RSS

Monthly Archives: April 2015

எழுத்துப் பிழை வருமோ..?

11173597_556518147823560_1140571043_nஅகரம் சொன்ன
வள்ளுவனே
உன் ஆதிபகவனுக்கும்
எழுத்துப் பிழை வருமோ..?

விபரமறிந்த அவனும்கூட
விதியென்ற கிறுக்கலுக்கு
வீணுக்காய் கிறுக்கிய
தலை கிறுக்கல் இதுதானோ

ஊழ் வினையெனச்சொல்லி
ஊரார் நெஞ்சுடைக்க
கூன் படைத்த குயவன் தான்
நீசொன்ன பகவனோ. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on April 28, 2015 in 1

 

எப்போதும் எல்லோருடைய ஆசைகளையும்

எப்போதும் எல்லோருடைய ஆசைகளையும்
நிறைவேற்ற முடிந்ததேயில்லை
சில நிறைவேற்றல்கள் அனுமதித்தலாகவும்
சில நிறைவேற்றல்கள் சமரசமாகவும்
சில நிறைவேற்றல்கள் சமாதானப்படுத்தலாகவும்
சில நிறைவேற்றல்கள் அடையாளங்களாகவும்
உருமாற்றம் கொண்டு விடுகின்றன.

எனினும் சில நேரங்களில்
சிலவற்றைச் செய்து முடிக்கிறோம்.
அதன்மூலம் நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் மனோபிம்பங்களை
வார்த்தைகளால் உடைக்கமுயன்று பரிதாபமாகத் தோற்கிறோம் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 26, 2015 in 1

 

பொறுமை கால் கிலோ கொடுங்க!

11181175_10153238924416575_5723876684857941534_n“…. சே இந்தப் பிள்ளைகளுக்கு ‘லீவு’ விட்டாலே போதும். தாங்க முடியவில்லை…. லீவு நாளில் கூட நமக்கு வேலை வைக்கிறார்கள்..“ என்று சலிப்புடன் கடையின் உள்ளே வந்தார் அந்த அம்மா!

நான் ஏற்கனவே ஆயிஷாவுடன் அந்தக் கலைப்பொருள் மற்றும் கைவினைப்பொருட்கள் கடையில் சில காகித கைவினைப் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தேன்.

“என்ன சார் உங்களையும் உங்க பொண்ணும் விடவில்லையா?” என்று சிரித்துக் கொண்டே என் பக்கம் திரும்பினார். அத்தோடு, “காசுக்குப் பிடிச்ச கேடு சார்!” என்று வேறு நொந்து கொண்டார்.

“ஏம்மா உங்க பிள்ளைக்கு ஒரு கால் கிலோ பொறுமை எந்தக் கடையிலாவது உங்களால் வாங்கிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டேன்.

உடனே வேகமாய், “அது எங்கே சார் கிடைக்கும் சொலுங்க? அதுதான் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நிறையவே தேவை!” என்று மடக்குவதாய் சிரித்தார். Read the rest of this entry »

 

வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் !

2242தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 21, 2015 in 1

 

சூரியன் உன் முகத்தில் உதித்தபோது…..!! -நிஷா மன்சூர்

984306_644464712364116_4521458737982338117_n

விடியலுக்கு முன்னமே அத்தனை பிரகாசமாய்
ஒளிரத்துவங்கி விடுகிறது உன் முகம்,
இரவின் சோர்வுகளற்று அத்தனை புத்துயிர்ப்பாய்
மலரத்துவங்கி விடுகிறது உன் முகம்.

கலவிக்குப் பிறகான ஒவ்வொரு குளியலிலும்
ஒரு திரை அகற்றப் படுகிறது.
அது ஒருமைக்கெதிரான இருமையின் திரை,
நான் நீ என்கிற பிரிவினையின் திரை,
அக அழுக்குகளின் தயக்கத்திரை,
கருத்து வேறுபாடுகளின் சலனத்திரை,
அகங்காரமுனைப்பின் மாயத்திரை. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 20, 2015 in 1

 

நீலவேணி

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா பாவிகளும் ஆசைப்படுகிறார்கள். இது என் பிறப்பின் வரமா சாபமா?

“பரிகாரி”

பரிவு காட்டுவதைப் போன்ற நாடகத்தொனியில் அவன் அழைத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் கேளாதது போல வாளாவிருந்தேன். நானென்ன அவன் மனைவியா. அழைத்ததுமே போக.

மீண்டும் குரலுயத்தி அழைத்தான். “பரிகாரீஈஈஈஈஈஈஈஈ”

ஜனநடமாட்டம் அதிகரித்திருந்த முன்மாலைப் பொழுது. சந்தையே திரும்பிப் பார்த்தது. நான் திரும்பவில்லை.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். பைஜாமாவை தட்டி மணலை உதறினான். கையில் சவுக்கை எடுத்தவாறே என்னைப் பார்த்தான். இந்த அதட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கு நானா அஞ்சுவேன். அவனுடன் நின்றுகொண்டிருந்த தடியனை கண்டதுமே எனக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவன் அணிந்திருந்த கரும்பச்சை நிற குல்லா.

‘ப்பட்..’ என் முதுகை சவுக்கு முத்தமிட்ட சப்தம். அடிக்கடி வாங்கி பழக்கப்பட்டு விட்டாலும் ‘களுக்’கென்று ஒரு துளி நீர் கண்களில் கோர்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இந்த ஊடுருவும் பார்வைதான் எனக்கு பிரச்சினை. உடல் கூசுகிறது.

“திமிர் பிடித்தவள். யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அட்டகாசமானவள். ஆசைப்பட்டுதான் நல்ல விலைக்கு பிடித்தேன். நீயும் ஆசைப்பட்டு கேட்கிறாய். இருமடங்கு கூடுதல் விலைக்கு தருவதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?”, குல்லாக்காரனிடம் இவன் கறைபடிந்த பற்கள் பளிச்சென்று தெரிய, அசிங்கமாக இளித்துக்கொண்டே சொன்னான். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 14, 2015 in 1

 

Tags:

மனசாட்சி !

உள்ளமதில் நிலைகொண்டு
உண்மைதனை உரக்கச்சொல்லி
மனிதநேயம் மாறிடாது
மனதினுள்ளே ஒரு சாட்சியாய்
மதிசெய்திடுமோர் ஆட்சியாம்

கண்காணா தவறுகளை – இனம்
காண்பது மனதன்றோ
கல்நெஞ்ச மனம்கூட
கரைந்திடுமே மனசாட்சியாலே Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 14, 2015 in 1