RSS

வறுமை – தமிழ் பிரியன் நசீர்

18 Oct

10728518_471933049615404_16137083_nஅகல எல்லை
நீளங்களையும்
அங்குலமங்குலமாய்
உலகை அளவெடுத்து

பகலும் இரவும்
நூல் கோர்த்து
பார்த்து பரிணாம
ஊசியதால் நெய்து

பல் வண்ண
ஆடையணிகலன்களை
பரப்பி மேல் பூமி போர்த்தி
நலம் செய்வோன்
நாமே என்றான்

பெயரையும் புகழையும்
பிச்சைக் கேட்டு
போதைத் திருவோட்டினை
கையிலேந்தி

நகலையும் மெய்யென்றே
உரைத்தவனும்
நாகரீகக் கோமாளிபோல்
வேடமணிந்தான்
ஒளி துளைக்கும்
தந்திரம் கண்டான்
நெடு உயரம் சென்று
நிலவையுமளந்தான்

வகை வகையாய்
ஆடைகள் நெய்யும்
வல்லரசெனும
தையற்காரன்
வறுமையெனும்
கிழிசலை மட்டும்
தைத்திட ஏனோ
அறவே மறந்தான்

நீ மறந்த
கிழிசல் மறைக்க எள்ளியோர்தம்
சொல்லூசித் தாங்கி
தீ எறிக்கும்
வறுமைக் கிழிசலை
தினந்தோறும் நெய்துகொள்ள

சீர் கெட்டு
திரிந்து நொந்தோம்
சிதை மூட்டாமலேயே கருகி வெந்தோம் …!!

418487_134054253403287_225976198_n-MIX 1கவிதை ஆக்கம் தமிழ் பிரியன் நசீர்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: