RSS

பின்நவீனத்துவம் என்றால் என்ன!

11 Aug

பின்நவீனத்துவம் இணையத்தில் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று புரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டு பாதிபேரும், தாங்கள் புரிந்துகொண்ட பின்நவீனத்துவம் என்னவென்பதை விளக்க முடியாமல் மீதி பேருமாக வாழக்கூடிய பின்நவீனத்துவச் சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தபோதே தமிழில் சிற்றிலக்கிய சமாச்சாரமாக இருந்த பின்நவீனத்துவம், வெகுஜன கலாச்சாரத்தின் கச்சாப்பொருளாக ஆகிவிட்டது. ஒரு படமோ, கதையோ, கட்டுரையோ பிடித்துவிட்டால் அதில் பின்நவீனத்துவ அம்சங்கள் இருப்பதாக போகிறபோக்கில் ஆள் ஆளுக்கு அடித்துவிட்டு போக ஆரம்பித்துவிட்டார்கள்.
நண்பர் ஒருவர், பின்நவீனத்துவத்தை விளக்க முடியாது, உணரத்தான் முடியுமென்று ஒரு போடு போட்டிருக்கிறார். கடவுள் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது பின்நவீனத்துவம்.

பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் எல்லோரும் பின்நவீனத்துவம் என்கிற வார்த்தையை சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்கள். யாரையாவது விளக்கம் கேட்டால் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் அல்லது ‘தம்பி, அது தேவரகசியம்’ ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.

அப்படியெனில் பின்நவீனத்துவம் என்பது அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று நினைத்துக் கொண்டு, அது என்னவென்ற தெளிவு இல்லாமலேயே கும்பலில் கோவிந்தாவாக பின்நவீனத்துவத்துக்கு ஜே போட்டாக வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் ஏற்பட்டு விட்டது.

பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, தத்துவம், லொட்டு லொசுக்கையெல்லாம் விட்டுவிடுவோம். பின்நவீனத்துவம் என்பது ஒரு காலக்கட்டத்தின் சூழல். அதாவது கி.மு / கி.பி மாதிரி. அதிமுக ஆட்சிக்காலம் / திமுக ஆட்சிக்காலம் மாதிரி. அடிப்படையில் இந்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் போதும். அதாவது நவீனத்துவத்தை கி.மு. என்று எடுத்துக் கொண்டால் பின்நவீனத்துவத்தை கி.பி. என்று எடுத்துக் கொள்ளலாம். மொத்த மேட்டரே இவ்வளவுதான்.

மனுஷன் மாடர்ன் ஆன காலம் நவீனத்துவம்.
மாடர்ன் ஆன மனுஷன் மறுபடியும் மாடர்ன் அம்சங்களை கேள்விக்குள்ளாக்கி எல்லாத்தையும் கலைத்துப் போட்டு விளையாடுவது போஸ்ட் மாடர்ன், அதாவது பின்நவீனத்துவம். தட்ஸ் ஆல். ஆர்வமிருப்பவர்கள் மேலதிகமாக பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, கோட்பாட்டாளர்கள், பண்பு என்றெல்லாம் வாசித்துக் கொள்ளலாம். ஆர்வமில்லாதவர்கள் அப்படியொரு மேட்டரைப் பற்றி கவலைப்பட வேண்டியதேயில்லை. நமக்கு கலைஞர் ஆண்டாலும், ஜெ. ஆண்டாலும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்ன. மரக்கட்டை மாதிரிதானே வாழ்கிறோம். பின்நவீனத்துவ விஷயத்திலும் அப்படியே இருந்துவிட்டுப் போவோம். இதுவும்கூட பின்நவீனத்துவத்தின் ஒரு பண்புதான்.

இனிமேல் நம்மூர் இலக்கியவாதிகளிடமோ / அறிவுஜீவிகளிடமோ பின்நவீனத்துவம் பற்றி கேட்காதீர்கள். பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்திருக்காது. அல்லது தெரிந்தது மாதிரி சொல்வது நமக்கு பிரயோஜனமாக இருக்காது.

டாட்.
yuvakrishna-MIX 2Yuva Krishna

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: