RSS

உயர்கல்விக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

22 May

இப்போதைய கல்விமுறை மாணவர்களின் திறனை வளர்க்கும் தகுதி கொண்டதில்லை என்பதை வாதமாக முன்வைக்கிறார்கள். அதாவது CBSE போன்ற முறைகளோடு இது போட்டி போட முடியாது. நாட்டின் மற்ற பகுதிகளில் CBSE/ICSE போன்ற கல்வி முறைகளில் படித்துவிட்டு வந்தவர்கள் உயர்கல்விகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்கிற கருதுகோளை முன்வைக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை எந்தவொரு திட்டமுமே மிக சிறுபான்மையினரை பெரியளவுக்கு முன்னேற்றுவதை தவிர்த்து, முன்னேற்றத்தின் அளவு குறைவாக இருந்தாலும் பரவலான மக்களின் பயன்பாட்டை முன்னிட்டு நடத்தப்படும் mass movement ஆகவே திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடத்தப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் முதுகெலும்பான சமூகநீதி உணர்வுக் கொள்கைகளின் பார்வையில்தான் இதை புரிந்துக்கொள்ள இயலும். இது பலனளிக்கிறதா என்றால், அளிக்கிறது என்றுதான் பொருளாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள். அமர்தியாசென் இந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு தனி நாடாக இருந்திருக்கும் பட்சத்தில் தெற்காசியாவில் செல்வாக்கு மிக்க நாடாக இருந்திருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

நிறைய பேர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் சூழலில் உயர்கல்விக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

2014ன் படி பார்த்தால் பள்ளியிலிருந்து பட்டம் பெற செல்பவர்கள் தமிழ்நாட்டில் 32 சதவிகிதம். தேசிய சராசரியே 20 சதவிகிதம்தான். இந்த விஷயத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழகம்தான்.

பத்தாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பிலும் சிறப்பாக செயல்படுகிறார்களா என்றொரு கேள்வியை இன்னொரு நண்பர் கேட்டிருக்கிறார்.

அப்படியே செயல்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை +2 ரிசல்ட்டும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறப்பாகதான் இருக்கிறது.

கல்வி விஷயத்தில் நாம் பின்தங்கிக் கொண்டிருப்பதாகவும், முட்டாள்களுக்கு முப்பத்தைந்து மார்க் போட்டு பாஸ் செய்து அனுப்புவதாகவும் செய்யப்படும் பிரச்சாரம் விஷமம் மிகுந்தது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெறுவதை தடுக்கும் மறைமுகமான முயற்சி இது.

11263052_10206915106623187_6253573594807626667_nYuva Krishna
Advertisements
 
Leave a comment

Posted by on May 22, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: