RSS

உரத்த சிந்தனை !

22 Aug

உரத்த சிந்தனை !

அழுக்குகளின் சுமை களைந்து, இலேசாகி, உயரப் பறக்கும் மனசுகளின் கண்களுக்கு, இந்த பூமிப்பந்து; வெடித்துச் சிதறி வீழ்ந்த ஒரு மண்ணுருண்டை மாத்திரமே தானென்றும், அதில் வாழும் உயிரினம் அத்தனையும்; வடிந்து வீழ்ந்து வெடித்த விந்துத் துளியின் சதை உருண்டைகள் மாத்திரமே தானென்றும் விளங்க வரும் !
————————
உரத்த சிந்தனை – 2

பனி உறைய மலை முகடுகளும், மழை பொழிய கார் மேகங்களும், பசி தீர்க்க கனி வகைகளும், தாகம் தீர்க்க அருவிகளும், மனம் லயிக்க மலர் தோட்டங்களும், அழகு ரசிக்க அற்புத பறவைகளும், இடம் ஒதுங்க எழில் குடில்களும், இனம் பெருக்க பெண் துணையும், அதில் பூத்த மலர் பார்த்து மனம் மகிழ்ந்து, வாழும் வாழ்வை மணமாக்க, இயற்கையாம் பேரின்ப கடவுளின் நினைப்பையும் தன் எண்ணத்தில் கொண்ட, அன்றிருந்த இன்ப நிலை, அற்புத நிலையன்றோ, ஆண்டவனும் உகந்த அழகான நிலையன்றோ?

இது நிலையில், ஆண் என்பவன், வலுவும், வேகமும், வேட்டைத் திறனும், வேட்கை தீவிரமும், பகுத்தறியும் திறனும் கொண்டவனாக இருக்கும் நிலையிலேயே புருஷ இலட்சணங்களுக்குட்பட்டவன் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆணின் கடமை, பலகீனப் பெண்ணை பாதுகாப்பதும், ஏற்றெடுத்த பெண்ணை ஏற்றமுடன் வைத்திருப்பதும்தான். வித்துக்களை விதைப்பதும், நல்முத்துக்களை அறுவடை செய்வதும், அவைகளுக்குண்டான அத்தனையையும் தன் நிலைக்கொப்ப செய்து கொடுப்பது என்பதும் ஆதாரக் கடைமை எனும் நிலையில், சார்ந்திருக்கும் உறவுகளின் தேவைக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்வது ஆணுக்கான உயர்வு நிலை. ஆண் என்பவன், பாதுகாப்பின் அடையாளம், பாதுகாப்பவன் என்கிற நிலையில், இயற்கையே வரம் கொடுத்த சற்றே ஒவ்வாத உடல் கூறுகளையும், போலி சமிக்சைகளை வெளிப்படுத்தும் திறனும் கொண்டவன் அவன், ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் அடங்காத மனசுள்ளவன், தன்னை மயங்க வைத்த மயக்கங்களை திடமாக இன்னொரு நாளில் எட்டி உதைப்பவன். உயிர் கொல்லும், பேரலைகளின் ஆழம் தெரிந்ததினால், நீந்தி கரை சேருபவன், தன்னைச் சார்ந்தவரையும், மற்றவரையும் கரை சேர்ப்பவன். அவன் பூனை நடை நடக்கும் ஒய்யாரனாய் இருக்க வேண்டுமென்பதில்லை, களைத்துப் போன ஒரு சிங்கத்தின் தளர்ந்த நடை கொண்டவானாக இருந்தாலும் போதும், அதுவே, அவன் ஆண்மையின் பேரழகை காட்டிக் கொடுத்து விடும் !

—————————–
உரத்த சிந்தனை – 3

பூமிப் பெண்ணின் பெண் மகவுகள்தான் உலகின் எல்லா பெண்ணினமும், அவள் தலை தாயாயிருந்து விருட்சங்களையும் உலகு வேண்டும் தாவரங்களையும் தன்னில் பிரசவிக்கிறாள் என்றால், உயிர்களை பிரசவிக்கும் செயலை ஏனைய எல்லா பெண்ணினமும் செய்து கொண்டிருக்கின்றன. இது காலத்தை கட்டமைத்தவனின் உலகியல் நோக்கு. மாற்றவோ மறுக்கவோ முடியாத நிபந்தனைகளாக இருப்பதால், அவ்வழியேதான் மண்ணின் மனிதர் வழி என்றிருக்கையில், கரு சுமக்க பெண்ணும், வாழ்வு சுமக்க ஆணும், குலம் தழைக்க குழந்தைகளும் என்றிருக்கும் நிலையே இயற்கை நிலை. இந்நிலையில்; சுமந்தேனே, பெற்றேனே, வளர்த்தேனே என்பதெலாம்; பெண்ணிணம் அவர்களாக ஏற்றுக் கொண்ட நிலையல்ல, மாறாக, படைப்பில் சரிவிகித தன்மைகளுடன் வரையறை செய்யப்பட்டவை. இன்றைக்கு; அதிலிருந்து விலக்கு வேண்டுவது போல், அறிவு வீக்கம் கொண்ட சில அம்மணிகள் விம்மி அழுவதும், வீராப்பு காட்டுவதும், வீண் கோஷம் எழுப்புவதும், என்ன வேண்டுமாய்? அங்கவிடங்கள் அங்கிங்கு நினப்பது போல் மாறி விடுமா, இல்லை பிரசவ வலி ஆண்களுக்கு மட்டுமே என்றாகி விடுமா. இயற்கையின் நிலையை, இறைவனின் திறத்தை, போராட்ட நிறங்களால் மாற்றி விடத்தான் முடியுமா. பெண்கள் இயற்கையோடு இயைந்த இயல்புகள், அதன் ஊடாகத்தான் அடியெடுத்து வைக்க வேண்டுமேயொழிய எதிராய் பயணிக்க முயல்வது, நளினங்களை பாழ்படுத்தி விடும், பெண்களின் வன்மையான நிலைப்பாடுகள், உலகின் மென்மையான இன்னொரு பகுதியை கண்ணுக்கு காட்டாமல் மறைந்து விடவும் கூடும்
(இன்னும் வரும்)

1381408_312904612185588_1303046698_nஆக்கம் ரஹீமுல்லாஹ் முஹம்மது வாவர்
நன்றி
960130_338359126306803_994058166_nRaheemullah Mohamed Vavar

Advertisements
 

Tags: , , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: