பெண்ணியம் பேணு

1234300_437932666348776_4217135765760740609_nகொள்ளை போய்விடாதே
உன் கொள்ளையழகுப் பூவழகை
குறி பார்க்கும் குரங்குகளும்
கொத்தித் தின்ன கழுகுகளும்
மனிதமுலாம் பூசி
மனம் புசிக்க காத்திருக்கும்
புனிதம் மறந்த மிருகம் வாழும
பொல்லாத காடிது .

ஆடொன்று நனைவது கண்டு
அழுது புலம்பிக் கூச்சலிட
கூடொன்று விட்டுக் கூடுபாய்ந்து
குணம் மாறும் ஓநாய் கண்டு
சாதுவென்று நம்பிவிடாதே
சதைக் கொடுத்து வெம்பிவிடாதே.

கொண்டவன் கொண்டாட
செய்தழகு மண்பாண்டம்
கண்டவன் காணும் பொதுக்
காட்சிப்பொருளாய் மாறிவிடின்
உண்டு உருகுலைக்கக் காதலெனும் உறவொன்று தூதுவரும்
உண்மையென எண்ணிவிடாதே
மறந்தும் உள் மனதைத் தந்துவிடாதே.

தானீன்றக் குஞ்சொன்றின்
தலைக்கேதும் நோவென்றால்
ஊண் கெட்டு உறக்கமும் கெட்டு
தானும் கெட்டுத் தவித்துருகும்
தாயோடு தந்தையும் நோகும ்துயர
்தாக்க நிலை தந்துவிடாதே

தவறியேனும் எவரையும்
தலைகுனிய வைத்துவிடாதே.
………………………………….
418487_134054253403287_225976198_n-MIX 1தமிழ்பிரியன் நசீர் தமிழ் பிரியன் நசீர்

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment