RSS

நகைச்சுவை பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் கிருபானந்த வாரியார்

25 Aug

10632697_696379070440825_9061653783014916592_nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் …
மனதில் நிற்கும் மாமனிதர் !
இந்துமதக் கொள்கைகளில் முத்தெடுத்து
அதை
நல்லதமிழ் சொல்லெடுத்து
மக்களுக்கு வழங்கியவர் !
எந்த மத மக்களுக்கும் சொல்லால் செயலால் தீங்கிழைக்காத மனிதநேயப் பண்பாளர் !
தன் வாயினிக்கும் வார்த்தைகளால் மக்களை வாஞ்சையோடு வாரியணைப்பவர் !

ஒருமுறை வாரியார் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
முன்னால் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் அடிக்கடி வளைந்து நெளிந்து தன் முதுகை சொறிந்து கொண்டிருந்தார்.
அதை கவனித்து விட்ட வாரியார் அந்த மனிதரை நோக்கி , “வீட்டில் சண்டையா ? மனைவியோடு தகராறா ?” என்று கேட்டார். அந்த மனிதருக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும் உண்மையை மறைக்காமல் ” ஆமாம் ” என்று ஒத்துக் கொண்டார். ஆனாலும் அவருக்கு ஆச்சரியம்… வாரியார் சுவாமிகள் எப்படி அதை கண்டு பிடித்தார் ? என்று.

வாரியாரே அந்த சந்தேகத்தை தீர்த்தும் வைத்தார்.
” ஒரு குடும்பத்தில் கண்வன் மனைவி ஒற்றுமையா இருந்தா கணவன் ஆரோக்கியமா இருப்பான். காலையில் கணவன் குளிக்கும் போது மனைவி முதுகு தேய்த்து விடுவாள். அதனால் முதுகு அரிக்காது. பொது இடங்களில் இப்படி முதுகை சொறிய வேண்டிய அவசியமும் வராது ” என்றார். அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது.
இப்படி சின்ன சின்ன விசயங்களையும் நுணுக்கமாக கவனித்து தன் நகைச்சுவை பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் கிருபானந்த வாரியார்.
கட்டுரை ஆக்கம் : அபு ஹசீமா வாவர்
Abu_HaashimaAbu Haashima Vaver

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: