RSS

சரி நானும் சீரியசாகவே எழுதுறேன்.

12 Apr

இங்கே யாரோ ஒரு பதினாறு வயது பையன் யாரோ ஒரு இருபத்தாறு வயது பெண்ணை இழுத்துக்கொண்டு போயிருந்தால் இந்த அளவுக்கு நிலைமை சீரியசாகியிருக்காது. அதை காதல், காமம், இனக்கவர்ச்சி என்று ஏதாவது ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிட்டு வேலையை பார்த்திருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இங்கே பேசு பொருளாகியுள்ளது ஆசிரியை மாணவன் என்ற உன்னதமான புனித உறவுதான்.

ஆசிரியை என்பவர் மாணவருக்கு நல்லொழுக்கத்தை போதிக்கும் தலையாய கடமையிலிருப்பவர். நாட்டின் எதிர்கால சிற்பிகளை உருவாக்குவதில் முதலிடம் இவர்களை போன்றவர்களுக்குத்தான். அப்படிப்பட்டவர் தன் கடமையிலிருந்து தவறி கல்வியை விடுத்து கலவியை சொல்லிக்கொடுப்பது என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க விஷயம்தான்.

ஆசிரியர் என்பவர்கள் மாணவர்கள் அனைவரையும் தன் குழந்தையாகத்தான் பாவிக்க வேண்டும். அந்த பையனுக்கே அப்படி ஒரு நினைப்பிருப்பினும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை எடுத்துச்சொல்லி அந்த ஆசையை ஆரம்பத்திலேயே களைந்திருக்க வேண்டும் அந்த ஆசிரியை. ஆனால் அவரும் சேர்ந்து எண்ணை வார்த்திருக்கிறார். அல்லது முதல் தவறு அந்த ஆசிரியை மீதிருந்தாலும் மாணவனிடமா நம் இச்சையை தீர்த்துக்கொள்ள வேண்டும்? என்று நினைத்து அந்த ஆசைக்கு ஆரம்பத்திலேயே அணை போட்டிருக்க வேண்டும். அவர்தான் நல்லாசிரியையாக இருக்க முடியும். இப்படி ஓடியிருக்கக்கூடாது.

இனி இவரைப்போலவே எல்லா ஆசிரியைகளையும் மாணவர்கள் நினைத்துவிட்டால், நம்மளும் முயற்சி செய்து பார்க்கலாமோ என்ற நினைப்பை கொடுத்துவிட்டால் பள்ளி அறை என்பது எதிர்காலத்தில் பள்ளியறையாக மாறிவிடும். கல்வி என்பது கலவியாக மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

#‎ஆசிரியைத்துவம்‬.

ரஹீம் கஸாலி 10996431_946097365408751_4435269135728012718_n
 
Leave a comment

Posted by on April 12, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: