நேற்று காலை பேஸ்புக் திறந்தபோது அறிமுகமில்லாத ஒரு நண்பரிடம் இருந்து தகவல் வந்திருந்தது ..அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு, ஒரு பெரும் பணக்காரருடன் திருமணம் நிச்சயம் செய்யபட்டிருப்பதாகவும். அந்த பெண்ணுக்கு வயது 15 என்றும் கூறியிருந்தார் ..பெண் 10ம் வகுப்பு படிப்பதாகவும், வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவர் என்றும் குறிப்பிட்டு இருந்தார் ..பெற்றோர்களின் வற்புறுத்தலில்,அவரும் வேறு வழியின்றி இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருப்பதாகவும்..திருமணநாள் 27-11-2014 ..உங்களால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த இயலுமா என கேட்டு இருந்தார் …<!–more–
திருமணத்தை நிறுத்தினால்,அந்த குடும்பமே வருத்தப்படும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கை சீரழிவதை ஏற்றுகொள்ள முடியவில்லை ..காரணம் மணமகன் வயது 40 களில் இருந்தது ..சரி இதை எந்த வழியில் செய்யலாம் என எண்ணியபோது ..இருப்பது இடையில் ஒரே நாள் என்கிற காலநிலை வேறு தன்னம்பிக்கை இழக்க செய்தது ..இருந்தாலும் முயற்சி செய்யலாம் என தெரிந்த சில பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் அனுப்பினேன் ..பெரும்பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள் ..இருந்தாலும் உடனடியாக முயற்சி எடுப்பதாக உறுதி அளித்தனர் ..உடனடியாக செயலிலும் இறங்கினர் ..மாலை நெருங்கும் சமயம் வரை நம்பிக்கை அளிக்கும் செய்தி எதுவும் வராத நிலையில்,எனது நம்பிக்கை மிகவும் குறைய தொடங்கியது …எனக்கு தகவல் அளித்த நண்பரும் ,,முயற்சி செய்து பார்ப்போம்..அதை மீறி நடப்பது அந்த பெண்ணின் தலையெழுத்து என நம்பிக்கை இழந்தார் ..
இரவு வரை வந்த தகவலில்,சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது….இரவு தூங்க செல்லும்முன் பேஸ் புக் நுழைந்தால்..கல்யாணம் நிறுத்தபடலாம் என்னும் நம்பிக்கை தரும் செய்தி வந்தது …
இன்று காலை நேரடியாக அண்ணன் Govi Lenin அவர்கள் போன் செய்து திருமணம் நிறுத்தப்பட்ட தகவலை உறுதி செய்தார் ..அவர் இல்லையென்றால் இது நடந்திருக்காது ..ஒரு சிறு பெண்ணின் ..இல்லை குழந்தையின் வாழ்க்கை சீரழிவை தடுக்க, உதவி செய்த அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் Sharpana Nelson Xavier நன்றி..உங்களின் பங்கு இதில் மிகபெரிது …நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட நக்கீரன்நிருபர் அருள் அவர்களுக்கு கோடி நன்றிகள் ..
பொத்தாம்பொதுவாக பத்திரிக்கை நண்பர்களை குறை சொல்லும் நாம், சில காரியங்களை ..அவர்களின் உதவியின்றி செய்து செய்து முடிப்பது கடினம் என நான் உணர்ந்து கொண்ட சம்பவம் இது…
இந்த செய்தியை நமக்கென்ன என எண்ணாமல், வெளிகொண்டு வந்த அந்த நண்பருக்குதான் முதல் பாராட்டுகளை சொல்ல வேண்டும் ..
பொருளாதார நிலைதான் அந்த பெற்றோர்களை இப்படி ஒரு முடிவெடுக்க தள்ளிருக்கும் என எண்ணுகிறேன்…அந்த நண்பருடன் கலந்து, அந்த பெண்ணின் படிப்பு செலவுக்கு ஏதாவது உதவி தேவைப்படுமா என அடுத்த முயற்சியை செய்யலாம் என எண்ணுகிறேன்..அதற்கான முயற்சியை என்னாலே செய்ய முடியும் என நினைக்கிறேன் …பேஸ்புக் மூலம் நான் செய்த உருப்படியான முதல் காரியமாக இதைதான் கூறமுடியும் ..