RSS

Monthly Archives: May 2015

பத்திரிகைகள் காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்……./வாவர் F ஹபிபுல்லாஹ்

பத்திரிகைகள் காலத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடிகள்…….
AN UNTOLD STORY

11226567_10204255333652005_8893295237336454064_n40 வருடங்களுக்கு முன்னால்….
படித்தவர்கள பத்திரிகை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இப்போது போல் அப்போது சுடச்சுட செய்திகளை தரும் TV செய்தி சானல்கள் இருந்தது இல்லை. மக்கள் பெரும்பாலும் பத்திரிகைகளையே, நாட்டு நடப்பு செய்திகளுக்காக நம்பி இருந்த காலம் அது. பணம் கொடுத்து செய்தி பிரசுரிக்கும் கீழ்த்தரம் அன்றைய பத்திரிகை உலகில் இருந்ததில்லை. நல்ல கட்டுரைகளுக்காக,பேட்டிகளுக்காக, அந்த துறையில் சிறந்தவர்களை தேடி கண்டு பிடித்து, காத்திருந்து, செய்திகளை கைகளால் எழுதி எடுத்து, அதை பெரிய அளவில் எந்த திருத்தமும் செய்யாமல் அப்படியே பிரசுரிக்கும் “பத்திரிகை தர்மம்” கடை பிடிக் கப்பட்ட காலம் அது. அக்கால பத்திரிரிகை நிருபர்கள், ரிப்போர்டர்கள், எடிட்டர்கள், பத்திரிகை உரிமையாளர்கள் இவர்களிடம் இன்று போல் எந்தவித அடாவடித்தனமோ, பந்தாவோ இருந்ததில்லை. அடக்கமானவர் கள், மிகவும் எளிமையானவர்கள். Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on May 27, 2015 in 1

 

உயர்கல்விக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இப்போதைய கல்விமுறை மாணவர்களின் திறனை வளர்க்கும் தகுதி கொண்டதில்லை என்பதை வாதமாக முன்வைக்கிறார்கள். அதாவது CBSE போன்ற முறைகளோடு இது போட்டி போட முடியாது. நாட்டின் மற்ற பகுதிகளில் CBSE/ICSE போன்ற கல்வி முறைகளில் படித்துவிட்டு வந்தவர்கள் உயர்கல்விகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்கிற கருதுகோளை முன்வைக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை எந்தவொரு திட்டமுமே மிக சிறுபான்மையினரை பெரியளவுக்கு முன்னேற்றுவதை தவிர்த்து, முன்னேற்றத்தின் அளவு குறைவாக இருந்தாலும் பரவலான மக்களின் பயன்பாட்டை முன்னிட்டு நடத்தப்படும் mass movement ஆகவே திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடத்தப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் முதுகெலும்பான சமூகநீதி உணர்வுக் கொள்கைகளின் பார்வையில்தான் இதை புரிந்துக்கொள்ள இயலும். இது பலனளிக்கிறதா என்றால், அளிக்கிறது என்றுதான் பொருளாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள். அமர்தியாசென் இந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு தனி நாடாக இருந்திருக்கும் பட்சத்தில் தெற்காசியாவில் செல்வாக்கு மிக்க நாடாக இருந்திருக்கும் என்று குறிப்பிடுகிறார். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 22, 2015 in 1

 

நானே தான்……..இதுதான் அசல். …….

601844_657745194239007_179392506_nLks Meeran Mohideen

நானே தான்……..இதுதான் அசல். …….
மற்றதெல்லாமே …..
இதுக்குப் பின்னால்தான்.
நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்….
பெருமை கொள்கிகிறேன்……

கற்றது வணிகவியல்…..
செய்வது விவசாயம்…..
ஆடுகளோடும் …மாடுகளோடும் …..
.வயல்,வரப்புகள்,
மரங்கள்… ,செடி,கொடிகள்,
மற்றும் அதன் குளுமையான நிழல்களில்,
கடும்கோடைவெய்யிலில்,
மழையில்,……
காற்றில்,….வெக்கையில்,
என் பொழுதுகள்…. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 21, 2015 in 1

 

அன்றொரு நாள் இதே நிலவில்………

அன்றொரு நாள் இதே நிலவில்………
(எங்கள் பெருசுகளுக்கென்று ஒரு பதிவு)

கிளி ஒன்று கொடியில் அமரலாம்
கொடியில்
துணி காயப் போடுமா
போட்டதே !

மயிலொன்று தோகை விரிக்கலாம்
தாவணி விரித்து
வெயில் மறைக்குமா
மறைத்ததே ! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 18, 2015 in 1

 

பெறுவதும் ,இழப்பதும் … அவரவர் கையில் ….. பெற்றதை இழப்பதும் … அவரவர் சொல்லில்

ஏழ்மையில் மட்டும்தான் பகிர்ந்து உண்கிறோம் .
பணம் வந்ததும் பதுக்கிவைக்க கற்றுக்கொள்கிறோம் !…

நமக்கும் நன்கு பசிப்பதில்லை -பசித்த
அவன்வலி நாம் உணர்வதுமில்லை ….

அடிவலி உணர்ந்திருக்கிறோம் -வார்த்தை
அடிவலியால் அவனை வதைத்திருக்கிறோம் ….
ஏழ்மைவலி இப்போதெல்லாம் பெரிசில்லை ….
பணமாத்திரைக்குத்தான் மனசு பழகிவிட்டதே !…. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 18, 2015 in 1

 

சில்லுக் கருப்பட்டியே!

கருப்பு மேலாக்கும்,
காதோரம் லோலாக்கும்,
காத்துலதான் அலைபாய,
கஞ்சிசட்டி ஏந்திகிட்டு,
கரைமேலே போறவளே!
காக்கா அலம்புறது
காதுலதான் கேக்கலியோ?
செரவிக் கூட்டமெல்லாம்
சடசடன்னு போகயில
சஞ்சலத்தால் எம்மனசு
சருகாத்தான் ஆகலியோ?
சில்லுக் கருப்பட்டியே!
சிறுவந்தா டுடுத்தவளே!
சின்னமலை சிறுபழமே!
தெனந்தெனமும் ஒனக்காக
சீவன்நான் கிடக்குறனே
சிங்காரி ஒம்மனசு
சத்தே எறங்காதோ!
+============================+ Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 14, 2015 in 1

 

தானிய உணவுகள்!

2b91d9852a55922ad540656eca0079e7_XLதானிய உணவுகள்!

சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டு வயிற்றைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்று மளிகைக்கடை, காய்கறிக் கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை. முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.

சமைக்காத இயற்கை உணவுகள்: சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள், மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.

இந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள். வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் செரிமானமாகும் எளிய உணவுகள். நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை. எனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாறத் தயங்க வேண்டாம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 9, 2015 in 1