RSS

இவன் போல பிள்ளைக்கு பெண் இன்னுமா கிடைக்கல!

27 Oct

1901428_884343221578539_6294955715836377121_nநன்றி மறப்பது நன்றன்று…

நண்பர்களின் பாசமது
விளங்கியுள்ளது;
சதா அடித்து கொண்டிருந்த
அக்காளின் பாசக் கண்ணீரில்
மூழ்கிப்போனது புரியுது;

அம்மாவின் கெஞ்சலிலுள்ள
அடி நாதம் உணர்த்துது;
அத்தாவின் அடாவடி
அறிவுரையின் அம்சங்கள் பளிச்சிடுது;

விட்டுவந்தப்பின்னேதான்
கனமானது மனது;
உறவுகள் சுகமாக தெரியுது;

சுற்றி நின்றுக்கொண்டிருக்கும்
கடன்காரர்களை விரட்டியடிக்க
இயன்றது – பையன் பயணத்திலா
எனும் கேள்வியே பெற்றோர்களின்
பெருமிதத்தை கொடுத்தது;

குச்சி வீட்டை
மச்சிவீடாக்க முடிந்தது;
ஓட்டை நிரம்பிய
ஓட்டு வீடை
மாடியாக்க தெரிந்தது;

உருப்படாதவன் எனும்
பட்டப்பெயர் காற்றோடு பறந்தது;
இவன் போல பிள்ளைக்கு
பெண் இன்னுமா கிடைக்கல
எனும் பேச்சே ஊரில் ஜொலிக்குது;

சுமைகள் இருந்தாலும்
சுகம் அதை மறக்கலாகாது;
மன கஷ்டங்கள் இறுக்கினாலும்
பண கஷ்டமது தீர்ந்தது;

பிழைத்துக்கொண்டே
உனை கரித்துக்கொட்ட முடியல;
கரியாக நான் எரிந்துக்கொண்டிருந்தாலும்
நன்றி மறக்க விரும்பல!

# வளைகுடா
யாசர் அரபாத்  Yasar ArafatYasar Arafat

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: