RSS

ஒட்டகம் / நிஷா மன்சூர்

31 Dec

317348_254458064698118_1313877727_nஒட்டகம்

ஒட்டகம் என்றதும் இந்த சிந்தனை(ஜோக் என்று சொல்ல மனம் வராது) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை…..

குட்டி ஒட்டகம் ஒன்று தன்னுடைய தாய் ஒட்டகத்திடம் இப்படிக் கேட்டதாம்.

அம்மா, நம்முடைய கால்கள் ஏன் இவ்வளவு நீளமாகவும், பாதங்கள் அகலமாகவும் இருக்கின்றன அம்மா?”

“நாம் பாலைவனத்தில் வாழவும், மணற்பாங்கான தரையில் நடமாடவும் பணிக்கப்பட்டிருக்கிறவர்கள் மகனே. நீளமான கால்களும், உறுதியான பாதங்களும் இருந்தால்தான் பாலை மணலில் நாம் நடப்பதும் ஜீவிப்பதும் சாத்தியம்.”

“மற்ற விலங்குகளுக்கு இல்லாத வகையில், நாசித்துவாரத்தை மூடித்திறக்கிற வசதி நம் இனத்துக்கு மட்டும் இருக்கிறதே, ஏன் அம்மா?”.

“பாலைவனத்தில் மணற்புயல் வீசுகிற போது, மூக்கை மூடிக் கொள்கிற வசதி இருந்தால்தான் மகனே நாம் மூக்குக்குள்ளே மணல் புகுந்து கொள்கிற அசம்பாவிதத்தைத் தடுக்க முடியும்”.

“தண்ணீர்த் தாகமே நமக்கு எடுப்பதில்லையே, ஏன் அம்மா?”

“தண்ணியில்லாக் காடான பாலைவனத்தில் வாழ விதிக்கப்பட்டிருக்கிற நம்முடைய உடற்கூறு, ஒரே நேரத்தில் நாற்பது நாட்களுக்குத் தேவையான தண்ணீரை உள்ளிழுத்து சேமித்து வைத்துக் கொள்கிற வசதியோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் அடிக்கடி தாகமெடுக்காத வரப்பிரசாதத்தை நாம் பெற்றிருக்கிறோம்”.

“அதெல்லாம் சரிதான் அம்மா, பாலைவனத்தில் வாழ்வதற்கான வசதிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றிருக்கிற நாம், இந்த மிருகக்காட்சி சாலை வேலிகளுக்குள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறோம்?”

 

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: