RSS

Monthly Archives: December 2014

சமஸ்கிருதம்:

10897848_782284098508002_1200098641214079875_nஅன்றைக்கு மறுத்த உயர் ஜாதிகாரர்கள்
இன்றைக்கு வலிய திணிக்கிறார்கள்!
———————————————-
சமஸ்கிருதம்…
இந்திய ஆதிபாஷை!
இரண்டு கருத்திருக்க முடியாது.

இந்தியத் துணைக்கண்டத்தில்
தமிழுக்கு நிகரான
அல்லது அதற்கும் மேலான
பழமையும் வலுவும் கொண்ட மொழி சமஸ்கிருதம்.
இதிலும், இரண்டு கருத்திருக்க முடியாது.

சரி..,
பின் எப்படி அது
மக்கள் புழக்கத்திலிருந்து
அத்து இத்து மறைந்து போனது…?

இன்றைக்கு
சமஸ்கிருதத்தை முன்னிறுத்தி
மக்கள் அதனை படிக்க வேண்டும் என்று
ஏன் வலிய குரல் எழுகிறது? Read the rest of this entry »

Advertisements
 

அகக்கண்….!

10409344_1610759295814528_8912476933027056721_nஎன்னுள் எல்லாமே
நிறைந்து இருந்தது
எல்லாமே என்னைத் தேடுகின்றன!

வழிகள் அனைத்தும்
எனது இருப்பிடம்
பார்த்து திருப்பி விடப் படுகின்றன!

இமைகள் மூடியபடி
காட்சிகள் கோர்வையாய்
கொண்டு செல்கின்றன!

கண்காணா தூரதேசத்தில் பரிச்சயமான மொழிகளின் சம்பாஷனை தொடர்கிறது எதுவும் புரியாமலே!

உறக்கத்தில் ஆழ்ந்தால் உண்மைகள் புறத்தாகிவிடுமோ?
அகக்கண் விழித்தே இருந்தது!!

ராஜா வாவுபிள்ளை

(சங்கம் அப்துல் காதர்)

 

ஒட்டகம் / நிஷா மன்சூர்

317348_254458064698118_1313877727_nஒட்டகம்

ஒட்டகம் என்றதும் இந்த சிந்தனை(ஜோக் என்று சொல்ல மனம் வராது) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை…..

குட்டி ஒட்டகம் ஒன்று தன்னுடைய தாய் ஒட்டகத்திடம் இப்படிக் கேட்டதாம்.

அம்மா, நம்முடைய கால்கள் ஏன் இவ்வளவு நீளமாகவும், பாதங்கள் அகலமாகவும் இருக்கின்றன அம்மா?”

“நாம் பாலைவனத்தில் வாழவும், மணற்பாங்கான தரையில் நடமாடவும் பணிக்கப்பட்டிருக்கிறவர்கள் மகனே. நீளமான கால்களும், உறுதியான பாதங்களும் இருந்தால்தான் பாலை மணலில் நாம் நடப்பதும் ஜீவிப்பதும் சாத்தியம்.”

“மற்ற விலங்குகளுக்கு இல்லாத வகையில், நாசித்துவாரத்தை மூடித்திறக்கிற வசதி நம் இனத்துக்கு மட்டும் இருக்கிறதே, ஏன் அம்மா?”. Read the rest of this entry »

 

கனவு !

நினைவோட்டங்கள்
நித்திரை வழியாய்
மனத்திரையில்
பிரதிபலித்து
உள்ளுணர்வில்
காண்பதே கனவு

கனவுகள் யாதுமே
காகிதப் பூப் போலாகுமே
களைந்ததும் மறைந்திடும்
கரும்புகைக் கூட்டமே

கனவுகள் யாவருக்கும்
மெய்ப்படுவதில்லை
கவலையுற கண்ணீர்விட
கைச்சேதமில்லை

பகல்க்கனவு பலிக்காதென
பண்டுதொட்டுச் சொல்வதுண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவும்
பலர்க் கனவு காண்பதுண்டு Read the rest of this entry »

 

Tags: ,

ஏர் ஏசியா விமான விபத்து : நாற்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு!

plane-found-indonesia-sadஜகார்த்தா: இ்ந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பி நடு வழியில், மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. விமானத்தின் பாகங்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கடலில் மிதப்பதாக இந்தோனேசிய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் 30 கப்பல்கள், 15 விமானங்கள் ஈடுபட்டன. ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகுகள் வாயிலாகவு ஜாவா கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது Read the rest of this entry »

 

உன்னை என் விழிகளால் தொட்டுத் தொட்டு வாசித்தபோது-அன்புடன் புகாரி

1488791_687800681240043_567059819_n

அடி பெண்ணே
உன்னை என் விழிகளால்
தொட்டுத் தொட்டு வாசித்தபோது
நீ அள்ளி இறைத்த
நயாகராச் சாரல்
என் கண்களின் ஞாபகங்களில்
அப்படியே ஒட்டிக்கிடக்கிறது

அடடா
என்ன ஒரு நாணம்

மேப்பிள்மரத் தேன்
துளித் துளியாய்ச் சொட்டச் சொட்ட
உன் கன்னங்களில்
கனடாவின்
வடதுருவ ஒளிக்கதிர் வீச்சுகள்
வண்ணங்களை வாரியிறைக்க
என் கண் கடலுக்குள்
உன் காதலைச் செழுத்தியது
உன் நங்கூர நாணம்

என்னைக் கண்டு வெடித்த
உன்
தோரண வெட்கமும்
பூரண ஆனந்தமும்
என்னைக் கிழித்தெடுத்து
உன் சந்தனக் கழுத்திலிருந்து
சறுக்கும் இடைக்குள்
நழுவி விழும் துப்பட்டாவாய்
ஆக்கிக்கொண்டன Read the rest of this entry »

 

உங்களுக்குப் புரியாது; புரிந்தால் நலம்…

10429854_912109972135197_3936473861236184605_nமெல்லியதாய் ஊடுருவி;
விழிகளையும் சேர்த்தே
சிரிக்கவைத்து…
நெஞ்செலும்புக் கூட்டினுளிருந்து
அடிவயிறுவரை சிலிர்க்கவைத்து;

எது சொன்னாலும் புன்னகைத்து;
எவர் சொன்னாலும் பல் இளித்து;
நோஞ்ஞான் உடம்பினுள்ளும்
திமிர் பிடித்த சிங்கங்கள்
புகுந்துக்கொண்டு…
தெரித்து அலைந்தப்படி; Read the rest of this entry »