RSS

திண்ணை மரம்

14 Dec

10525895_495193243956051_2210001108626903287_nஏலேய் ….எம்மவராசா
எம்மவம் பெத்த தவராசா
ஆனைகட்டி அரசாளும்
யோகமுனக்கு வந்தாலும்
அப்பத்தா உசுரா நினைச்ச
திண்ணை மரத்தை வெட்டிடாதே..!!

காடு கழனியெல்லாம்
மாடா உழைச்சி களைச்சி
ஆடி அசந்து வரும்
ஒன் அப்பனப் பெத்தவுகவீடா நினைச்ச மரம் ..!!
விட்டமா தழச்ச மரம் .!!

ஓனக்குந் தொட்டிகட்ட
கழுத்த கொடுத்த மரம
ஓன் அப்பனுக்கும் தோள் கொடுத்த
ஊரழகு பழுத்த மரம்

யாரு வந்து சொன்னாலும்
ஊறு நீ செஞ்சிடாதே ..!!
ஆதரவா இருந்தவளை
அறுத்து நீ எறிஞ்சிடாதே..!!

அப்பத்தா சொன்ன கதை
அப்பெல்லாம் விளங்கவில்லை
அடிவரை வெட்டும் போதும்
துளி கூட வலிக்கவில்லை

அறுத்தெடுத்து நான் செஞ்ச
அழகு சன்னலோரம்
படுத்து உறங்கையிலத் தான்
பாவ வெனைச் சுட்டதடி

சன்னலு மட்டுந்தான்
அழகழகா இங்கிருக்கு
நான்சாஞ்சி படுத்த
மரந்தந்த
காத்தும்பறிபோச்சு

நான் சாவகாசமா
தூங்கி விழிச்ச
சந்தோசமும்
என்ன விட்டுப்
போயேப் போச்சு

10743561_479879825487393_462898494_nதமிழ் பிரியன் நசீர்
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: