RSS

கவிதை எழுத… பரப்பரப்பவரா நீங்கள்?

30 Sep

1926768_733669483369464_6327863217158497683_nகவிதை எழுத…
பரப்பரப்பவரா நீங்கள்?
பேனாவை மூடிவைத்துவிட்டு
நல்ல கவிதைத் தொகுப்புகளில்
முழுகி முத்து எடுங்கள் முதலில்!

முழுகும் ஆழம்
உங்களுக்கு சிரமமும் தரலாம்.
அந்த சிரமம்தான்
நீங்கள் எழுதப் போகும்
நாளைய கவிதைகளின்
அஸ்த்திவாரம்!

‘வைரமுத்துவை வாசித்திருக்கிறேனே!’
‘கவிக்கோவை வாசித்திருக்கிறேனே!!’
என்பதெல்லாம் போதாது.
போதவே போதாது.

குளத்தில் முழுகியெழுவதற்கும்
கடலில் முழுகி எழுவதற்கும்
நிறம்ப வித்தியாசம் உண்டு.

இன்றைய
தமிழ்க் கவிதையின்
நீள, அகலம் + ஆழமும்
ஏகத்துக்கும் அபரிமிதமானது.
உலக கவிதைகளோடு
போட்டிப் போடக் கூடியது.

நல்ல நூற்கள் எனும் கடலில் முழுகி
அறிதலில்… புரிதலில்….
குறிப்பாய் நுட்பத்தில்….
முத்தெடுங்கள்!

கவிதை தானே கைகூடி
தானே பின் தொடரும்!
நீங்கள் எழுதும் வரிகளெல்லாமும் கூட
கவிதையாய் பரிணமிக்கும்
10494782_688808787855534_3669785479586600242_n
Taj Deen

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: