RSS

பொறுமை கால் கிலோ கொடுங்க!

24 Apr

11181175_10153238924416575_5723876684857941534_n“…. சே இந்தப் பிள்ளைகளுக்கு ‘லீவு’ விட்டாலே போதும். தாங்க முடியவில்லை…. லீவு நாளில் கூட நமக்கு வேலை வைக்கிறார்கள்..“ என்று சலிப்புடன் கடையின் உள்ளே வந்தார் அந்த அம்மா!

நான் ஏற்கனவே ஆயிஷாவுடன் அந்தக் கலைப்பொருள் மற்றும் கைவினைப்பொருட்கள் கடையில் சில காகித கைவினைப் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தேன்.

“என்ன சார் உங்களையும் உங்க பொண்ணும் விடவில்லையா?” என்று சிரித்துக் கொண்டே என் பக்கம் திரும்பினார். அத்தோடு, “காசுக்குப் பிடிச்ச கேடு சார்!” என்று வேறு நொந்து கொண்டார்.

“ஏம்மா உங்க பிள்ளைக்கு ஒரு கால் கிலோ பொறுமை எந்தக் கடையிலாவது உங்களால் வாங்கிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டேன்.

உடனே வேகமாய், “அது எங்கே சார் கிடைக்கும் சொலுங்க? அதுதான் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நிறையவே தேவை!” என்று மடக்குவதாய் சிரித்தார்.

“நீங்க இப்ப சரியான கடைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்; இங்கேயே ஒரு கால் கிலோ வாங்கிக்கிட்டு போங்க!, நானும் அதை வாங்குவதற்கே வந்திருக்கிறேன்” என்று நான் சொன்னதும் நான் கலாய்க்கிறேன் என்று நினைத்து முறைத்தது அந்த அம்மா மட்டுமல்ல; கடைக்காரரும்தான்.

விபரத்தைச் சொன்னவுடன் ஆச்சரியப்பட்ட அந்த அம்மா “பொறுமை” கால் கிலோ வாங்கிச் சென்றார். இவ்வளவு நாளாக இது தெரியாமல் “பொறுமை”யினை வெறும் காகிதம் என்று நினைத்து விற்றுக் கொண்டிருந்தேனே? புரியவைத்தமைக்காக உங்களுக்கு 20% கழிவு என்று அசத்திவிட்டார் கடைக்காரர்.

ஓ….. நீங்கள் பொறுமை இழந்ந்துவிட்டீர்களா?? இதைப் படியுங்கள்!

மெல்லிய காகிதக் கீற்றுகளை உருளைகளாக்கி பலவித வடிவங்களில் பொருள்களை உருவாக்கும் கலையின் பெயர்தான் Paper quilling.

இந்தக் கலையினை சிறுவர் சிறுமிகளுக்குப் பழக்குவதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை / சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவ முடியும். மேலும் இதன் வடிவங்களுக்கேற்ப உருளைகளைத் தயாரிப்பதற்கு நேரம் பிடிக்கும். இதனால் ஆர்வமிகுதியால் மும்முரமாய் தயாரிப்பில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகள் வேறு கவனச் சிதறல்களின்றி (பொறுமையுடன்) ஒருமுகப்படுத்தப்படுகின்றனர்.

இதன்வழி பொறுமை எனும் பொக்கிஷம் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது.

அடுத்ததாக இக்கலை, மூளையின் முக்கியப் பணியான, கண்களுக்கும் கைகளுக்குமான ஒருங்கிணைப்புப் பணியினை செம்மைப்படுத்துகிறது.

“பதறாக் காரியம் சிதறாது” என்பார்கள் இல்லையா? பொறுமையினைக் கற்றுக் கொடுக்கும் இந்தக் கலை, எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையிலும் அல்லது அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் திறனையும், கண்களுக்கும் கைகளுக்குமான ஒருங்கிணைப்புப் பயிற்சியின் மூலம் தருகிறது.

இதுமட்டுமன்றி, நுட்பமான வியூக சிந்தனை மேம்பாடு, இசை, விளையாட்டு, உடல்நலனில் அக்கறை, தெளிவான கையெழுத்து இப்படி ஏகப்பட்ட திறமைகள் இலவசமாக கிடைக்கும்.

ஹலோ…..ஹலோ… பொறுமை வாங்கப் போறீங்களா?
இந்த டிவி, வீடியோகேம் அனைத்தையும் மூட்டைகட்டிட்டுப் போங்க!!!

(படம்: ஆயிஷாவின் கைவண்ணத்தில் உருவான Paper Quilling Designs!!!)
10463006_10152464576066575_8128992156402105534_n
By: Rafeeq Friend
https://www.facebook.com/yesrafi?fref=photo

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: