RSS

தனியே தன்னந்தனியே….!/ரபீக் சுலைமான்.

16 Jan
தனியே தன்னந்தனியே….!/ரபீக் சுலைமான்.

10906522_10153004102101575_2236886411995107701_n

நம்ம எல்லோருக்கும் பிரயாணத்தில் ஒரு அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். என்னவெனில், நாம் (முன்பதிவு செய்திருந்தாலும்) பயணிக்க இருக்கும் பேருந்தில் போதிய அளவு பயணிகள் ஏறவில்லையெனில் ஒன்று பேருந்து புறப்பட தாமதமாகும். அல்லது அடுத்து புறப்பட இருக்கும் பேருந்தில் சேர்ந்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்போம்.

இதேபோல் இருதினங்களுக்கு முன் அமெரிக்காவின் ‘டெல்டா’ எனும் உள்ளூர் விமானத்தில் க்ளீவ்லேண்ட் எனும் நகரத்திலிருந்து நியூயார்க் செல்வதற்காக கிறிஸ் ஓ’லெரி எனும் பயணி முன்பதிவு செய்திருந்தார்.

விமானம் சிலமணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனும் தகவல் கிடைத்ததால், கிறிஸ் தான் தங்கியிருந்த விடுதியிலேயே தங்கி பிறகு உரிய நேரத்தில் விமானநிலையம் அடைந்தார்.

அங்கு சென்றபின் தான், தன்னுடன் பயணிக்கவிருந்த அனைத்து சக பயணிகளும் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானத்தில் பயணித்து விட்டனர் என்றும். அதற்கான குறுஞ்செய்தியினைத் தான் தவறவிட்டு விட்டதாகவும் தெரிந்து கொண்டார்.

இருப்பினும் இவர் முன்பதிவு செய்த விமானத்தில் பயணிக்க வேண்டுமெனவும். தாமதத்திற்கான குறுஞ்செய்தியினால் தான் தான் தாமதமாக வந்ததாகவும் வாதாடியதையடுத்து. இவர் ஒருவருக்காக மட்டும் விமானம் நியூயார்க் புறப்பட்டது.

தன் ஒருவனுக்காக மட்டும் விமான சிப்பந்திகள், பாதுகாப்புக்கான செய்முறையினை செய்து காட்டியது நம்பமுடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது என்று வியக்கிறார் கிறிஸ்.

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: