RSS

நானே தான்……..இதுதான் அசல். …….

21 May

601844_657745194239007_179392506_nLks Meeran Mohideen

நானே தான்……..இதுதான் அசல். …….
மற்றதெல்லாமே …..
இதுக்குப் பின்னால்தான்.
நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்….
பெருமை கொள்கிகிறேன்……

கற்றது வணிகவியல்…..
செய்வது விவசாயம்…..
ஆடுகளோடும் …மாடுகளோடும் …..
.வயல்,வரப்புகள்,
மரங்கள்… ,செடி,கொடிகள்,
மற்றும் அதன் குளுமையான நிழல்களில்,
கடும்கோடைவெய்யிலில்,
மழையில்,……
காற்றில்,….வெக்கையில்,
என் பொழுதுகள்….

நான் மட்டும் தானா இப்படி?
இல்லை ……
நாட்டில் பாதி பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.
காரணம்
அவர்கள் விவசாயிகள் என்று
சொல்லப் படுவதால்,
அப்படி ஒரு நிலை.

நான் பார்க்கும்
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம்
சொல்லிக் காட்ட முடியாதது…..

அவலங்கள் நிறைந்தது…..
கையில் காசில்லாவிட்டாலும்
மனசில் மாசில்லாதவர்கள் …
இன்னும் கிராமங்களில்
நிறைய இருக்கிறார்கள்…..

அவர்களின் ஒரே கனவு……
தம் பிள்ளைகள் தம்மைப் போல் வெய்யிலிலும் மழையிலும்
,இடி,மின்னல்,
புயல்,சூறைக் காற்றிலும்,
மின் தட்டுப் பாட்டிலும்,.
தண்ணீர் இல்லாமலும்
கஷ்ட்டப் படக் கூடாது….
என்பது மட்டும் தான்….

நம்மோடு விவசாயம் முடிந்து போய்விடுமோ?……
என்கிற கண்ணீர்க் கனவும்
தற்போது, அவர்களிடம் வந்து விட்டது…..

என்னிடம் வருவார்கள்….
எப்படியாவது இவனை அல்லது இவளை என்று சொல்லி

மகனையோ மகளையோ காட்டி,”படிக்க வைக்கணும்” என்பார்கள்……

கல்விக் கூடங்களுக்கும்,
கல்லூரிகளுக்கும்
\நான் விவசாயம் செய்கிற
கிராமத்து மாணவச் செல்வங்களை மகிழ்வோடு கூட்டிச்செல்லுவேன்….

அங்கே சேர்த்தும் வந்துள்ளேன்…
அப்புறம்…..
வழிகளில்,சாலைகளில்
சந்திக்கும் வேளைகளில் …….
நான் கேட்கும் முன்னரே
அந்த மாணவர்களின் பெற்றோர்கள்,
அவர்களின் மகன் அல்லது மகள் கல்லூரிக்கோ,பள்ளிக் கூடத்துக்கோ.செல்லுகிற விதத்தை
சொல்லிக் காட்டுவார்கள்….

பலர் வயல்,ட்ராக்டர்,தாலியை முதற்கொண்டு விற்று …
பிள்ளைகளைப் படிக்க வைத்ததை
அறிவேன்…

சில பிள்ளைகளுக்கு
வங்கிகளின் வாசல்களில்
கல்விக் கடன் வாங்க ….
நாட்கணக்கில் காத்திருந்து
அலைக்கழிக்கப் பட்டுள்ளேன்….
சில வேளைகளில் …
மத்திய நிதி அமைச்சருக்கே
“கடிதம் போட்டு”
வங்கி அதிகாரிகளை
வீடு தேடிவரச்செய்து
“வாங்கிக்கோங்க” என்று சொல்ல வைத்து, கிராமத்து
மாணவச்செல்வங்களுக்கு
கல்விக்கடன் வாங்கிக் கொடுத்துள்ளேன்…….
பல “ஜாம்பவான்”
பேங்க் மேனேஜர்கள்….
நைசாக என்னிடம்
ஜாமீன் கையெழுத்தும் வாங்கி வைத்ததும் உண்டு….

ஆடுகளையும்,மாடுகளையும்
நம்பிப் பிழைக்கும்
ஏழை விவசாயிகளின் பாடு
மிகப் பரிதாபம்தான்…

இலவச அரிசியும்,
இன்னபிற விலையில்லா சாதனங்களும் வழங்கும்
அரசுகள் காலத்தில்,
வெளி-மார்க்கட்டில்
ஒரு கிலோ மாட்டுத்தீவனம்
இருபத்தி ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி மாட்டுச் செல்வங்களை
எப்படிக் காப்பாற்றப் போகிறோமோ ?..என்று நான் பார்க்கும்
சக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்….
சாதாரணமாக காலையில் மூன்றுகிலோவும்,
மாலையில் மூன்று கிலோவும்
இந்த வகை உலர் தீவனம் கொடுத்தால் தான் கொஞ்சமாவது பால் கிடைக்கும்.

அப்புறம் வைக்கோல்,புல்,புண்ணாக்கு என்று பட்டியல் நீளும்……….
தினசரி அவைகளோடு பாடு கொடுக்க வேண்டும்………

கிராமங்களில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூபாய்,இருபத்தைந்து தருகிறார்கள். பாலுக்கும் விலையில்லை……

மாடுகளையும் விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுக்கிறோம்.

இன்னும் கொஞ்ச நாளில் வெளி நாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்குவது போன்று பாலும் வாங்க வேண்டியதுதான்……..

ஆடுகளும் மாடுகளும் மேய்பதற்கு ஆள் இல்லை…..
.சில வேளைகளில் நானே அந்த மேன்மைமிகு பணியை செய்திருக்கிறேன்…….

“நபிமார்களும்,தீர்க்க தரிசிகளும் இந்த வேலையைத் தானே செய்தார்கள்”
என்று மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்வேன்.

யாரையாவது மதிப்பெண்கள் எடுக்காத மாணவனை
ஆசிரியர்கள் பொதுவாகத் திட்டித் தீர்க்கும் போது
” நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு”….என்பார்கள்…அது அவ்வளவு கடினமானது…

கூப்பிடுகிற திசைக்கெல்லாம் அது வராது.
அது போகிற வழியில் தான் “ஓட்டுபவன்” போயாகணும்.
ஒரு நாள் கூட இந்த வேலையை எளிதாகச் செய்யது முடிக்க இயலாது.

குரலற்ற அந்த அப்பாவி
விவசாய ஜீவன்களின் குரலை…..ஏக்கங்களை,……
துன்பங்களை .வேதனைகளை,அவமானங்களை,
அண்ணன் பேராசிரியர்.தி.மு.அப்துல் காதர் அவர்கள் இருந்த
ராஜ் டி.வி யின் “அகட விகடம்” நிகழ்ச்சி மூலமாக,
நான் பங்கு பெற்று
உலகறியச் சொல்லி ஒரு சின்னஞ்சிறிய அதிர்வை உண்டாக்க முடிந்திருக்கிறது……

அதைப் பார்த்த,கேட்ட எத்தனையோ பெருமக்கள் என்னை நேரிலும்,அலைபேசி,தொலை பேசி வாயிலாகவும்,
வாழ்த்தியுள்ளார்கள்…..அது ஒரு பெரிய வாய்ப்பு….

ராஜ் டிவிக்கும்….
இயக்குநர் பாஸ்கர் ராஜுக்கும்,
அண்ணன் தேவ ராஜ்,
அண்ணன் பள்ளி கொண்டா ஆரிப்புக்கும் இதற்காக நன்றி சொல்லுகிறேன்.

திருநெல்வேலி மாவட்டம்
களக்காடு அருகில்
வடக்கு பச்சையாறு அணை கட்டி தேவநல்லூரோடு பச்சையாற்று தண்ணீரை தடுத்து விட்டார்கள்.

ஆண்டாண்டுகளாக,பாரம்பர்யமாக தேவநல்லூர் அணைக்கட்டு தாண்டி,காடுவெட்டி சிங்கிகுளம்,பாளையங்கோட்டை தாலுக்கா திடியூர்,
ஓம நல்லூர்,செங்குளம் தருவை
விவசாயிகள் வரை பயன்படுத்தி விவசாயங்கள் செய்த மக்கள்
இப்போது அந்த நீர் முறையாகக் கிடைக்காமல் வானம் பார்க்கிறார்கள்.
மீண்டும் பாரம்பர்ய உரிமை கிடைத்து
அந்த நீரைப் பயன்படுத்த வேண்டிய உத்திரவிட,
நீதி மன்றங்கள் வரைச் செல்ல உழைப்புச் செய்துள்ளேன்..

ஒரு தாலுக்கா விலிருந்து மற்றொரு தாலுகா விவசாயிகளுக்கே
திருநெல்வேலியில் இப்போது தண்ணீர் கிடைக்க வில்லை…
இன்றும் “சகல துணைகளோடும்” நடைபெறுகிற
மணல் கொள்ளைக்காரர்களின் “உபயத்தால்” அதன் கரையோர கிணறுகள் வரண்டுவிட்டன….
நடப்பட்ட மரங்கள் கருகி வீழ்ந்து மடிந்து விட்டன…..
மாடுகள் மேய பச்சை புல்வெளிகள் இல்லாமல்
பால் வற்றி கசாப்புக்கு போய்க கொண்டிருக்ககின்றன.

காவிரி நீர் பகிர்மானம் பற்றி ….
மேகதாது அணைக்கட்டு பற்றி…
கர்நாடகா தரவில்லை என்று…
.வாய்கிழிய பேசுகிறோம்…..
அரசியல் செய்கிறோம்…..
பச்சையாறு பற்றி பேசினால் யார் ஓட்டை….யார் வாங்க?…..

இதெல்லாம் ஒரு பிரச்சினையா?…….
என்று காதுகொடுத்துக் கேட்கவும்,
கண் கொண்டு பார்க்கவும்
அதிகார வர்க்கம் தயாராக இல்லை.

ஊதுகிற சங்கை ஊதுகிறோம்…
காலம் வரும்…
கவலைகள் தீரும் என்றே நம்புகிறோம்….

10494713_879313818748809_2131330826357270615_nLks Meeran Mohideen

Advertisements
 
Leave a comment

Posted by on May 21, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: