முகநூலில் ரஹீம் கஸாலி கஸாலி ஸ்டேட்ஸ்

பணமும், மதுவும், அரசியலும் நல்ல நண்பர்களுக்கிடையே நுழைந்தால் அந்த நட்பில் விரிசல் விழுந்துவிடும்.

முன்பெல்லாம் பிரசவம் என்றால் பிரசவம் மட்டுமே. சுகப்பிரசவம், சிசேரியன் என்பதெல்லாம் மருத்துவமனைகள் வந்த பின்பு தான்.

கருவுற்றிருக்கும் மனைவி ஒரு உயிரை மட்டும் தான் வயிற்றில் சுமக்கிறாள் வெளியே தெரிந்து. ஆனால் கணவனோ இரண்டு உயிரையும் நெஞ்சில் சுமக்கிறான் வெளியே தெரியாமல்.

காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னை அப்டேட் செய்து கொள்வதால்தான் 375 – வயதாகியும் இன்னும் சென்னை பொலிவுடன் திகழ்கிறது.

திருமணத்தில் தாலி கட்டும் முகூர்த்த நேரத்திற்குக்கூட லேட்டா வருபவர்கள், சாப்பாட்டு பந்திக்கு மட்டும் கரக்டான டைமுக்கு வந்துடுவாங்க.

பூனைக்கு உடம்பு சரியில்லாம போனால் எலிகள் எகத்தாளம் செய்யுமாம்.

கதை இருக்குன்னு சொல்லி கதையே இல்லாம படம் எடுத்து திட்டு வாங்கறதை விட, கதை இல்லேன்னு தைரியமா சொல்லி ஆனால் படத்தில் கொஞ்சம் கதையை வைத்து பாராட்டு வாங்கிடலாம்.

—————————————–
ஏண்டி ஒரு டீ போட்டு தா

ஏங்க வேலை வெட்டிக்கு போகாம இப்படி வீட்ல படுத்துக்கு பேஸ்புக்கே கதின்னு கிடந்தா நல்லாவா இருக்கு. குடிக்கற டீக்காவது வேலைக்கு போகலாம்ல. பால் என்ன சும்மாவா வருது?

போடி வேலையாம். இங்கே பாரு, என் ஸ்டேட்டஸ் 500 லைக் வாங்கிருக்கு. இப்ப பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போட்ட ஸ்டேட்டஸை பாரு அதுக்குள்ள 100 லைக் வந்திடுச்சு. போட்டோ போட்டேன்னா 5000 லைக் சாலிடா வருது. நான் பிரபலமாகிட்டேன்டி.

இந்த பிரபலத்தை வச்சு என்னங்க செய்ய முடியும்?

என்ன செய்ய முடியுமா?, என்னன்னவோ செய்யலாம்டி. வேலையாயாம் வேலை.

என்னன்னவோ செய்யலாம்ன்னா அந்த லைக்ல 500 எடுத்துட்டு போயி ஒரு கிலோ அரிசி வாங்கிட்டு வந்துடுங்க. அப்படியே 100 லைக்கை எடுத்துட்டு போயி கால் லிட்டர் ஆயில் வாங்கிடுங்க. அப்புறம் கத்தரிக்காய், தக்காளியும் வாங்கிடுங்க. ஆங் சொல்ல மறந்துட்டேன். இதுலேருந்து ஒரு அம்பது லைக்கை எடுத்துட்டு போயி முக்கத்துல இருக்கற டீ கடையில கொடுத்து நீங்க கேட்ட டீயை அங்கேயே குடிச்சிக்கங்க.

ங்கே

(எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம்)
—————————————-
நான் முதன்முதலில் சென்னைக்கு வந்தது 1996- ஆம் ஆண்டில்தான்.
kazaliரஹீம் கஸாலி கஸாலி

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment