RSS

உகாண்டா

11 Oct

உகாண்டாவில் இந்தியர்கள்.

உகாண்டாவில் இந்தியர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால்
இருப்புபாதை அமைப்பதற்காக 125 ஆண்டுகளுக்கு முன்பாக
கூலிகளாக அதிகமாக குஜராத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். இந்த இருப்புப்பாதை கென்யா நாட்டிலுள்ள மொம்பாசா எனும் துறைமுகப் பட்டினத்தை இணைக்கிறது.
உகாண்டாவில் இருந்துதான் சகாரா பாலைவனத்தையே வளம் கொளிக்கச்செய்யும் நைல் நதி உருவானாலும் கடல்வழி மார்க்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்புப்பாதை பணிகள் முடிந்த பிறகு இந்தியர்கள் உகாண்டவிலேயே தங்கிவிட்டார்கள். அப்போது உகாண்டாவும் பரந்து விரிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிமைனாடாகவே இருந்ததால் பிரச்சனைகள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்.

உகாண்டாவுக்கு சுகந்திரம் 1962 ல் கிடைத்தபிறகு பிரச்சனைகள் சிறிது சிறிதாக ஆரம்பித்து 1972 ல் இடி அமீன் ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். அவர்கள் மிகச்சிறிய அளவினரே இந்தியாவிற்கு திரும்பினர் மற்றவர்யாவரும் பிரிடன், அமரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

1979 ல் இடி அமீன் வீழ்ச்சிக்குப் பிறகு 1980 களிலிருந்து திரும்பவும் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள். இப்போதைய இந்தியர்கள் ஜனத்தொகை வெறும் பனிரண்டாயிரம் தான். தற்போதைய அரசாங்கமும் இந்தியர்களின் உழைப்பிற்கும், முதலிடிற்கும் ஓரளவு மதிப்பு அளிப்பதால் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இப்போது உகாண்டாவில் நிலவிவருகிறது.
10702017_1576056259284832_5950767353744780992_n

10402017_1575900215967103_4308180269339256135_n

10626736_1575983615958763_5190923543546031149_n

10672383_1576055372618254_8716699577225673542_n

உகாண்டா

இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகாரி
இடி அமீனை ஈன்றவள்….

அரேபிய பாலைவனம் படராமல் இருக்க
அரணாக இருக்கும்
நைல் நதியின் நதிமூலம் நிறைந்த நீர் வளத்தின் ஊற்று…

மா பலா வாழை என்ற முக்கனிகளும் வற்றாமல்
வருடம் முழுக்க தந்திடும் தாயகம்…

கடல் இல்லாவிட்டாலும்
கடல்போல் பரந்த விக்டோரியா ஏரியை தலையில் ஏந்தி நிற்கும் தடாகத் தாய் …..

வெள்ளையர்கள் சொன்ன இருண்ட கண்டம்
நான் கண்ட பச்சை பசேலென்ற இயற்கை போர்த்திய கண்டம் திட்டமிட்டு
முத்து போல ஒளிரும்
திருநாடு…..

மாறிவரும் உலகில்
மாற்றங்களை பெரும் விலைகள் கொடுத்து வாங்கி மாறி
வந்தாரை வரவேற்று வாழ்வளிக்கும் எங்கள் தாயம்மா ….
உகாண்டா ….

கருத்த சிப்பியிலே
வெளுத்த முத்து
எங்களை காத்த முத்து
ஆப்ரிக்காவின் பச்சை முத்து

# உகாண்டா.
கட்டுரை ஆக்கம் ராஜா வாவுபிள்ளை
(சங்கம் அப்துல் காதர்)ராஜா வாவுபிள்ளை

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: