RSS

பூனைகள்.

23 Sep

cat-breedsகுழந்தைகளுக்கு
அவை
நடமாடும் பிரியங்கள்.
மழலை தேசத்தின் ஐந்தறிவுத் தேவதைகள்.

பாட்டிகளுக்கு அவை
சமையலறைச் சாத்தான்கள்.
மின்னல் வேகத்தில்
மீன்பானை உருட்டும்
எரிச்சலின் எஜமான்கள்.

செடிகள் நட்டு வளர்க்கும்
வீட்டம்மாவுக்கு
அதன் கழிவுகள்
செடிகளை அழிக்குமோ எனும்
தாவரக் கவலை.

வார இறுதிகளில் மட்டும்
வீட்டை வெளிச்சத்தில் காணும்
அலுவலக அப்பாக்களின்
ரிமோட் தேசத்துப் பூனைகள்
டிஸ்கவரி தாண்டி வெளிக்குதிப்பதில்லை.

வீடுகளிலேயே வசித்தாலும்
வீடுகள்
பூனைகளுக்குச் சொந்தமாவதில்லை
எனினும்
வீடுகள் இல்லாத கவலை
பூனைகளுக்கு இல்லை.

அதன் கவலையெல்லாம்
பூனையைப்
பூனையாய்ப் பார்க்கும்
மனிதர்கள் இல்லாதது தான்.


சேவியர்   Joseph Xavier DasaianJoseph Xavier Dasaian Tbb
***************************************************

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: