RSS

Monthly Archives: November 2014

முணு முணுப்பு

மனிதனின் வாழ்வினிலே
மாறாத பழக்கமாய்
மடியும் வரை தொடர்ந்திடுமாம்
மனத்தினிலே நிலைபெறுமாம்
முணுமுணுப்பு

சினங்கொண்ட பகையோரும்
சீண்டிய நம் உறவுகளும்
புறம்பேசி முணுமுணுப்பர்
பொல்லாங்கு செய்ய நினைப்பர்

இனம்கண்ட தவறுகளும்
எதிர்கொண்ட இகழ்வுகளும்
பணம் கொண்டு மறைந்து விடும்
புகையாகி முணுமுணுக்கும்
Read the rest of this entry »

 

பேஸ்புக் மூலம் நான் செய்த உருப்படியான முதல் காரியமாக இதைதான் கூறமுடியும் …- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

நேற்று காலை பேஸ்புக் திறந்தபோது அறிமுகமில்லாத ஒரு நண்பரிடம் இருந்து தகவல் வந்திருந்தது ..அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு, ஒரு பெரும் பணக்காரருடன் திருமணம் நிச்சயம் செய்யபட்டிருப்பதாகவும். அந்த பெண்ணுக்கு வயது 15 என்றும் கூறியிருந்தார் ..பெண் 10ம் வகுப்பு படிப்பதாகவும், வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவர் என்றும் குறிப்பிட்டு இருந்தார் ..பெற்றோர்களின் வற்புறுத்தலில்,அவரும் வேறு வழியின்றி இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருப்பதாகவும்..திருமணநாள் 27-11-2014 ..உங்களால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த இயலுமா என கேட்டு இருந்தார் …<!–more–

திருமணத்தை நிறுத்தினால்,அந்த குடும்பமே வருத்தப்படும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கை சீரழிவதை ஏற்றுகொள்ள முடியவில்லை ..காரணம் மணமகன் வயது 40 களில் இருந்தது ..சரி இதை எந்த வழியில் செய்யலாம் என எண்ணியபோது ..இருப்பது இடையில் ஒரே நாள் என்கிற காலநிலை வேறு தன்னம்பிக்கை இழக்க செய்தது ..இருந்தாலும் முயற்சி செய்யலாம் என தெரிந்த சில பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் அனுப்பினேன் ..பெரும்பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள் ..இருந்தாலும் உடனடியாக முயற்சி எடுப்பதாக உறுதி அளித்தனர் ..உடனடியாக செயலிலும் இறங்கினர் ..மாலை நெருங்கும் சமயம் வரை நம்பிக்கை அளிக்கும் செய்தி எதுவும் வராத நிலையில்,எனது நம்பிக்கை மிகவும் குறைய தொடங்கியது …எனக்கு தகவல் அளித்த நண்பரும் ,,முயற்சி செய்து பார்ப்போம்..அதை மீறி நடப்பது அந்த பெண்ணின் தலையெழுத்து என நம்பிக்கை இழந்தார் ..

இரவு வரை வந்த தகவலில்,சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது….இரவு தூங்க செல்லும்முன் பேஸ் புக் நுழைந்தால்..கல்யாணம் நிறுத்தபடலாம் என்னும் நம்பிக்கை தரும் செய்தி வந்தது …

இன்று காலை நேரடியாக அண்ணன்  Govi Lenin அவர்கள் போன் செய்து திருமணம் நிறுத்தப்பட்ட தகவலை உறுதி செய்தார் ..அவர் இல்லையென்றால் இது நடந்திருக்காது ..ஒரு சிறு பெண்ணின் ..இல்லை குழந்தையின் வாழ்க்கை சீரழிவை தடுக்க, உதவி செய்த அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் Sharpana Nelson Xavier நன்றி..உங்களின் பங்கு இதில் மிகபெரிது …நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட நக்கீரன்நிருபர் அருள் அவர்களுக்கு கோடி நன்றிகள் ..
பொத்தாம்பொதுவாக பத்திரிக்கை நண்பர்களை குறை சொல்லும் நாம், சில காரியங்களை ..அவர்களின் உதவியின்றி செய்து செய்து முடிப்பது கடினம் என நான் உணர்ந்து கொண்ட சம்பவம் இது…
இந்த செய்தியை நமக்கென்ன என எண்ணாமல், வெளிகொண்டு வந்த அந்த நண்பருக்குதான் முதல் பாராட்டுகளை சொல்ல வேண்டும் ..
பொருளாதார நிலைதான் அந்த பெற்றோர்களை இப்படி ஒரு முடிவெடுக்க தள்ளிருக்கும் என எண்ணுகிறேன்…அந்த நண்பருடன் கலந்து, அந்த பெண்ணின் படிப்பு செலவுக்கு ஏதாவது உதவி தேவைப்படுமா என அடுத்த முயற்சியை செய்யலாம் என எண்ணுகிறேன்..அதற்கான முயற்சியை என்னாலே செய்ய முடியும் என நினைக்கிறேன் …பேஸ்புக் மூலம் நான் செய்த உருப்படியான முதல் காரியமாக இதைதான் கூறமுடியும் ..

150146_10201789638781191_4847584079952842641_nநிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
 

பிரியங்கா – தூயமகள் -Rafeeq

10363424_10152825810941575_4648764893329206040_oபிரியங்கா – தூயமகள்.

பிரியங்கா! – யார் இவர்?
.
சிலநாள்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பேச்சாளரின் பேச்சின் மூலம் தான் எனக்கும் இந்தப் பிரியங்கா தெரியவந்தார்.

சரி, கல்யாணக்கோலத்தில் இருக்கிறாரே? ஆம் திருமணத்திற்கு அடுத்த நாளே கணவன் வீட்டிலிருந்து பிறந்தவீட்டிற்குத் திரும்பிய பிரியங்காவை இரண்டு மாதங்கள் கழித்து அழைத்து வந்தபோது ஊரே திரண்டு உற்சாகமாய் வரவேற்றபோது எடுத்த படமாம் இது.

கோபித்துக்கொண்டு போனவரை ஊர்கூடி அழைத்ததா? அப்படி என்ன செய்துவிட்டார் என்று வியப்பாய் இருக்கிறதல்லவா?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா, தனது 19ம் வயதில் (2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி) உத்திரப்பிரதேசத்தின் கொரக்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்னுப்பூர் குர்து கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் என்பவரை மணக்கிறார். Read the rest of this entry »

 

நட்பின் நுட்பம்..!! -நிஷா மன்சூர்

10357128_557438541066734_9034125655278754932_n

திணற வைக்கிறது உங்கள்
அன்பின் கிடுக்கிப்பிடி,
மிரள வைக்கிறது உங்கள்
குரலின் உரிமைத்தொனி,
துவள வைக்கிறது உங்கள்
மெளனத்தின் ஊமைவெறி.

கொஞ்சம் சந்தேகத்துடனேயே
எதனையும் அணுகும்
எளிய வணிகனுக்கும்
இலகுவாக எதனையும் நம்பிவிடும்
இளகிய கவிஞனுக்கும்
இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நட்பின் நுட்பம்..!!

nisha-APRILFOOLS

நிஷா மன்சூர்

 

Tags:

Useful powerpoint Slides & Attachments- மிகவும் உபயோகமான பவர் பாயிண்ட்&அட்டாச்மெண்ட்ஸ்

SEASONSALI

WordArtPicsimages

View original post 296 more words

 
Leave a comment

Posted by on November 19, 2014 in 1

 

செல்வமும் கல்வியும் by ராஜா வாவுபிள்ளை

செல்வம்….!

எப்படியும் தேடலாம்
என்றால் அது
எப்படியும் வந்தவழியே போய்விடும்

நல்வழியில் தேடியிருந்தால்
நன்மை பயக்கும்
நாளும் பொழுதும் வளரும்
வளம் சேர்க்கும்

வீண்விரையம் செய்தால்
வறுமையை கூட்டிவரும்
திரும்பி வராமலே போய்விடும்

இருப்பதை இல்லாதாரோடு
பகிர்ந்தால்
மென்மேலும் தேடிவரும்
குறைவில்லா வளம் தரும்

இறைவன் காட்டிய வழியில்
செலவு செய்தால்
செல்லும்வரை கூடவரும்
சொந்தம் கொண்டாடும்

செல்வத்தின் சிறப்பு
எப்படி சேர்த்தாய் என்பதில் இல்லை
எப்படி செலவு செய்தாய் என்பதில்
இருக்கிறது
Read the rest of this entry »

 

Tags: ,

மலையுச்சிப் பூவின் தியானம்

51513 beginnings of Green fieldsகைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்
Read the rest of this entry »