RSS

Monthly Archives: January 2015

லஞ்சத்தை ஒழிக்க முடியாதா !?

00182_1லஞ்சம் என்பது குணப்படுத்த முடியாத புற்றுநோயாக அனைத்து துறையிலும் வளர்ந்து வேரூன்றி விட்டது..லஞ்சம் வாங்குவதும் குற்றம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று நாட்டில் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் எத்தனை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்துப் பிடித்து தண்டனை வழங்கிவந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் குறைந்துகொண்டு போனாலும் லஞ்சத்தை ஊக்கப்படுத்துவதுபோல லஞ்சம் கொடுக்கும் நாட்டுமக்கள் பெருகிக் கொண்டு போகிறார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும்.. Read the rest of this entry »

Advertisements
 

தனித்தமிழா? தனித்துவிடப்பட்ட தமிழா?

மொழி, கவிதை, அன்பு, அறிவு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள்

அதை எந்தத் தமிழனும் மொடி, கவ்டை, ஆன்பே, அடிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. சரியாகத்தான் எழுதுகிறான்.

கிருஷ்ணன், ஜெயபாரதன், ஜான், ஹரிஹரன் என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள்.

அவை தமிழ்ச்சொற்கள் அல்ல. Read the rest of this entry »

 

உ ட் க ட ல் / தா ஜ்

1948057_793913127345099_5720283511548120670_nகுதுகலமான பொழுதுகளில்
கடற்கரையோரம்
நண்டுகள் பிடித்து விளையாட நீ
வண்ணத்தில்
சிப்பிகளை சேகரித்தாய்
மலையேறிக்கொண்டிருந்த
ஒரு முன் பனிக்காலத்தில்
நடையின் லாவகத்தோடு
முன்னால் நீ போய்க் கொண்டிருந்தாய்
உச்சிப்பொழுது சுடுமணலில்
வேகம் சுழித்துத் தடுமாற நான்
பாத ரணங்களோடு
அழுந்த அடிகளைப் பதித்தபடி
நீ கடப்பதைப் பார்த்தேன்
தூரிகையால் உன்னை
தீட்டிப்பார்த்தபோது
உயிர்பெற்ற மார்பகங்கள்
தேம்பி விம்ம
பறந்து விட்டேன்
வடிவாய் வடித்து கரமெடுக்க
நிர்வாண நிலை வேண்டும்
தரித்த உடுப்புகளை கழட்ட
உன்னால் அல்ல
என்னாலும் முடியாது. Read the rest of this entry »

 

தனியே தன்னந்தனியே….!/ரபீக் சுலைமான்.

தனியே தன்னந்தனியே….!/ரபீக் சுலைமான்.

10906522_10153004102101575_2236886411995107701_n

நம்ம எல்லோருக்கும் பிரயாணத்தில் ஒரு அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். என்னவெனில், நாம் (முன்பதிவு செய்திருந்தாலும்) பயணிக்க இருக்கும் பேருந்தில் போதிய அளவு பயணிகள் ஏறவில்லையெனில் ஒன்று பேருந்து புறப்பட தாமதமாகும். அல்லது அடுத்து புறப்பட இருக்கும் பேருந்தில் சேர்ந்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்போம்.

இதேபோல் இருதினங்களுக்கு முன் அமெரிக்காவின் ‘டெல்டா’ எனும் உள்ளூர் விமானத்தில் க்ளீவ்லேண்ட் எனும் நகரத்திலிருந்து நியூயார்க் செல்வதற்காக கிறிஸ் ஓ’லெரி எனும் பயணி முன்பதிவு செய்திருந்தார். Read the rest of this entry »

 

புலர வேண்டும் பொழுதுகள்….!

பொறையும் பொழுதும்
நித்தம் புலருது பூமியிலே
பிறந்து வளர்ந்தும்
விடியாத வாழ்க்கை
கொண்டோரும் உளரே பூமியிலே ?

பல்லுயிர் போற்றி
இன்னுயிர் காத்தும்
இன்னல்கள் விலகாத
மாந்தருக்கு வாழ்க்கை
விடிந்திடுமோ பூமியிலே ?

பணமும் பதவியும்
பண்பின்றி பெற்றிடவே
சாதிமத அரசியலில்
சேற்றை பூசிக் கொள்வோர்க்கு
வந்திடாதோ அஸ்தமனம் ? Read the rest of this entry »

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை திணறடித்த 5 வயது சிறுவன்

Xboxமுன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “எக்ஸ்பாக்ஸ்’ விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான்.

அமெரிக்காவின் சான் டைகோ நகரைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் வான் ஹùஸல் என்ற அந்தச் சிறுவன், கணினியில் தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது “எக்ஸ்பாக்ஸ்’ கணக்கைத் திறக்க முயன்றுள்ளான்.

ஆனால், அதற்கான கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) இல்லாததால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் விசைப்பலகையில் “ஸ்பேஸ்’ விசையை சிலமுறை தட்டிவிட்டு பிறகு “என்டர்’ விசையைத் தட்டியுள்ளான். Read the rest of this entry »

 

மைலாஞ்சிக் கனவு … அபு ஹாஷிமா

10928560_771149956297069_142845170_nஅக்காமார் இருவருக்கும்
முப்பது வயதுக்கு
மேலேதான் கல்யாணமே
ஆச்சு !

கடைக்குட்டி எனக்கு
வயசு இப்போது
நாற்பது !

வாங்கிய கடன்களுக்கு
வட்டி கட்டவே முடியாத
வாப்பா
ஒருநாள்
அவமானப்பட்டு
ஆயுளை இழந்தார் !

வாப்பாவைத் தொடர்ந்து
உம்மாவும் … Read the rest of this entry »

 

Tags: , , ,