RSS

Monthly Archives: October 2014

வனப்பையும் உடல் வலுவையும் பிள்ளைகளுக்குப் பங்கு வைத்துக் கொடுத்த பெருமிதத்தில்

10698702_730811763664222_8335463203986563747_nவனப்பையும் உடல்
வலுவையும்
பிள்ளைகளுக்குப்
பங்கு வைத்துக் கொடுத்த
பெருமிதத்தில்
சுருக்கங்களை
முகத்தில் வரைந்து கொண்டு
முறுவலித்துக் கொண்டிருக்கிறார்கள்
வீடுகள் தோறும்
மூதாட்டிகள் !

எப்போதுமே
பிள்ளைகளை
வெறுக்கத் தெரியாத
பாசத் தாய்களுக்கு
பிள்ளைகளின்
பாராமுகம் கூட
அழகாகவே தெரிகிறது !
Read the rest of this entry »

Advertisements
 

இவன் போல பிள்ளைக்கு பெண் இன்னுமா கிடைக்கல!

1901428_884343221578539_6294955715836377121_nநன்றி மறப்பது நன்றன்று…

நண்பர்களின் பாசமது
விளங்கியுள்ளது;
சதா அடித்து கொண்டிருந்த
அக்காளின் பாசக் கண்ணீரில்
மூழ்கிப்போனது புரியுது;

அம்மாவின் கெஞ்சலிலுள்ள
அடி நாதம் உணர்த்துது;
அத்தாவின் அடாவடி
அறிவுரையின் அம்சங்கள் பளிச்சிடுது;

விட்டுவந்தப்பின்னேதான்
கனமானது மனது;
உறவுகள் சுகமாக தெரியுது;
Read the rest of this entry »

 

கத்தி கத்தி பேசும் கத்தி – யுவகிருஷ்ணா

kaththiகொல்கத்தா ஜெயிலில் இருந்து கத்தி தப்பிக்கும் முதல் காட்சி. சட்டென்று ‘முப்பது நிமிடங்களுக்கு முன்னால்’ போடும் ட்விஸ்ட் கொடுக்கும் லாவகம். ‘அடடே! துப்பாக்கியை மிஞ்சிடும் போலிருக்கே’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், மசமசவென்ற திரைக்கதையால் அப்படியே சரிய வைத்துவிட்டார் முருகதாஸ். ஜீவானந்தத்தை கதிரேசன் முதன்முதலாக பார்க்கும் காட்சி எப்படிப்பட்ட ப்ளாக். ஆனால் ரொம்ப சாதாரணமாக ‘அட என்னை மாதிரியே இருக்கானே?’ என்று 1965ல் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ டபுள் ஆக்‌ஷன் ரோல் சீன் மாதிரி ரொம்ப சப்பையான பிரசண்டேஷன். கத்தியும் ஹீரோயினும் முதன்முதலாக சந்திக்கும் காட்சிகள். கத்தியின் காமெடி போர்ஷன் எல்லாம் எவ்வளவு ஜவ்வென்று மனசாட்சியுள்ள நீதிபதி குன்ஹா படம் பார்த்தால் நேர்மையாக தீர்ப்பளிப்பார்.

ஜெயிலுக்குள் ப்ளூப்ரிண்ட் பார்த்து கத்தி ஸ்கெட்ச் போடும் பர்ஸ்ட் சீன் செமை என்றால், அதே கத்தி செகண்ட் ஹாஃபில் மெட்ராஸின் ப்ளூப்ரிண்டை கேட்கும்போது தியேட்டரே வெடிச்சிரிப்பில் வெடிக்கிறது. அந்த ப்ளூபிரிண்ட் காமெடி முடிவதற்குள் அடுத்த காமெடி. மொத்தமாக போய் எல்லாரும் தண்ணீர் வரும் பிரும்மாண்ட குழாய்க்குள் அமரும் போராட்டத்தை தொடங்குகிறார்கள். இந்த ஐடியா மட்டும் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பே ‘லீக்’ ஆகியிருந்தால், மக்கள் முதல்வரை கர்நாடக அரசு விடுதலை செய்யக்கோரி இதே போராட்டத்தை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தலைமையில் திரையுலகினர் நடத்தியிருப்பார்கள்.
Read the rest of this entry »

 

Tags: ,

வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்

220px-waheeda_rehmanவஹிதா ரஹ்மான்

வஹிதா ரஹ்மானுக்கும் நாகூருக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. இதனைப் படிப்பவர்கள் நான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடு’வதாக நினைக்கத் தோன்றும்.

அகில இந்திய அளவில் கனவுத் தாரகையாக, இந்தி திரைப்பட உலகில் கொடிகட்ட பறந்த அந்த பிரபல பத்மஸ்ரீ பத்மபூஷண் நடிகைக்கும், தென்னிந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் இருக்கும் சிறிய ஊரான நாகூருக்கு அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும்?

இதற்கு ஒரு சின்ன ‘ப்ளாஷ்பேக்’ தேவைப்படுகிறது.

என் இளம்பிராயத்தில் நான் முதன் முதலாக பார்த்த இந்திப்படம் “பீஸ் சால் பாத்”. திருச்சிக்குச் சென்றிருந்தபோது மதுரை ரோட்டில் அமைந்திருந்த ராஜா திரையரங்கில் அப்படத்தை பார்த்த அனுபவம் என் மனதில் ஒரு ‘திகில்’ உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இரவில் உறங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த படத்தில் வெள்ளை உடை அணிந்து பாட்டு பாடித்திரியும் அந்த பெண் பேயின் நினைவு கனவில் வந்து என்னை பயமுறுத்தும். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தபடி அழுவேன்.
Read the rest of this entry »

 

Tags: , ,

பதவியை பலி வாங்கிய 2 தவறுகள்

10712967_940974489263461_4163940456340528452_nயுகோ ஒபுச்சி. ஜப்பான் அமைச்சர். தொழில், வர்த்தகம் மின்சாரம் ஆகிய 3 முக்கிய துறைகளையும் கைவசம் வைத்திருந்தவர்.

நாட்டின் முதலாவது பெண் பிரதமராக வருவார் என கணிக்கப்பட்டவர்.

சற்று முன் ராஜினாமா செய்துள்ளார்.

1. அரசியல் நன்கொடையாக வசூலித்த பணத்தில் பெரும் பகுதியை தனக்கு மேக்-அப் சாதனங்கள் வாங்க செலவிட்டார்.

2. தன் தொகுதியில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு டோக்கியோவை சுற்றிக் காட்ட பணம் செலவிட்டார்.

இந்த 2 புகார்கள் அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளன.

வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சி கேவலமானது என்பது ஜப்பானியர் நம்பிக்கை.

1509273_822563767771201_2089649643210206418_nசெய்தி தந்தவர் கதிர் வேல் அவர்கள் Kathir Vel

 

வறுமை – தமிழ் பிரியன் நசீர்

10728518_471933049615404_16137083_nஅகல எல்லை
நீளங்களையும்
அங்குலமங்குலமாய்
உலகை அளவெடுத்து

பகலும் இரவும்
நூல் கோர்த்து
பார்த்து பரிணாம
ஊசியதால் நெய்து

பல் வண்ண
ஆடையணிகலன்களை
பரப்பி மேல் பூமி போர்த்தி
நலம் செய்வோன்
நாமே என்றான்

பெயரையும் புகழையும்
பிச்சைக் கேட்டு
போதைத் திருவோட்டினை
கையிலேந்தி
Read the rest of this entry »

 

உகாண்டா

உகாண்டாவில் இந்தியர்கள்.

உகாண்டாவில் இந்தியர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால்
இருப்புபாதை அமைப்பதற்காக 125 ஆண்டுகளுக்கு முன்பாக
கூலிகளாக அதிகமாக குஜராத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். இந்த இருப்புப்பாதை கென்யா நாட்டிலுள்ள மொம்பாசா எனும் துறைமுகப் பட்டினத்தை இணைக்கிறது.
உகாண்டாவில் இருந்துதான் சகாரா பாலைவனத்தையே வளம் கொளிக்கச்செய்யும் நைல் நதி உருவானாலும் கடல்வழி மார்க்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்புப்பாதை பணிகள் முடிந்த பிறகு இந்தியர்கள் உகாண்டவிலேயே தங்கிவிட்டார்கள். அப்போது உகாண்டாவும் பரந்து விரிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிமைனாடாகவே இருந்ததால் பிரச்சனைகள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்.
Read the rest of this entry »

 

Tags: