RSS

சுதந்திரநாள் சிந்தனைகள்/M.m. அப்துல்லா

15 Aug

சுதந்திரம் வாங்கியது மிகப் பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்த பின்னர் என்றால் ஒவ்வொரு சுதந்திரதினத்தின் போதும் நான் சந்திக்கும் பிரச்சனை வேற மாதிரி!

என்னதான் இந்த மண்ணின் மீது அழுத்தமான காதல் இருந்தாலும் திமுககாரனாக இருந்தால், இஸ்லாமியனாக இருந்தால்அவன் காதல் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்! துரதிஷ்டவசமாக நான் இரண்டுமாகிப் போனேன். சுதந்திர தினத்தன்று நான் ஜட்டிபோடகூட மறக்கலாம். ஆனால் சுதந்திரதின வாழ்த்து சொல்ல மட்டும் நான் மறக்கவேகூடாது. வேறு ஏதேனும் வேலைகள் இருந்தால்கூட அத்தனையும் ஒதுக்கிவைத்துவிட்டு முதலில் வாழ்த்துசொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் செலவே இல்லாமல் எனக்கு பக்கத்து நாட்டு பாஸ்போர்ட் நம் ஆட்களாலேயே அளிக்கப்பட்டுவிடும்!

 • நீங்கள், “”தேர்தல் அமைப்பே தவறென்றும், தேர்தல் பாதை திருடர்பாதை, ஜனநாயகம் ஏமாற்றுப்பாதை”” என்பதை பப்ளிக்காக உரக்கச் சொல்லும் இயக்கத்தவராக இருந்து சுதந்திரதின வாழ்த்துகள் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் தேசபற்று எந்தக் கேள்விக்கும் உள்ளாகாது. ஆனால் சீனப்போர் துவங்கி அதன் பின்னரான இரண்டு பாக்கிஸ்தான் போரின் போதும், அதற்கும் அடுத்த கார்கில் போரின்போதும் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து இந்தியாவிலேயே அதிக போர்நிதி வழங்கிய மாநில அரசு என்ற பெயரை திமுக அரசு எடுத்து இருந்தாலும், அரசியல்கட்சிகளில் இந்தியாவிலேயே தனிப்பெரும் கட்சியாக அதிக போர்நிதியை அளித்த கட்சி என்ற பெயரை எடுத்து இருந்தாலும், கோட்டையில் மாநில முதல்வருக்கு தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை போராடி வாங்கித்தந்து இருந்தாலும் திமுகவின் தேசப்பற்று எப்போதும் கேள்விக்குள்ளாகப்பட்டு கொண்டே இருக்கும். திராவிடநாடு கேட்டோம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதைக் கைவிட்டுவிட்டு இன்றைக்கு இந்தியா என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிதையாமல் என்றும் இருக்கும் வழியாக “மாநில சுயாட்சி, மாநில மொழிகளுக்கான உரிமை, சமூகநீதி” என்று தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரே கட்சி திமுகதான்! இருப்பினும் இன்று வாழ்த்து சொல்ல மறந்துவிட்டால் போச்சு! அவ்வளவுதான்.

  ஆச்சா. அடுத்து நீங்கள், “இந்தியாவா? வாட் ஸ்டுப்பிட் ஐ சே!” என்று வெளிப்படையாக சொல்லும் கடவுள் நம்பிக்கையற்ற இந்து மதத்தையும் பப்ளிக்காக போட்டுத்தாக்கும் என் அருமை அண்ணன் விந்தைமனிதன் ராஜாராமன் போன்றவர்களக இருக்கலாம். கடவுள் நம்பிக்கையே இல்லாத, ஒருங்கிணைந்த தேசம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்து உங்கள் பெயர் மட்டும் ஒரு இந்துமதப் பெயராக இருந்துவிட்டால் போதும். உங்கள் தேசப்பற்று எந்தவிதமான கேள்விக்கும் உள்ளாகாது. இங்கு வாழும் நிம்மதிக்கு எந்த பங்கமும் வராது. ஆனால் என்னதான் இந்த மண்ணின் மீது காதல் இருந்தாலும், வெளிநாட்டு வேலையெல்லாம் வேண்டாம்.. ஏன் உள்ளூர் வேலையும் வேண்டாம்..எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பணியாற்றுவதே என் முழுநேர வேலை என்று அலைந்து திரிந்தாலும் உங்கள் பெயர் அப்துல்லா என்று இருந்தால் போதும்.. ஒவ்வொரு நொடியும் நான் இந்தியன், நான் இந்தியன் என்று இம்போசிஷன் போல உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தேசப்பற்று கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும்!!

  இத்தனைக்கும் மத்தியில் இப்படி நினைப்பவர்கள் மீதுதான் எரிச்சல் வருகிறதே தவிர இந்த மண்ணின் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. எத்தனை மதங்கள்!! எத்தனை மொழிகள்!! எத்தனை கலாச்சாரங்கள்!! எத்தனைச் சித்தர்கள்! எத்தனை சூஃபிகள்!! எத்தனை ஜீவசமாதிகள்!! அவை உருவாக்கி வைத்து இருக்கும் எத்தனை ஆன்ம ஜீவஅலைகள்!! ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஆன்ம அமைதியைக் குடுக்கும் உலகின் ஒரே நிலம் என் நிலம்! மக்கள் சிலரின் குறைக்காக மண்ணை வெறுக்க முடியாது. திருத்துவதே எங்கள் முழுநேர வேலை. தொடர்ந்து முயற்சிப்போம்.

  # இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
  M.m. abdullaa
  (புதுகை அப்துல்லா )M.m. AbdullaM.m. Abdulla

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: