RSS

கழுதையும் காதலும் !

03 Dec

வெண்பா பயின்ற பொழுதில், கழுதையையும் காதலையும் ஒப்பிட்டு எழுதச் சொன்னார்கள்.

அப்போது எழுதிய பா.

உன்னைப்போல் ஏதொன்றும் ஊரில் அழகில்லை
இன்னிசைப் பாட்டிலும் ஏதிணை? – முன்னால்
‘கடி’கள் தருகின்ற காதல் கழுதை
படிப்பேன் உனக்கொரு பா!

பின்னால் உதைத்தாலும் பேருக்(கு) அழகுதான்
முன்வந்து பாடினால் ‘மெய்’ம(ர)றக்கும் – இன்னும்
பொழுதெல்லாம் ஊர்வாயில் பேச்சாகும் காதல்
கழுதை கிடக்கட்டும் போ!

ஒரு குழுமத்தில் இதனை இட்டபோது, பெண்ணிய நண்பர் ஒருவர் கண்டனம் தெரிவித்தார். ஆகவே, அவருக்கு ஆறுதல்தரும் நோக்கில் கவி = குரங்கு என்றும் ஒன்று எழுதினேன்.

தன்பாட்டில் சேட்டைகள் தாராளம் செய்திடும்
கண்மூடிப் பார்க்குமுன் கைப்பற்றும் – எண்ணத்தில்
வாலென்றே எண்ணிட வைத்தாலும் கையேந்தும்
கோலுக்கே ஆடும் கவி.

தலைக்கேறி வந்ததை தன்வழி ஆயும்
கலையெனில் செய்வதலங் கோலம் – நிலையாய்
கவியென்ற பேரிவர்க்கு, கொள்கைப் பிடியில்
புவியினில் ஆரிவர் போல்.

10375980_10204964733218652_668809900868058840_nFakhrudeen Ibnu Hamdun

images

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: