லி விட்டு அவரது வடுகப்பட்டி வீட்டிற்குச் சென்றிருந்தேன்….என் மீதும் உடன் வந்த தோழர்கள் மீதும் அந்த தம்பதி காட்டிய பாசத்தை நினைத்தாலே மனம் நெகிழும்…

என் முகவரி அட்டையை வாங்கி, ”தமிழில் இருக்குதய்யா” என்று கூறி கண்ணில் ஒற்றிக்கொண்டு மகிழவைத்தார்…
சென்னை வரும்போது அவசியம் என்னை வந்து பார்க்கவேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டு அனுப்பிவைத்தார் அய்யா…

அவர்தாயார் தானே மோர் கரைத்து கொண்டுவந்து எங்களுக்குக் கொடுக்க, ”யப்பா இது மோர் மாதிரி “ என்று கிண்டல் செய்தார் அய்யா.

மதன் கார்க்கி திருமணம் நடந்தபோது ரமலான் மாதம்.. பேரன் திருமணத்தில் உற்சாகமாக இருந்த அந்தப் பெரியவரை வாக்களித்தபடி பார்த்து வாழ்த்துபெற்றுக்கொண்டு, நோன்பு காரணமாக சாப்பிடாமல் புறப்பட்டு , புதுக்கல்லூரி பேராசிரியர்கள் முரளி அரூபன், சுந்தரமூர்த்தி ஆகியோரோடு நுங்கம்பாக்கத்திற்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டோம்… சிறிது நேரத்தில் அலைபேசியில் அழைத்து விசாரித்தார் வைரமுத்து, எனக்கு மட்டுமல்ல, உடனிருந்த ஆசிரியர்களுக்கும் ஆச்சரியம்…

பள்ளிப் பருவத்தில் வைரமுத்துஉள்ளிட்ட கவிஞர்களைப் பார்ப்பதற்காகவே சென்னை வந்ததுண்டு…முன்னோடிக்கவிஞர்கள் அன்பைப்பொழிந்து என்னை ஆற்றுப்படுத்தியதுண்டு….

வணிக ஆட்சியியல் முடித்து புதுக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயில நான் முடிவெடுத்தபோது, தமிழ் படிப்பது தற்கொலைக்கு சமமானது என்கிற ரீதியில் பலரும் பயங்காட்டினார்கள்…கவிஞரை சந்தித்தேன் ..நிலைமையைச் சொன்னேன்…அவர் கேட்டார், தமிழை நீங்கள் படிக்காவிட்டால் வேறு யார் படிப்பது” தட்டிக்கொடுத்தார், தைரியமூட்டினார்..

சிலவாரங்கள் முன்பு ”உங்கள் தொலைக்காட்சி விவாதங்களை அடிக்கடி கவனிக்கிறேன்….” என்று பெரிதும் உற்சாகப்படுத்தினார்…

நாம் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை… அன்பைக் கொண்டாடுவதுண்டு…..

1915602_102682326423182_253403_nHaja Gani

 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: