RSS

சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம்

29 Sep

சாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம் – அமெரிக்க யேல் பல்கலைகழகம்,போர்சுகல், லிபியா விஞ்ஞானிகள் பங்கேற்பு- பத்திரிக்கைகள் பாராட்டு

.இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் ஆராய்சி மற்றும் முதுகலை விலங்கியல்; துறை ஏற்பாடு செய்த உலக அளவிளான விஞ்ஞானிகள் கலந்து கொண்ட ஒரு நாள் சாவதேச மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்க யேல் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியரும் அமெரிக்க மருந்தியல் துறையின் ஆலோசகருமான டாக்டர் அலாவுதீன் கலந்து கொண்டு இ;ன்றைய மருந்தியல் துறையில் உயிர் பொருள்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
லிபியா அல்பதா பல்கலைகழகத்தின் பேராசிரியர் முனைவர் லியாக்கத் அலிகான் இன்றைய மருந்தியல் துறையும் உயிர்pயல் துறையும் என்ற தலைப்பில் மாணவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து போர்சுகல் பல்கலைகழகத்தின் விஞ்ஞானி ராஜா பாசிகளின் உணவு மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார். காரைக்குடி அழகப்பா பல்கழைகழக அரசு கலை அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறை தலைவர் அருன்குமார் கடல்பாசிகளின் சிறப்புகளை எடுத்துறைத்தார். நிகழ்சியின் முதல் நிகழ்வாக கல்லூரி விலங்கியல் துறை தலைவர் முகமது பாருக் வரவேற்புறையாற்ற கல்லூரிமுதல்வார் ரஜபுதீன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் தாளளர் ஐபருல்லாகான் , தலைவர் முகமது சுபைர், நிர்வாக உறுப்பினர்கள் அஜ்மல் கான் ,நயினா முகமது ஆகியோர் மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்திய பேராசிரியர்கள் முகமமது பாருக் ,ஆபிதீன் ,பாபு செல்வம் மற்றும் குழவினரை வாழ்திப்பேசினர்.
மாநாட்டின் ஆராய்சி கட்டுரைகளின் தொகுப்பை சிறப்பு விருந்தினர் அமெரிக்க யேல் பல்கலைகழக விஞ்ஞானி அலாவுதீன் வெளியிட அனைவரும் பெற்றுக்கொண்டனர் .கருத்தரங்கில் தமிழகத்தின் திருச்சி பாரதிதாசன், திருநெல்வேலி மனோன்மனியம், காரைக்குடி அழகப்பா,மதுரை காமராஜர், சென்னை உட்பட பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் கீழக்கரை தாசிம்பீவி, இராமநாதபுரம்,காரைக்குடி ,பரமக்குடிஅரசு கல்லூரிகள்,திருச்சி ஜமால்முகம்மது உட்பட பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஆராய்சி மாணவர்கள் கலந்துகொண்டு ஆராய்சி கட்டுரைகள் சமர்பித்தனர். இவர்களில் திருச்சி ஜமால்முகம்மது கல்லூரி ஆராய்சி மாணவி சுகந்தி மற்றும் அழகப்பா பல்கலைகழக தொண்டி ஆராய்சி மாணவர் ஜெயராஜ் ஆகியோர்களின் கட்டுகரைகள் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
போ}ஸ்டர் சமர்பித்த மாணவர்களில் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மாணவர்கள், பொமிசா மற்றும் சூர்ய பாண்டி ,ஆகியோருக்கு சிறந்த கட்டுரைக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மாநாட்டின் இறுதி நிகழ்வாக அழகப்பா பல்கலைகழக தொண்டி கடலியல துறையின் பேராசிரியர் ரவிக்குமார் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளரும், ஒருங்கினைப்பாளருமான கேப்டன் ஆபிதீன் நன்றி கூறினார்; .
ஆஇந்த பண்ணாட்டு கருத்தரங்க நிகழ்வுகளை தினகரன், த இந்து (தமிழ்), தினத்தந்தி,தினமலர் உள்ளிட்ட பத்ரிக்கைகள் பாராட்டி எழுதியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
news19092014_13news19092014_16news19092014_14news19092014_11news19092014_15news19092014_12
நன்றி
Source:http://www.ilayangudi.org/ily/news.php

 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: