RSS

சிவிட்டவேக்கியா, இட்டாலி – Civitavecchia, Italy /அன்புடன் புகாரி

18 Sep

10562966_849953898363118_903748553101389228_n
இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா? என்பதற்கான பொருளை முகநூலில் நண்பர் @Raphel Canada கமுக்கமாகக் கண்டுபிடித்துவிட்டார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

பயணம் முடிவானதும், ட்ரான்சாட் என்ற விமானம் மூலம் டொராண்டோவிலிருந்து ரோம் – இட்டாலி செல்கிறோம் என்று என் மனைவியிடம் சொன்னேன். அவருக்கு ஒரே உற்சாகம். அப்புறம்? என்றார்.

அங்கே Civitavecchia என்ற துறைமுகத்துக்குச் சென்றால் நமக்கான உல்லாச சொகுசு கப்பல் காத்திருக்கும் என்றேன். இதென்னங்க எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட முடியல, இதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றார்.

அது ரொம்ப சுலபம். Civitta ஸ்வீட்ட vecchia வெச்சியா என்று முதலில் பிரித்துக்கொள். ஸ்வீட்ட வெச்சியா என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டால், பின் சிவிட்டவேக்கியா என்பது தானே வந்துவிடும் என்றேன். அப்போதிருந்து ஸ்வீட்ட வெச்சியா ஸ்வீட்ட வெச்சியா என்று ஒரே மகிழ்ச்சி மனைவிக்கு.

பயணம் முடிந்ததும் மனைவியிடம் கேட்டேன், ஸ்வீட்ட வெச்சியா? எங்கே வெச்சே? என்று. நெஞ்சுக்குள்ள வெச்சேன் நெனப்புக்குள்ள வெச்சேன் பத்திரமாய்ப் பலகாலம் நிச்சயமா இருக்கும் நன்றி நன்றி என்றார்.

ஆம் இந்த உல்லாச சொகுசு கப்பல் பயணம் எங்கள் கண்களிலும் கருத்தினிலும் ஸ்வீட்டை வெச்சிருச்சி மிகவும் நிறைவான ஓர் பயணம் இது எங்களுக்கு.

இனி சிவிட்டவேக்கியா இட்டாலிக்குப் போன கதையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்
flower13
1

2

இட்டாலியில் வேடிகன் மற்றும் அருங்காட்சியகம் கண்டது ஒரு வியப்பு என்றால் அதைவிட கொலீசியம் – திறந்தவெளிக் கலையரங்கம் கண்டது மகா அதிசயம்.

இந்தக் கலையரங்கத்தை 2000 வருடங்களுக்கு முன் பிரமாண்டமாய்க் கட்டி இருக்கிறார்கள். இதைக் காணும்போது போரும் கேளிக்கையுமாகவே ரோம் இருந்திருக்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.

இயற்கையால் சிதிலமடைந்த தூண்களைக் காணும்போது அதிசயமாய் இருந்தது. படிகளெல்லாம் ஏறுவதற்கு வசதியாய் இல்லை. குதிரைகளைக் கொண்டே ஏறி இருப்பார்களோ என்று ஐயப்பட்டேன்.
163084_181057961919385_7644604_n-MIX
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/

 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: