RSS

Monthly Archives: February 2015

உயிர்மெய் / தாஜ்

10982237_815695568500188_8234936627007366807_nபசுமையின் அந்தி
இலையுதிர் கோலம்.
சிதிலம் காண்
யௌவனத்தின் கூறு.
நொருங்கிக் கிடக்கும்
கரிக்கட்டைகளும்
நின்ற மரத்தின் சாட்சி.
இருள் வழியில் இடறும்
ஏதோ அது நான். Read the rest of this entry »

Advertisements
 

அது என்ன காதலர் தினம் !?- அதிரை மெய்சா

imagesகாதலர்கள் தினம் என்ற பெயரில் போலி முகம் கொண்ட கள்ளக்காதலர்கள் காம போதையை அனுஷ்டிக்கவும் தன் இச்சைகளை தீர்த்துக்கொள்ளவும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு காதலர்கள் தினமென்று பெயரிட்டு கொண்டாடுகிறார்கள்.

மனதும் மனதும் உள்ளத்தால் மட்டும் நேசிக்கப்படுவதுவே உண்மைக்காதலாகும். உண்மைக்காதல் ஒரு போதும் விழாவாக வீதிக்கு வராது. காதல் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்று இன்றைய காலத்தில் நாம் கண்கூட காண்கின்றோம்.

உண்மைக்காதலென்று காதலர்கள் தினம் கொண்டாடுபவர்கள் காதலியோ, காதலனோ தன் கையைதொடவோ, முத்தமிடவோ சம்மதிக்க வில்லையெனில் அக்காதலை ஏற்றுக்கொள்வார்களா..? Read the rest of this entry »

 

“எவ்வளவு செலவில் வாங்கிய முதுமை!”.

இப்பொழுதெல்லாம் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு லட்சங்களில்.
இவ்வளவு செலவு செய்து நம்மைப் பாதுகாத்துத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இதெல்லாம் என்ன செலவு! நண்பன் வ.வே.சு.வின் குரல் ஏளனம் செய்கிறது. ஆம், இந்த முதுமையை நீ எப்படிப் பெற்றாய்? “எவ்வளவு செலவில் வாங்கிய முதுமை!”. வ.வே.சு.வின் கவிதை வரிதான் அந்த ஏளனத்தைச் சுமந்து வருகிறது. கூடவே ஒரு பெருமூச்சு! எண்ணிப் பாருங்கள், consider and count என்ற இரண்டு பொருள்களிலும் எண்ணிப் பாருங்கள். எத்தனை நாட்கள், மணித்துளிகள், நொடிகள், எத்தனை ஸ்வாசங்கள், கோபதாபங்கள், வெடிச்சிரிப்புகள், வெற்றுப் பேச்சுகள், மற்றவரை நோகடித்த பொழுதுகள், எத்தனை செலவு செய்து இந்த முதுமையை யாசித்துப் பெற்றோம்!

தம் முதுமையையும், உடல் தளர்ச்சியையும்.பொருட்படுத்தாமல், தாம் யார்யாரைப் பாராட்ட வேண்டுமோ, அவரவரை மனம்திறந்து பாராட்டவும், தாம் ரசித்ததை மற்றவர்களோடு உற்சாகமாகப் ப்கிர்ந்து கொள்வதற்கும் தினமும் ஒரு விழா, ஒரு நிகழ்வு என்று சற்றும் யோசிக்காமல் வலம் வந்து கொண்டிருக்கும் என் இலக்கியத் தந்தை ஒளவை நடராஜன் போன்ற பெருமக்களே சோர்வகற்றி ஊக்கம் தரும் சான்றோர்.

ஒரு மெல்லிய பெருமூச்சுடன் 22 ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய கவிதையுடன் இந்தச் சிந்தனையிலிருந்து இப்போதைக்கு விடைபெறுகிறேன்: Read the rest of this entry »

 

எந்த முகவரியில் தன் ஆறு சகாக்களையும் கண்டானோ -கே. என். சிவராமன்

10429846_10206100385818235_2665674475978084583_nப்ளஸ் 2 முடித்தபோது அவனுக்கு வயது பதினேழு. ஷார்ட் ஹேண்ட், டைப்ரைட்டிங்கில் கில்லாடி. காற்றுக்கு சமமாக கீ போர்டில் பயணிப்பதில் கெட்டிக்காரன். எனவே அமைந்தகரையில் இருந்த அந்த நிறுவனத்தில் ஸ்டெனோவாக வேலைக்கு சேர்ந்தான்.
அடுத்த மூன்றாண்டுகளில் நம்பர் 5, 2வது லைன் பீச் சாலையில் இயங்கி வந்த அந்த லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தான். முன்பை விட கொஞ்சம் சம்பளம் அதிகம். ஆனால், பணி நேரம் அதிகம். ஆபீஸ் பாயில் ஆரம்பித்து, குப்பைகளை பெருக்குவதில் தொடங்கி சகலமும் அவனே. பெரும்பாலான நாட்கள் அலுவலகத்திலேயேதான் உறங்குவான். அலுவலக பூட்டு அவனால்தான் திறக்கப்படும். அவன் கரங்களால்தான் பூட்டப்படும். சாவியின் அளவு எப்படியிருக்கும் என்று கூட நிறுவன முதலாளிக்கு தெரியாது.
எந்த நேரத்தில் உறங்கினாலும் அதிகாலை 4.45க்கு எழுந்து விடுவான். 5 மணிக்கு பீச் ஸ்டேஷனில் இருப்பான். 6 மணிக்குள் அம்பத்தூரில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்து விடுவான்.
அவன் அம்மா அவனுக்காகவே காத்திருப்பார். சுடச்சுட டிபன், உணவு தயாராக இருக்கும். குளித்துவிட்டு சாப்பிடுவான். டிபன் பாக்ஸுடன் அலுவலகத்துக்கு கிளம்பி விடுவான். சரியாக கடிகார முள் பத்தை தொடும்போது அலுவலக மேஜை நாற்காலிகளை துடைத்து சுத்தமாக வைத்திருப்பான். Read the rest of this entry »

 

கடவுளின் சிருஷ்டியில்….

கடவுளின் சிருஷ்டி தன்னில்
காலங்கள் மாறிப் போகும்;
இடம்,பொருள்,ஏவல் என்னும்
இலக்கணம் பொய்யே ஆகும்!

மலைகளும் மடுக்க ளாகும்;
மடுக்களும் மலைக ளாகும்;
நிலை எலாம் மாறி மாறி
நிஜங்களும் பொய்களாகும்!

தலைமுறை மாறிப் புதிய
தத்துவம் தலையைத் தூக்கி
அலைகளைப் போல தோன்றி
அடுத்ததே புதுமை யாகும்! Read the rest of this entry »

 

காதல் என்பது எப்படியெல்லாமோ நண்பர்களால் இங்கே விரிவாக்கப்பட்டிருக்கிறது!

காதல் என்பது எப்படியெல்லாமோ நண்பர்களால் இங்கே விரிவாக்கப்பட்டிருக்கிறது, அதில், குறிப்பாக வயதான தம்பதிகளின் காதலை குறிப்பிட்டு, அவர்களின் காதலில் கூட காமம் இருக்க முடியுமா என்று சிலர் வினா எழுப்பி இருப்பதைப் பார்த்து, நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன். காரணம், உடலுறவும் இன்ன பிற தூண்டுதல்களும் மாத்திரமே காமம் என்று கட்டுப்படுத்தப்பட்ட சமூக நியாத்துக்குள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில், காமம் என்பது நாம் மனதில் வரைந்து வைத்திருக்கும் அவ்வகை செயல்களில் மாத்திரமன்று, அது வயதையும் உணர்வுகளையும் சார்ந்த ஒன்று. உதாரணமாக, உங்கள் பசிக்கு 10 ஆப்பம் போதும் என்றால், வயதான எனக்கு 3 போதுமானதாக இருக்கிறது.

துணையின் பல் செட்டை சரி செய்வதிலிருந்து, முதுகு சொறிந்து விடுவது, படுக்கையில் தேக சூட்டினை பெறுவது என்பது வரை, காதல் அங்கே மென்மையாய் கரைபுரளுகிறது. டாம், டீம் என்றும், டமால், டுமீல் என்றும், துள்ளலும், துடிப்பும், சப்தமும் பாய்ச்சலும் மட்டும்தான் காதல் என்று சொல்ல முனைவோமேயானால், அனுபவசாலிகள் அது காதலாக இருக்க முடியுமா என்று கூட கேள்வி எழுப்பலாம், காரணம்; காதல் மிக மிருதுவானது, செய்கைகள் மட்டுமின்றி, இதயத்தின் இன்ப உணர்வுகளால் அது பேணப்படுகிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 14, 2015 in 1

 

Tags:

மலிரினும் மெல்லிய காதல்…. (நிலைமண்டில அகவற்பா) – இராஜ. தியாகராஜன்

தனக்குத்தானே ஒருதலையாக அன்பினை வளர்த்துக் கொண்டு இருபாலரும், தான் காதலிப்பவரை உள்ளத்தால் காயப்படுத்துவது போதாதென்று, உடலாலும் துன்பப்படுத்தவும் தலைப்பட்டுவிட்ட இந்த காலத்தில், உள்ளத்தில் உணர்வூறி, மெய்மையான எண்ணங்கள் மட்டுமே துணையாக, ஒருவரையொருவர் அவரவரிடத்தே இருக்கின்ற குற்றங்குறைகளுடனே ஏற்று, ஒருவர்க்காக மற்றவர் விட்டுக் கொடுத்து, செம்புலப்பெயல் நீரார் சொன்னது போல, அன்புடை நெஞ்சங்கள் ஒன்றெனக் கலக்க, ஆண்/பெண் இருபாலரையும் ஆட்கொள்ளும் காதலென்ற மிக மேன்மையான அன்பினை வாழ்த்தி, அப்படிப்பட்ட அன்பர்களையும் வாழ்த்தி, என்னுடைய வரிகள் இந்நாளுக்காக; இல்லையில்லை இன்னாளுக்காக: Read the rest of this entry »

 

Tags: