RSS

ஆளுமைகளை தெரிந்து கொள்வோம்:- தாஜ் தீன்

20 Dec

Hajee.S.E.Aநீடூர் – அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
——————————————————
(எங்கள் வட்டாரத்தில்
நம் மக்களிடையே அன்றும் சரி / இன்றும் சரி
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஒத்த
இத்தனைப் பெரிய ஆளுமை கொண்டவர்கள் குறைவு!
அவர்களை தவிர்த்து இன்னொருவர்
இந்தப் பக்கம் இருந்ததில்லையென்றும் கூட சொல்லலாம்.

மேன்மை மிகு
நீடூர் அல்ஹாஜ் சி ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களை
வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
மிகுந்த பெருமை உண்டு.

கீர்த்திகள் பல கொண்ட இந்த பெருந்தகையின்
வரலாற்றுப் பக்கங்களை
இங்கே F/B வாசகர்களுக்காக
ரொம்ப… ரொம்ப…சுறுக்கி – தந்திருக்கிறேன்.}
தாஜ் Taj Deen


Hajee.S.E.A,Abஅல்ஹாஜ் சி ஈ.அப்துல் காதர் சாஹிப்.(1895 – 1955 )
தஞ்சை மாவட்டம் – நீடூர்!

ஆரம்ப கல்வி – திண்ணைப் பள்ளிக்கூடம்!. .
1910 -ம் வருடம்
மாயூரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்
7-ம் படிவத்தில் தேர்ச்சி பெற்ற நாளில்…. …
வேலூர் ‘பாக்கியாதுஸ்ஸாலி ஹாத்’ மத்ரஹாவில்
மார்க்க கல்வியும் உலக கல்வியும்!

1912 -ம் ஆண்டில்
வியாபார நிமிர்த்தமாக பினாங்கு – சிங்கப்பூர் –
சைகோன் – ஹன்னோய் சென்று திரும்பிய அவர்கள்.
நீடூரில் மளிகை வியாபாரம்!
1917-ம் ஆண்டில்
மௌலானா மௌலவி ஹாஜி அப்துல் கரீம் கிப்லா
அவர்களின் இளைய சகோதரி
உம்முசல்மா பீவியை மனைவியாக மணம் முடிக்கிறார்கள்.

1918-ம் ஆண்டில் பக்கத்து டவுன் மாயூரத்தில்
தனியே மளிகை வியாபாரம் தொடங்குகிறார்கள்.

1918-ல் ஒரு கிளை அஞ்சல் நிலையம்
நீடூரில் அமைய சிரத்தை மேற்கொண்டதோடு,
அதே ஆண்டில், நீடூரில் ரயில்வே ஸ்டேசன் அமைய
தனக்கு சொந்தமான இடத்தைத்தந்து உதவி…
நீடூரில் ரயில்வே ஸ்டேஷன் காண்கிறார்.

அவரது நல்லெண்ணத்தையும்
பொதுநல சேவையையும் மக்கள் அறியவர
ஹாஜியார் அவர்களின் புகழ் பரவத் தொடங்கி…
‘கௌரவ மாஜிஸ்ட்ரேட்’ பதவி அவர்களை தேடிவருகிறது!.
1927 -ம் ஆண்டு முதல் 1935 -ம் ஆண்டுவரை
மாயூரத்தில் அப்பதவியை வகிக்கிறார்கள்!

1932-ல் புதிய தொழிலாக மாயூரம் மையத்தில்
பெரிய அளவிலான பாத்திரக்கடை துவங்குகிறார்கள்.
இன்னொருப் பக்கம்
ஒவ்வொரு நாளின் பாதிப்பொழுதை
சமுதாய சமூக சேவைக்கே ஒதுக்கி செயல்படுகிறார்கள்..

நீடூருக்கு ஏழுகல் வடக்கே இருக்கிற
திருவாளப்புத்தூர் முஸ்லிம் மக்களுக்கு
குடியிருப்பு பகுதி தேவைப்பட ஹாஜியார் முன்நின்று
அம்மக்களுக்கு அதனை நிறைவேற்றித் தந்து.
அவர்களது துயரைத் துடைக்கிறார்கள்.

1938-ம் ஆண்டு மாயூரம் தாலுக்கா
முஸ்லீம் லீக் மாநாட்டை சிறப்பாக
முன்நின்று நடத்திக் காட்டுகிறார்கள்! .
1942-ம் ஆண்டு
சென்னை முஸ்லிம்லீக் மாநில மாநாட்டிற்கு
மாயூரத்தில் இருந்து தனி ரயில் ஏற்பாட்டில்
மக்களை அழைத்து சென்று அம் மாநில மாநாட்டை
சிறப்பித்து உவகை கொள்கிறார்கள்!.

தொடர்ந்த ஆண்டுகளில்…

// நீடூரில் தம் மக்கள் வாழ குடியிருப்பு இடம் போதாமையால்
ஹாஜியார் அவர்கள் முன் நின்று ஊரை ஒட்டிய
நிலத்தினை வாங்கி வீட்டு மனைகளை பிரித்து
அவ்வூரில் வீடு கட்டுவோருக்கு மனைகள் விற்று
ஊரை விரிவடையச் செய்கிறார்கள்!.

// சீர்காழி தாலுக்கா கொள்ளிடத்தைச் சார்ந்த
துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த (தைக்கால்) –
ஏழ்மைப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு
குடியிறுப்பு மனைகளையும்,
அம் மக்கள் தொழ
ஒரு பள்ளிவாசலையும் கட்டித்தருகிறார்கள்!

1943 -ல் மாயூர நகரின் மையத்தில்
மணிக்கூண்டினை நிர்மாணித்து வழங்குகிறார்கள்!.

1945 – ல் மாயூர மத்திய பேருந்து நிலையத்திற்கருகில்
நகர இஸ்லாமிய வியாபாரிகளின் நலன் பொருட்டு
அழகியதொரு பள்ளிவாசலை கட்டித்தருகிறார்கள்!

1945 -ம் ஆண்டில்..நீடூர் அரபிக்கல்லூரியான
‘மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா’வின்
தலைவராக பொறுப்பேற்று
அக் கல்லூரியை விரிவுப் படுத்துகிறார்கள்.
அதன் நிர்வாக செலவுகளுக்கு
கீழ்திசை நாடுகளில் பொருளீட்டியும்/
அக் கல்லூரிக்கு சிறந்த முதல்வரை நியமித்தும்
மாநில அளவில்…போற்றத்தக்க அரபிக் கல்லூரியாக
உயர்வு கொள்ளச் செய்கிறார்கள்!

அவர்கள் பெற்ற செல்வங்களைக் காட்டிலும்,
நெஞ்சில் தாங்கி பேணி வளர்த்த
மதரஸா மிஸ்பாஹுல் ஹுதாவையே
பெரிதும் நேசித்தவராக 1955 -ம் ஆண்டு
மே திங்கள் ஐந்தாம் நாள் பகல் சுமார் 2 மணிக்கு
இவ்வுலகை நீத்தார்கள்.
‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ‘

*
குறிப்பு – 1:
# ஃபேஸ்புக்கில் நம்மோடு நட்பு பூண்டு நல்லப் பல
கருத்துக்களை வைக்கும்…அண்ணன் நீடூர்
முகம்மது அலி ஜின்னா அவர்களின் தந்தைதான்….
அல்ஹாஜ் சி ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்கள்
என்பதையும் வாசகர்களின் கவனத்தில் வைக்கிறேன்!
– தாஜ்

*
குறிப்பு -2 :
மேற்கண்ட கட்டுரையை…
நீங்கள் முழுமையாக வாசிக்க எண்ணினால்…
கீழ்கண்ட சுட்டியை இயக்கவும்.

http://nidurseasons.blogspot.in/2012/07/1.html – பகுதி – 1

http://nidurseasons.blogspot.in/2012/07/2.html – பகுதி – 2

http://nidurseasons.blogspot.in/2012/07/3_9.html – பகுதி – 3

http://nidurseasons.blogspot.in/2012/07/4.html – பகுதி – 4

http://nidurseasons.blogspot.in/2012/07/5.html – பகுதி – 5

*
நன்றி:
K.M. ஜக்கரியா, B.Com., – எலந்தங்குடி
&

seasonsnidur – சீசன்ஸ் நீடூர்

TAJ தாஜ் 

Taj Deen   – தாஜ்
Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: