RSS

காதல் என்பது எப்படியெல்லாமோ நண்பர்களால் இங்கே விரிவாக்கப்பட்டிருக்கிறது!

14 Feb

காதல் என்பது எப்படியெல்லாமோ நண்பர்களால் இங்கே விரிவாக்கப்பட்டிருக்கிறது, அதில், குறிப்பாக வயதான தம்பதிகளின் காதலை குறிப்பிட்டு, அவர்களின் காதலில் கூட காமம் இருக்க முடியுமா என்று சிலர் வினா எழுப்பி இருப்பதைப் பார்த்து, நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன். காரணம், உடலுறவும் இன்ன பிற தூண்டுதல்களும் மாத்திரமே காமம் என்று கட்டுப்படுத்தப்பட்ட சமூக நியாத்துக்குள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில், காமம் என்பது நாம் மனதில் வரைந்து வைத்திருக்கும் அவ்வகை செயல்களில் மாத்திரமன்று, அது வயதையும் உணர்வுகளையும் சார்ந்த ஒன்று. உதாரணமாக, உங்கள் பசிக்கு 10 ஆப்பம் போதும் என்றால், வயதான எனக்கு 3 போதுமானதாக இருக்கிறது.

துணையின் பல் செட்டை சரி செய்வதிலிருந்து, முதுகு சொறிந்து விடுவது, படுக்கையில் தேக சூட்டினை பெறுவது என்பது வரை, காதல் அங்கே மென்மையாய் கரைபுரளுகிறது. டாம், டீம் என்றும், டமால், டுமீல் என்றும், துள்ளலும், துடிப்பும், சப்தமும் பாய்ச்சலும் மட்டும்தான் காதல் என்று சொல்ல முனைவோமேயானால், அனுபவசாலிகள் அது காதலாக இருக்க முடியுமா என்று கூட கேள்வி எழுப்பலாம், காரணம்; காதல் மிக மிருதுவானது, செய்கைகள் மட்டுமின்றி, இதயத்தின் இன்ப உணர்வுகளால் அது பேணப்படுகிறது.

உண்மைக் காதல், சாதல் வரை கூட வரும் என்பது காதலின் அடிப்படை அரிச்சுவடி. காமம் இன்றி காதல் இல்லை என்று சொல்ல வருவது மனம் ஒப்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது, நடைமுறைக்கு மாற்றமான வார்த்தைகளுக்கு பலம் இருக்காது. தாய், சகோதர சகோதரிகள், குரு, பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், அதற்கும் மேலாய் இறைவன், அதை தொடர்ந்து நம் நபி பெருமானார் மீது வைத்திருக்கும் பற்று இவையெல்லாம் காதலில் வருவதில்லையா என்று கேட்டால், நம் காதலை, காதல் என்று பொருந்திக் கொள்ளாத எதுவும் காதல் இல்லைதான் என்றே எளிதில் பதில் கூறி விட முடியும்.

குழப்பம் நம்மிடம் இருந்து கொள்ளட்டும், அதை காதலில் கொண்டு கரைத்து விடும் எண்ணம் வேண்டாம்

10858410_509656449177069_5663572308532446822_nRaheemullah Mohamed Vavar

காமம் மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும்.பாசம் மட்டுமே காதலென்றால் ஒரு நாய்க்குட்டி போதும். பாசமும் காமமும் விகிதாச்சார வித்தியாசங்களில் விளைந்திருக்கின்றன, அவரவர் மனப்பாங்கிலும் அவரவர் குணப்பாங்கிலும்.

வேறுபடும் புள்ளிகள் செலுத்துபவரை மட்டுமின்றி செலுத்தப்படுபவரையும் பொருத்திருக்கின்றன

1044605_10202783171480972_1267678766_nFakhrudeen Ibnu Hamdun

காதலில் காமம் உண்டு .காமத்தில் காதல் இல்லை .ஈர்ப்பு இல்லையேல் இரண்டும் இல்லை .இரண்டும் சேர ஒரு வெளிப்பாடு .இரட்டைக்குழல் துப்பாக்கித்தான் !

நான் காதலித்துக் கொண்டே இருக்கின்றேன்
எனது காதல் நாட்களுக்குள் அடங்காது
எனது காதல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்
எனது காதல் சுவனத்தில் நிச்சயிக்கப்பட்டது

10919056_10203723449389082_4837386440501492336_nMohamed Ali

காதலிப்போரும்
காதலித்தோரும்
காதலிக்காதோரும்
காதலை எதிர்ப்போரும்
காதலைப் பற்றியே நினைக்க வைத்ததனால்
இது காதலர் தினமல்ல,
காதல் தினம்..!!

1525450_466503866826869_5088817348350159500_nநிஷா மன்சூர்

காதலர் தினம் பிப்ரவரி 14
அதற்கு கனடாவில் விடுமுறை கிடையாது.
குடும்ப தினம் பிப்ரவரி 16
அதற்கு கனடாவில் விடுமுறை உண்டு

என்றால் என்ன அர்த்தம்

10565219_854867637871744_857517937859676042_nஅன்புடன் புகாரி

 

Advertisements
 
Leave a comment

Posted by on February 14, 2015 in 1

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: