RSS

ஏர் ஏசியா விமான விபத்து : நாற்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு!

30 Dec

plane-found-indonesia-sadஜகார்த்தா: இ்ந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பி நடு வழியில், மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. விமானத்தின் பாகங்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கடலில் மிதப்பதாக இந்தோனேசிய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் 30 கப்பல்கள், 15 விமானங்கள் ஈடுபட்டன. ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகுகள் வாயிலாகவு ஜாவா கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது.தேடுதலின் பலனாக ஜாவா கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய சில பொருட்கள் மிதப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் விபத்து நடந்ததாக சந்தேகிக்கப் படும் பகுதி புகை மண்டலம் தெரிவதாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தார்கள். இதைடுத்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது, இந்தோனேசியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், பயணிகளின் உடல்கள் மற்றும் உடைமைகள் கடலில் மிதப்பதும் தெரிய வந்துள்ளது. இத்தகவலை இந்தோனேசிய விமான போக்குவரத்துத் துறை தலைவர் ஜோக்கோ முர்ஜாமோட்ஜோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடலில் மிதப்பது ஏர் ஏசியாவின் சிதறல் பாகங்கள் என்று தெரிய வந்துள்ளது. தற்போது இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தத் தீவுக்கு விரைந்துள்ளார். பயணிகள் வெளியேறும் கதவு, சரக்குப் பகுதியின் கதவு ஆகியவை கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய களிமன்தன் பகுதியின் பாங்காகலன் பன் என்ற இடத்திலிருந்து தென் மேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இவை மிதக்கின்றன என்றார்.

உடல்கள் மீட்பு

இந்த இடத்திற்கு தற்போது மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். மீட்புப் பணிகளும் தொடங்கி விட்டன. விமானத்திலிருந்து மீட்புப் படையினர் கீழே இறங்கி தொங்கியபடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சில உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மீட்கப்பட்ட உடல்களை கடற்படை கப்பலில் ஏற்றி வருகின்றனர்.

இறந்த உடல்களில் உயிர் காக்கும் ஜாக்கெட் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தகவலைக் கேள்விப்பட்டு விமானம் கிளம்பிய இடமான சுரபயாவில் குழுமியுள்ள பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். அனைவரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். இருந்த நம்பிக்கையும் தகர்ந்து வேதனையில் அவர்கள் உள்ளனர்.

http://www.thoothuonline.com/archives/70671

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: