RSS

ஒரு நாள் விவசாயியாக வாழ்ந்துபாருங்கள் !

22 Sep

10703723_737811436290221_8331567506316245877_nவிடியற்காலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை உள்ள உத்தேச வேலைகளை பாருங்கள் ,

விடியலில் குடம் கொண்டு தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் ,
மாடுகளை மாற்றி கட்டி தண்ணீர் வைத்து தீனியிடுவது பிறகு தொழுவத்தை சுத்தம் செய்வது ,
பின் வயலில் நீர் கட்டுவது மாடுகளுக்கு தீனி கொண்டு வருவது ,
காலை உணவு ,

உடன் வயலில் உள்ள வேலைகள் அனைத்தும்
உதாரணமாக உழவு செய்தல் , களை பிடுங்குவது , வரப்பு வாய்க்கால் சீவுதல் , பாத்தி அமைத்தல் , உரமிடுதல் , விதையிடுதல் , வேலியமைத்தல் , மருந்து தெளித்தல் , அருவடை செய்தல் , இப்படி தொடர்ந்தே நகரும் நாளில் உருமத்தின் உணவு ,

இருப்பதை குடித்து மாடுகளின் மேய்ச்சலோடு வேப்பமர நிழல் ஓய்வு அந்தி சாயா நேரம் விட்ட பணி தொடர்ந்தோடும் சூரியன் மறையும் வரை ,

பின்பு பால் கறப்பு , கஞ்சி வைத்தல் தீவனமிடுதல் ,
இப்படி தொடரும் பணிகளோடு தூக்கம் வரும் வரை அறுவடை பொருட்களையும் சீர் செய்து தனக்கே அறியாமல் உறக்கம் !

இதற்கு கூலியில்லை விளைச்சல் எப்படியோ அப்படியே ,,,,,
நித்தம் கிடைத்த பால் வருமானம் நூறும் நூறு மில்லி பாலும் மிச்சம் !

இப்படி விவசாயி உழைத்தும் பின்பு ஏன் துன்பம் ?

மழை இல்லை என்பதை விடுங்கள் மழைநீர் சேகரிப்பு ஏரிகளையும் காணோம் அன்று மனித உழைப்பில் உருவாக்கிய ஏரி குளங்களையும் நீர் வரும் ஓடைகளையும் இன்று இயந்திரங்களை கொண்டு அழித்துவிட்டு நிலத்தடி நீரையும் பணமாக்கி பார்ப்பது , விளைபொருட்களின் விலை நிரந்தரம் இல்லாதது ,
இப்படி பெரிதான குறைகளை அடுக்க முடியும் இதற்கு இந்த நூல் போதாது ,
ஆனால் ,
வெகுவிரைவில் காலம் மாறி விவசாயிகளின் பின்னால் இந்த அரசாங்கமும் கெஞ்சிடத்தான் போகிறது !
10646998_724968177574547_8591366306893964048_nSathiyananthan Subramaniyan Banumathi
எங்கள் தோட்டத்தில் இயற்கையாக விளைந்த வெள்ளரிபழம் ஆறு கிலோ எடையுள்ளது எங்கள் எடை மெசினுக்கும் தூக்க முடியாம தினருது ,,
156087_740362289368469_2586515854071408091_n
Sathiyananthan Subramaniyan Banumathi

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: