RSS

ஆகவே, மக்களே…. Becareful!

30 Mar

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அரசு நிறுவனங்கள்தான் அந்த நிறுவனத்தின் பிரதான கிளையண்ட்கள். எனவே நிறைய டெண்டர் விளம்பரங்களை அவர்கள் வெளியிட வேண்டியிருக்கும். அதையெல்லாம் ப்ரூஃப் பார்க்க இரண்டு பிழைதிருத்துநர்கள் இருந்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘இந்து’வில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.

Leading advertising agency need Copywriters/Proof readers. Attractive Package. Apply to Post Box No. so and so…..

இரண்டு நாட்கள் கழித்து ஒரு ப்ரூஃப் ரீடரை எம்.டி. அழைத்தார்.

“என்ன சார், வேலை புடிக்கலையா?”

“அப்படியெல்லாம் இல்லைங்க சார். ரொம்ப திருப்தியாதான் இருக்கு”

“அப்புறம் எதுக்கு வேற வேலைக்கு அப்ளை பண்ணுறீங்க?”

“அய்யய்யோ… யாரோ உங்க கிட்டே தப்பா போட்டு கொடுத்திருக்காங்க…”

Post box no. so and soவுக்கு ப்ரூஃப் ரீடர் அனுப்பி வைத்திருந்த அப்ளிகேஷனை எடுத்து மேஜை மீது போட்டார் எம்.டி.

“நம்ம கம்பெனிக்கே திரும்ப அப்ளை பண்ணிட்டீங்க. பரவாயில்லை. அப்ளிகேஷனிலே நீங்க கேட்டிருந்த சம்பளத்தையே உங்களுக்கு ரிவைஸ் பண்ணியிருக்கேன். வேற வேலை தேடுறதா இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க சார்”

ஆகவே, மக்களே….

Becareful!

yuvakrishnaYuva Krishna
 
Leave a comment

Posted by on March 30, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: