RSS

டெல்லி தேர்தல் பாடங்கள் புதிய அடையாளம்

12 Feb

டெல்லி தேர்தல் முடிவு பற்றி ஆளாளுக்கு அலசுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன் இப்படி ஓட்டுகளை மக்கள் வாரி வழங்கினார்கள் என்று புரியாமல் எல்லா கட்சிகளும் கையை பிசைகின்றன.

ஓட்டு போட்ட மக்களிடமே கேட்டுவிட்டால்..? புதிய அடையாளம் கேட்டது. அவர்கள் ஆளுக்கொரு பதில் சொன்னார்கள். எல்லாமே சரியென்று தோன்றியது. கீழே படியுங்கள். வேறு மாதிரி தோன்றினால் இங்கே பகிருங்கள்.

01.காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே பிடிக்கவில்லை.

02.சென்ற முறையும் அதற்குதான் போட்டேன்.

03.ராஜினாமா செய்ததற்கு மன்னிப்பு கேட்டார் கேஜ்ரிவால்.

04.சிவப்பு விளக்கு கார்களையும் ஊழலையும் ஒழிப்பதாக ஆம் ஆத்மி சொன்னது.

05.குடிநீர், மின்சாரம் மலிவாக தருவதாக அக்கட்சி வாக்கு தந்தது.

06.அரவிந்த் கேஜ்ரிவால் படாடோபம் இல்லாதவர்.

07.கேஜ்ரிவாலை இரண்டு கட்சிகளும் மோசமாக கேலி செய்தன.

08.துடைப்பம் சின்னம் எனக்கு பிடிக்கும்.

09.ஆம் ஆத்மி இளைஞர்கள் கட்சி. பெண்கள் அதிகம்.

10.தொல்லை தராமல் பிரசாரம் செய்தது ஆம் ஆத்மி.

11.மோடி சொன்னது எதையும் செய்யவில்லை.

12.மாநகராட்சியில் பிஜேபி லட்சணம் தெரியுமே.

13.ஏழைகள் பக்கம் என்பவர் 10 லட்சம் ரூபாய் கோட் சூட் போடலாமா?

14.பிஜேபி கவனம் ஷேர் மார்க்கெட் மீதுதான்.

15.கேஜ்ரிவாலை காட்டுக்கு அனுப்ப சொன்னார் மோடி.

16.அரவிந்த் ஜாதியை திட்டி பிஜேபி விளம்பரம் கொடுத்தது.

17.தேவையில்லாமல் கிரண் பேடியை முன்னிறுத்தியது பிஜேபி.

18.என் அக்கவுண்டில் அரசு இன்னும் 15 லட்சம் போடவில்லை.

19.ஏழெட்டு முதல்வர்கள், 200 எம்.பி.க்கள் என்று கும்பல் சேர்த்து ஊரை நாஸ்தியாக்கியது பிஜேபி.

20.ஆளும் கட்சியின் பண பல அட்டகாசம் அதிகமாகி விட்டது.

21/சர்ச்சுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.

22.இந்து பெண்கள் 10 குழந்தை பெரா சொல்கிறார்கள் பிஜேபி ஆதரவு சாமியார்கள்.

23.இந்து மதத்துக்கு திரும்பிவர சங் பரிவார் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.

24.எப்படியும் ஜெயிப்போம் என்று பிஜேபி தலைவர் ஆணவமாக சொன்னார்.

25.தன்னை விட்டால் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடையாது என்று மோடி பேசுவதை தாங்க முடியவில்லை.

26.மற்ற கட்சிகளை பலவீனப்படுத்தி ஆதாயம் தேடுகிறது பிஜேபி.

27.காங்கிரசுக்கு ஓட்டு போட்டு பிரயோசனம் இல்லை.

28.சிவப்பு விளக்கு கார் வேண்டாம் என்று மற்ற கட்சியினர் உறுதிமொழி தரவில்லை.

29.கேஜ்ரிவால் முதல்வராக இருந்த 49 நாளும் அரசு, மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் கேட்கவில்லை.

30.உயர் அதிகாரிகளும் போலீசும் ஆம் ஆத்மிக்கு எதிராக செயல்பட்டனர்.

31.மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள சொன்னார் கேஜ்ரிவால்.

32.மனைவிக்கு மரியாதை கொடுக்கிறார் கேஜ்ரிவால்.

33.மற்ற தலைவர்கள் கேவலமாக திட்டியும் கேஜ்ரி கெட்ட வார்த்தை பேசவே இல்லை.

34.ஐந்தாண்டு ஆட்சி செய்து பார்த்தால்தான் அரவிந்துக்கு புத்தி வரும் என நினைத்தேன்.

35.இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற டெல்லியில் பிள்ளையார் சுழி போட விரும்பினேன்.

தகவல் தந்தவர் கதிர்வேல்

kathirkathirvaelநன்றி

puthiyaadaiyalam

http://puthiyaadaiyalam.in/User/Editorial/19#.VNub24X9L2E.facebook

 
Leave a comment

Posted by on February 12, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: