RSS

பரண்

19 Jul

அப்பா காலம்வரை
கட்டப்பட்ட அத்தனை வீடுகளிலும்
அறைகள் இருந்தனவோ
இல்லையோ
நிச்சயம் பரண்கள் இருந்தன.

பழையன கழிந்தனவோ
இல்லையோ
கண்டிப்பாய் பரண் ஏறின.

ஒவ்வொரு வருடமும்
போகிக்குப் பரண்கள்
ஒழுங்குபடுத்தப்படும்

என்றேனும் ஒரு நாள்
தேவைப்படும் என்று
பரண் ஏறிய பொருட்கள்
சீனியாரிட்டி அடிப்படையில்
சீக்கிரமாய் விடை பெறும்.

சம்பளம் சற்று அதிகமானவுடன்
பூர்வீக வீட்டை இடித்துவிட்டு
மாடர்னாய் அமைந்தது
என் புது வீடு.

எக்ஸ்சேஞ்ச் மேளாவில்
பொருள் மாற்றம் நடப்பதால்
பொருட்களோடு
பரணும் விடை பெற்றது.

”மாத்திரை நேரத்துக்குச் சாப்பிடுங்க
உடம்பைக் கவனமா பாத்துக்கிடுங்க”
சொல்லிவிட்டு என் மகன்
வேலைக்காக
விமானம் ஏறியபோது
வீடே பரணாய்
மாறிப் போனது!!

10462842_10202345551068775_4006797038890109229_nM.m. Abdulla– புதுகை அப்துல்லா

( ஆனந்த விகடன் – டிசம்பர்11, 2009)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: