RSS

புலர வேண்டும் பொழுதுகள்….!

16 Jan

பொறையும் பொழுதும்
நித்தம் புலருது பூமியிலே
பிறந்து வளர்ந்தும்
விடியாத வாழ்க்கை
கொண்டோரும் உளரே பூமியிலே ?

பல்லுயிர் போற்றி
இன்னுயிர் காத்தும்
இன்னல்கள் விலகாத
மாந்தருக்கு வாழ்க்கை
விடிந்திடுமோ பூமியிலே ?

பணமும் பதவியும்
பண்பின்றி பெற்றிடவே
சாதிமத அரசியலில்
சேற்றை பூசிக் கொள்வோர்க்கு
வந்திடாதோ அஸ்தமனம் ?

தரமில்லா பொருளுக்கு
அபரிமித விளம்பரத்தில்
நுகர்வோரை ஆக்கிரமித்து
கொள்ளை லாபம் ஈட்டுவோரை
கொள்ளைநோய் தாக்கிடாதோ ?

கல்வியை விற்பனைப் பொருளாக்கி
பெற்றோரின் ரெத்தத்தை செல்வமாக்கி
கல்லாமை இல்லாமல் ஆக்காது
தரமில்லா கல்வியை தருவோருக்கு
வளமெல்லாம் குன்றிடும் நாளும்வருமோ ?

தன்பொருள் சேர்த்திட
நாட்டின் நிலைகெடுத்து
கூறு கெட்ட அரசியல் நடத்தி
நடுத்தரமக்களை நட்டாற்றில் விடுவோரை
நாடு கடத்திட வேண்டாமோ ?

ஆக்கம் (சங்கம் அப்துல் காதர்)

ராஜா வாவுபிள்ளை
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: