RSS

ஒருநாள் போதுமா?!

09 Mar

ஆயுளுக்கும் தீராக் கடன்.
ஆண்டுக்கொரு வாழ்த்தில்
அடைப்ப தெங்ஙனம்?

காலந்தோறும்
கைப்பிடிக்கும் துணை.
கணக்குப் பார்த்தால்
காலம் போதுமா?

முழு வாழ்வை வசந்தமாக்கும்
முத்தனைய அன்பும்
மனம் நிறைக்கும் ஆலோசனையும்.
ஒற்றை நாளில் நன்றி
உரைத்துக் கழியுமோ?

என்றாலும்…

தெய்வமாக்கி விடுகிறோம்
இல்லையேல்
தாசியாக்கி விடுகிறோம்.

பார்த்ததேயில்லை
மனித நாணயத்தின்
மறுபக்கமாக.

எங்களின்
குற்ற உணர்ச்சிக்குக்
குறுகிய ஆறுதலாக

அன்னையர்க்கும்
அருந்தவச் சோதரியர்க்கும்
தன்னையே ஈந்தளிக்கும்
தனித்துவ மனைவியர்க்கும்
இன்னுமின்னும் தோழர்க்கும்
இதயத்தில் மலர்ந்தோர்க்கும்

இனிய இதய மகளிர் நாள் நல்வாழ்த்துகள்

என்னுடைய மகளிர் நாள் கவிதை: (விரலோட்டமாக எழுதியது)

19524_10205924072641538_6434549327516572090_nFakhrudeen Ibnu Hamdun
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: