RSS

Monthly Archives: March 2015

சொல்லத் தோணுது 26: பயிரைக் கொல்லும் வேலிகள் – தங்கர் பச்சான்

சொல்லத் தோணுது 26: பயிரைக் கொல்லும் வேலிகள்

unnamed2
எங்கும் கால் வைக்க முடியாதபடி நாற்றமெடுத்த ஊழல் சாக்கடையும், ஒழிக்கவே முடியாத லஞ்சமும், எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என வரம்பு மீறிய வன்முறைகளும், சட்டம், நீதி, காவல்துறை என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையற்றுப்போன வரண்ட மனநிலையும், பணம், பணம் என ஓடிக்கொண்டே எதிர்வீட்டுக்காரனின் பெயர் தெரியாமலேயே நூறு ஆண்டுகள் வாழ்வதற்காக உடல் நலத்தைப் பேணுகின்ற மக்களும் நிறைத்துவிட்ட இந்த நாட்டிற்கு விடிவு எப்பொழுதுக் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என யாராவது சொல்ல முடியுமா?

முன் ஏர் எப்படிப் போகிறதோ அதைப்பின் தொடர்ந்துதான் மற்ற ஏர்களும் போகும். அதுவே வளைந்து நெளிந்து கோணல் மாணலாகப் போகும்போது மண்ணுக்குள் கிடக்கின்ற விதைகளின் நிலைதான் இங்கு மக்களின் நிலையாகவும் இருக்கிறது.

உழைத்துப் பிழைக்க வேண்டிய மக்கள் ஏய்த்துப் பிழைக்கவும், அடித்துப் பிழைக்கவும், கொடுத்துப் பிழைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சத்தைக் கொடுக்கவும் வாங்கவும் இங்குத் தயாராக இருக்கின்றபோது அதனை வாங்க மறுப்பவர்கள்தான் பெரும் குற்றவாளி எனும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். பணமில்லாமல் தேர்தலில் போட்டியிடுபவர்களை மக்கள் பரிதாபத்தோடுப் பார்க்கிறார்கள். மக்கள்தான் அப்படியென்றால் அவர்களை வழி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு கருத்துரிமைக்காக வரிந்துகட்டுகின்ற பெரும்பான்மையான ஊடகங்களும் அவற்றின் கடமைகளைச் செய்யத் தவறிவிடுகின்றன.. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on March 31, 2015 in 1

 

ஆகவே, மக்களே…. Becareful!

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அரசு நிறுவனங்கள்தான் அந்த நிறுவனத்தின் பிரதான கிளையண்ட்கள். எனவே நிறைய டெண்டர் விளம்பரங்களை அவர்கள் வெளியிட வேண்டியிருக்கும். அதையெல்லாம் ப்ரூஃப் பார்க்க இரண்டு பிழைதிருத்துநர்கள் இருந்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘இந்து’வில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.

Leading advertising agency need Copywriters/Proof readers. Attractive Package. Apply to Post Box No. so and so…..

இரண்டு நாட்கள் கழித்து ஒரு ப்ரூஃப் ரீடரை எம்.டி. அழைத்தார். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 30, 2015 in 1

 

போலிகள் ஜாக்கிரதை !?

போலிகள் ஜாக்கிரதை !? அதிரை மெய்சாவின் 150 வது படைப்பு !

150ஒருகாலத்தில் வெளுத்ததெல்லாம் பாலாகவும் போலிஎன்றால் என்னவென்று அதன் பொருள் கூட சரியாகத் தெரியாமாலும் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த அளவுக்கு உணவு, உடை, மனம், எண்ணம், பேச்சு, நட்பு, உறவு,என அனைத்தும் போலி இல்லாமல் எல்லாமே சுத்தமாக இருந்தது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் வெகுளித்தனமாக பிறரை ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.

ஆனால் இன்றைய நிலையோ எதையும் நம்பமுடியாத காலமாக மாறிவிட்டது. காரணம் போலி என்பது இப்படித்தான் இருக்கும் இதுதான் போலி என்று இனம்கண்டுபிடிக்கமுடியாமல் எல்லாவற்றிலும் கலந்து யூகிக்க முடியாத அளவுக்கு நம்மை சூழ்ந்து பலதரப்பாக அசலைப் போல் வேடமிட்டு வலம் வந்து கொண்டிருக்கிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 26, 2015 in 1

 

எதையும் அலட்சியப்படுத்தாதீர் !?

Dont-ignoreமனிதன் இவ்வுலக வாழ்வை சீராக செம்மையாக நகர்த்திச்செல்ல ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியமாகிறது. அப்படி கவனமுடன் செயல்பட மிக முக்கியமாக நாம் எதையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.

அலட்சியப் போக்கினால் அன்றாடம் எத்தனையோ விபரீத நிகழ்வுகள் விபத்துக்கள் , உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், பரிதாப நிகழ்வுகள் என பல வகை நிழ்வுகள் ஏற்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டும் கேள்விப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.சின்னச்சின்ன அலட்சியம் கூட சிலசமயம் பேராபத்தைக் விளைவித்துவிடும். Read the rest of this entry »

 

ஒருநாள் போதுமா?!

ஆயுளுக்கும் தீராக் கடன்.
ஆண்டுக்கொரு வாழ்த்தில்
அடைப்ப தெங்ஙனம்?

காலந்தோறும்
கைப்பிடிக்கும் துணை.
கணக்குப் பார்த்தால்
காலம் போதுமா?

முழு வாழ்வை வசந்தமாக்கும்
முத்தனைய அன்பும்
மனம் நிறைக்கும் ஆலோசனையும்.
ஒற்றை நாளில் நன்றி
உரைத்துக் கழியுமோ?

என்றாலும்… Read the rest of this entry »

 

தளும்பும் புத்தகத்தால் தள்ளாடும் நடை…..

10556323_950352291665557_8639950434531028323_n

தளும்பும் புத்தகத்தால்
தள்ளாடும் நடை;
உண்மையானக்
குடிமகன்கள்!

வருங்காலச் சுமைக்கு
ஒத்திகை;
கனமானத் திட்டத்தால்
நிறைவானது எங்கள் பை!

பால் சோறு
ஊட்டிவிட அம்மாவைத் தேடும்;
பாழாய்ப் போன
புத்தகத்தைத் தூக்க
சிறு பயில்வானாய் நான்! Read the rest of this entry »

 

அழுகைதான் மனித நாகரிகத்தின் முதல் படி

10250322_675639732482679_222954225213308352_n

அழுகைதான்
மனித நாகரிகத்தின்
முதல் படி

ஆண் அழுவது
அழகல்ல என்பது
அழகல்ல Read the rest of this entry »

 

Tags: