RSS

பணம்தானே என்று அலைந்து திரிந்து சேர்த்தல்

09 Sep

10349874_731075470297151_1911613039416696049_nபணம்தானே என்று அலைந்து திரிந்து சேர்த்தல் ஏதோ ஒன்றை இழக்கத்தான் வேண்டியது உண்மையான ஒன்று ,
குடும்பத்தையோ , நிம்மதியையோ , பாசத்தையோ அல்லது உடல் நலனையோ ஒன்றை இழந்துதான் சேர்க்கவேண்டியுள்ளது இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்புகள் இல்லை ,
நாம் எவ்வளவு பெரிய பணம் படைத்தவராக இருப்பினும் ,
இதையே நானும் தொடர்ந்துள்ளேன் !
ஆனால் கடந்த சில மாதங்களில் பணம் பாடாய் படுத்தி ஒரு மெய்யுணர்வு உள்ளுக்குள்ளான விதையானது ,
உதாரணமாக மூன்று கறவை மாடுகள் வளர்த்து எனது பிள்ளைகளோடு பராமரிப்பு செய்த போதுதான் பணத்தைவிடவும் வாழ்க்கை பயணம் புரிந்தது உயிரோடு உறவாடும்போது உண்மையில் அன்பு மனிதர்களைவிடவும் அதிகம் !

இதில் ஆச்சரியம் என்ன ?
பல லட்சங்களை முதலீடு செய்த தொழில் ,
பணம் என்றே ஓடியது பலரது அன்பை இழக்கத்தான் செய்தது ,
கௌரவ வேடம் போட்டுக்கொண்டு பலர் போலியான வணக்கத்திற்கு ஏங்கி வாழ்வையும் இழப்பவர்கள் ஏராளமாக உள்ளனர் ,
வெறும் ஒருலட்சம் முதலீடு முப்பது சென்ட் நிலம் சிறிய கொட்டகையில் மாதம் பதினைந்தாயிரம் கிடைத்துள்ளன தினமும் வீட்டிற்கு குறைந்தளவு மூன்று லிட்டர் தூய்மையான பசும்பால் பிள்ளைகளின் தோழமை கன்று குட்டிகள் மனைவியின் அரவணைப்பும் அதிகமாகவே உள்ளது பெற்றோர்களின் அன்பும் நித்தமும் !
வாழ்வை வாழனும் முதற் முயற்சியோடு இன்னும் பல உறவுகளை சேர்க்கப்போகிறேன் !
1554462_677177999020232_5383148709311809901_nSathiyananthan Subramaniyan Banumathi

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: