RSS

நரம்பியலை அரசாங்கம் படிக்க வைத்தது பணி ஓய்வு காலம் வரை சேவையும் அங்குதான்.

07 Aug

2008 ஆம் ஆண்டு. அண்ணன் முரளிகண்ணன் சென்னை ஐஐடியில் டாக்டரேட் படித்துக்கொண்டு இருந்தார். ஐஐடி வளாகத்தின் உள்ளேயே ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கபடும் தனி வீட்டில் வசித்துவந்தார். வார இறுதி நாட்களில் சென்னையில் இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அவரது வீட்டிற்குச் செல்வதுண்டு. பலநூறு ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து காடுபோல் இயற்கைச் சூழலில் இருக்கும் அந்த இடத்தில் அவருடன் பேசிக்கொண்டு காலார நடந்து செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான விசயம்.

அப்படி ஒருநாள் சென்றபோது அவரைக் காண வந்து இருந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியலில் அறுவைசிகிச்சைக்கான எம்.எஸ். படித்துக்கொண்டு இருப்பதாக அறிமுகம் செய்துவைத்தார். கிளம்பும்போது நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்? என்று கேட்டேன். மருத்துவக் கல்லூரி விடுதிக்குச் செல்வதாகச் சொன்னார். நானே டிராப் செய்வதாகக்கூறி ஏற்றிச் சென்றேன். அன்று துவங்கிய நட்பு இன்றுவரை இறங்கவில்லை

பின்னர் வந்த நாட்களில் அவரது எழுத்துகளைப் பார்த்து திமுககாரராக இருப்பாரோ என்ற எண்ணத்தில் நட்பு மேலும் இறுகியது. ஆனால் அவர் திமுககாரர் அல்ல.. பெரியார் வழிச் சிந்தனையாளர் என்பது தொடர்ந்த பழக்கத்தில் தெரிய வந்தது. “ஏன் டாக்டர் நீங்க தனியா பிராக்டீஸ் செய்வதில்லை” என்று கேட்டேன்? “எனக்கு மாதச் செலவுக்கு பணமும் குடுத்து எம்.எஸ். நரம்பியலை அரசாங்கம் படிக்க வைத்தது. தனியார் கல்லூரியில் சேர்த்து அப்பா படிக்கவைக்கவில்லை. பணி ஓய்வு காலம் வரை நான் இங்கு மட்டுமே இருப்பதுதான் சரி” என்றார். இப்பவும் பணி நேரம் கடந்தும் பலமணி நேரம் அவரது நரம்பியல் துறையின் உள்ளேதான் சுற்றிக்கொண்டு இருப்பார். மருத்துவ அறிவு, மொழி அறிவு , பொது அறிவு என பலதரப்பட்ட இயல்புகளை ஒருங்கே ஒருவர் பெறுவது கடினம். அப்படிப்பட்டவர்களின் நட்பு கிடைப்பது அதை விடக் கடினம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்.

இன்று பிறந்தநாள் காணும் “மக்கள் மருத்துவர்” அண்ணன் புருனோ வாழ்க வாழ்க!
379083_10150469011784828_771653014_n
Mariano Anto Bruno Mascarenhas

10462842_10202345551068775_4006797038890109229_n                                        M.m. Abdulla

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: