RSS

மைலாஞ்சிக் கனவு … அபு ஹாஷிமா

09 Jan

10928560_771149956297069_142845170_nஅக்காமார் இருவருக்கும்
முப்பது வயதுக்கு
மேலேதான் கல்யாணமே
ஆச்சு !

கடைக்குட்டி எனக்கு
வயசு இப்போது
நாற்பது !

வாங்கிய கடன்களுக்கு
வட்டி கட்டவே முடியாத
வாப்பா
ஒருநாள்
அவமானப்பட்டு
ஆயுளை இழந்தார் !

வாப்பாவைத் தொடர்ந்து
உம்மாவும் …

ஏழைநான்
ஊரார் பார்வைக்கும்
பேச்சுக்கும்
அநாதையானேன் !

படிக்கவே வக்கில்லாத
எனக்கு
கம்ப்யூட்டர்
கத்தரிக்காயெல்லாம்
என்ன தெரியும் ?

சின்ன வயசில்
உம்மா
சொல்லித் தந்த
தையல்தான்
அக்காமார் கரையேறவும்
இப்போது
இரண்டுவேளை
சோற்றுக்கும்
உதவியாக இருக்கிறது !

என் வயதுப் பெண்களெல்லாம்
பேரன் பேத்தி
கண்ட பிறகும்
எனக்கு மட்டும்
மலடாகவே இருக்கிறது
என்
கல்யாண இரவு !

துணை ஒன்றைத்
தேடிக் கொள்ள
பாவி மனம்
துடியாகத் துடித்தாலும்
வசதியற்ற என்னோடு
வாழ்க்கை நடத்த
யாருக்குத்தான்
விருப்பம் வரும் ?

வறுமை ஒருபுறம்
இன்னமும் இளமை விலகாத
இதயத்தை இம்சிக்கும்
இச்சை மறுபுறம் !

கல்யாணப் பெண்களின்
உடைகளைத் தைககும் போது
உண்ர்ச்சி நரம்புகளில்
ஊசியாய் குத்துகிறது
விரக்தி !

என்றாலும் ….
புதுப் பெண்ணின்
மைலாஞ்சி பூசிய
விரல்களின்
புது வாசனையைப்போல்
ஈரமாகவே இருக்கிறது
என் எதிர்பார்ப்பு

ரத்த நாளங்களில்
இன்னமும்
எரிந்து கொண்டிருக்கும்
இளமையின் நெருப்பு
நீர்த்துப் போவதற்கு முன்னால்
எனக்கென்று
வராமலா
போய்விடுவாள்
ஓர் ராஜ குமாரி.!

10891931_919890858030583_7334972593129223123_nAbu Haashima
 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: