RSS

கனவு !

30 Dec

நினைவோட்டங்கள்
நித்திரை வழியாய்
மனத்திரையில்
பிரதிபலித்து
உள்ளுணர்வில்
காண்பதே கனவு

கனவுகள் யாதுமே
காகிதப் பூப் போலாகுமே
களைந்ததும் மறைந்திடும்
கரும்புகைக் கூட்டமே

கனவுகள் யாவருக்கும்
மெய்ப்படுவதில்லை
கவலையுற கண்ணீர்விட
கைச்சேதமில்லை

பகல்க்கனவு பலிக்காதென
பண்டுதொட்டுச் சொல்வதுண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவும்
பலர்க் கனவு காண்பதுண்டு

ராக்கனவு கண்டவரும்
நோக்கத்தில் தோற்றிருப்பர்
ராகு கேது குளிகையென
ரகமாய்ச் சகுனம் பார்த்திருப்பர்

சகுனங்களும் கனவுகளும்
சங்கடத்தை உண்டுபண்ணும்
மௌனங்களும் முயற்ச்சிகளும்
முன்னேற வழிவகுக்கும்

கனவுக்குச் சக்தியில்லை
காண்பது வெறும் இயல்புநிலை
மனதிற்குச் சக்தியுண்டு
மதியறிந்த நடத்தைகொண்டு

இறுதியாய்ச் சொல்வதானால்
இன்றுவரை கனவுகள் யாதும்
மெய்ப்படுவதில்லை

உறுதியாய் நம்புவோமானால்
உறக்கத்தில் தெரிவது யாவும்
உலகாழும் இறையோனின்
மகத்துவத் தன்மை
m1அதிரை மெய்சா
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 04-12-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 16 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.

http://nijampage.blogspot.ae/2014/12/blog-post_30.html

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: