RSS

பத்திரிகைகள் காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்……./வாவர் F ஹபிபுல்லாஹ்

27 May

பத்திரிகைகள் காலத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடிகள்…….
AN UNTOLD STORY

11226567_10204255333652005_8893295237336454064_n40 வருடங்களுக்கு முன்னால்….
படித்தவர்கள பத்திரிகை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இப்போது போல் அப்போது சுடச்சுட செய்திகளை தரும் TV செய்தி சானல்கள் இருந்தது இல்லை. மக்கள் பெரும்பாலும் பத்திரிகைகளையே, நாட்டு நடப்பு செய்திகளுக்காக நம்பி இருந்த காலம் அது. பணம் கொடுத்து செய்தி பிரசுரிக்கும் கீழ்த்தரம் அன்றைய பத்திரிகை உலகில் இருந்ததில்லை. நல்ல கட்டுரைகளுக்காக,பேட்டிகளுக்காக, அந்த துறையில் சிறந்தவர்களை தேடி கண்டு பிடித்து, காத்திருந்து, செய்திகளை கைகளால் எழுதி எடுத்து, அதை பெரிய அளவில் எந்த திருத்தமும் செய்யாமல் அப்படியே பிரசுரிக்கும் “பத்திரிகை தர்மம்” கடை பிடிக் கப்பட்ட காலம் அது. அக்கால பத்திரிரிகை நிருபர்கள், ரிப்போர்டர்கள், எடிட்டர்கள், பத்திரிகை உரிமையாளர்கள் இவர்களிடம் இன்று போல் எந்தவித அடாவடித்தனமோ, பந்தாவோ இருந்ததில்லை. அடக்கமானவர் கள், மிகவும் எளிமையானவர்கள்.

தினத்தந்தி அதிபர் மறைந்த சிவந்தி ஆதித்தனார் அவர்கள் எனது சிறந்த நண்பர் களில் ஒருவர். எம்.ஜி.ஆரை தலைவராகக் கொண்டு அன்று செயல்பட்ட சத்துணவு உயர் மட்ட குழுவில் என்னுடன் இணைந்து அவரும் ஒரு உறுப்பினராக செயல் பட்டவர்.
பெருந்தன்மையும், அடக்கமும் ஒருங்கே அமைந்த நல்ல பண்பாளர் அவர். என்னிடம் மருத்துவ கட்டுரைகளை பெறுவதற்காக அவரது எடிட்டர் சுப்பையா அவர்களையே, என்னிடம் நேரில அனுப்பி வைப்பார் அவர். அதைப்போலவே அந்நாட்களில் தினத்தந்தி யின் பிரதம ரிப்போர்டராக இருந்த சுகுமார் அவர்களும் எனது நெருங்கிய நண்பர். அந்த நாடகளில் சுகுமார் வருகைக்காக காத்து கிடந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பலரை நான் அறிவேன். எம்.ஜி.ஆரிடமே நெருங்கிய தொடர்பு கொண்டவர் அவர்.

முன்னாள் தினகரன் பத்திரிகையின் உரிமை யாளர் கே.பி.கந்தசாமி அவர்களும் எனது நெருங்கிய நண்பர் தான். பத்திரிகைகளில் நான் எழுதுவதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த பெருந்தகை அவர். அந்த காலத்தில் “சரித்திர நாயகர்களின் அந்திம காலங்கள்” என்ற கட்டுரைத் தொடரை ஒரு வருடத்திற்கும் மேலாக தினகரனில், நான் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்த கட்டுரையை பெறுவதற்காக வாரந்தோறும் அவரது அந்நாளைய ஆசிரியர் சவுந்தர ராஜன் அவர்களை எனது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து கட்டுரைகளை என்னிடம் இருந்து வாங்கி வரச் செய்து, அதை பிரசுரித்து மகிழ்வார் அவர். பல அரசியல் தலைவர்களை, பேராசிரியர்களை, நீதிபதிகளை, அரசு அதிகாரிகளை அதிக அளவில் கவர்ந்த கட்டுரையாக, அந்த கட்டு ரைகள் அமைந்ததாக அவரே பலமுறை போன் மூலம் சொல்லி பாராட்டியதை என்னால் இன்றும் மறக்க இயலாது. அந்த கட்டுரைகளை நான் எழுதியதற்காக சற்று பணத்தையும் அன்பளிக்காக தந்து அதை பெற்று கொள்ள வலியுறுத்தியதையும், அதை நான் பெற்று கொள்ள மறுத்ததும் இன்றும் என் நினைவில் வந்து போகிறது.
குழந்தை மருத்துவம் குறித்த அனைத்து தகவல்களையும் வாரந்தோறும் பெற்று அதை தினகரன் குரூப் சார்ந்த அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவரச் செய்து மகிழ்ந்தவர் அவர். அந்த நாட்களில் எனது மருத்துவ கட்டுரைகள் இல்லாமல் தினகரன் பத்திரிகை வெளி வந்ததில்லை. தாய்மார்களை அதிகம் கவர்ந்த கட்டுரையாக அது அமைந்தே அதற்கு காரணம் என்பதை பின்னாளில் நான் அறிந்தேன். அந்த நாட்களில், நூறு மருத்துவ கட்டுரைகளுக்கு மேல் நான் தினகரனில் எழுதி குவித்திருப்பேன்.அன்றைய தினகரன் பத்திரிகையின் மருத்துவ பகுதிக்கு தலை சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் மருத்துவ பேட்டிகளை பதிவு செய்யும் உதவிகளை செய்வதற்கு ஆசிரியர் குழு, என்னையே தேர்வு செய்தது. சென்னை யின் பெரும்பான்மையான மருத்துவ நிபுணர் கள், என் நண்பர்கள் என்பதால் இந்த பணி எனக்கு எளிதாக இருந்தது. அவர்களில் மிகவும் முக்கியமானவர் எனது நெருங்கிய நண்பர் DOCTOR. சவுந்தர ராஜன் அவர்கள். சிறுநீரகத் துறை பேராசிரியரான இவர், நடிகர் ரஜினியின் குடும்ப டாக்டர். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு பி.ஜே.பி கட்சியின் தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜனின் கணவர் இவர். அந்நாளில் இவரது மருத்துவ பேட்டி தினகரனில் வெளியாகி பலரது பாராட் டுகளைப் பெற்றது.

அதுபோலவே, வாசுகி இதழின் ஆசிரியர் தாமரை மணாளன் எனது சிறந்த நண்பர். எனது மருத்துவ கட்டுரைகளை, அவரே தொலைபேசியில் நேரடியாக என்னை அழைத்து, எழுதி தரும்படி கட்டாயப் படுத்து வார். குழந்தைகள மனஇயல் பற்றிய கட்டுரை தொடரை வாசுகி இதழில் தொடர்ந்து ஒருவருடத்திற்கு மேல் எழுதி வந்தேன். தாய்மார்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு நல்ல கட்டுரைத் தொடர் அது என்று சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஆசிரியர் விஜயன் அவர்களும் எனது சிறந்த நண்பர்.அந்த நாட்களில் தினத்தந்தி, தினகரன், ராணி, தேவி, வாசுகி போன்ற அனைத்து புகழ் பெற்ற பத்திரிகைகள் மற்றும் வார இதழ்கள் எனது கட்டுரைகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டதை இன்றும் (recognition) கவுரவம் என்றே நான் கருதுகிறேன். நான் எழுதிய பல கட்டுரைகளை, கதைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சென்னை மாலைமுரசின் மானேஜர் அன்று என்னிடம் பலமுறை சொன்னார். குழந்தை வளர்ப்பில் ‘தாயின் சின்ன சின்ன சந்தேகங்கள்’ என்ற தலைப் பையும் அவரே தேர்வு செய்து கொடுத்தார். மாலைமுரசு பிரஸ்ஸிலேயே, இதை பிரிண்ட் செய்து வெளியிடலாம் என்ற ஆலோசனை யையும் தந்தார். அன்றைய பத்திரிகைகளில் விளம்பரமும் செய்தார். சில காரணங்களால் அவரது நல்ல முயற்சிகள் அன்று தடை பட்டது. பின்னர் எனக்கும் ஆர்வம் குறைந்தது.
வேலைப் பளுவும், வெளிநாடு பயணங்களும் எழுத்து துறையிலிருந்து நான் வேகமாக விடு பட வழி வகுத்தன.

எழுத்துக்கலை, பேச்சுக்கலை வளர்ப்போம் என்பதெல்லாம் நம் நாட்டை பொறுத்தவரை ‘சுத்த வேஸ்ட் ஆப் டைம்.’ தமிழ் எழுததாளர் களை தமிழ் உலகம் அதிகம் கண்டு கொள்வ தில்லை. சேக்ஷ்பியரை ஆங்கிலேயர் அறிந்த அளவுக்கு……….. தொல்காப்பியரையோ,கபிலரையோ, திருவள்ளுவரையோ தமிழர்கள் சரியாக அறிந்து கொள்ளவில்லை. கம்பரை விட கம்பரசம் புகழ் பெற அண்ணாவே காரணம்.வள்ளுவனுக்கும், கண்ணகிக்கும் ஒரு வடிவத்தை தந்து வழிபட வைத்த பெருமை கலைஞரைச் சாரும்.பாரதியையும், பாரதி தாசனையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் அண்ணாவும், அவர் சகாக்களும் தான்.கண்ணதாசன் எழுத்தை விட கவிதை எடுபட சினிமா காரணம். அது இன்றைய எல்லா சினிமா கவிஞர்களுக்கும் பொருந்தும்.

நேர்மையும், புலமையும், திறமையும் கொண்ட எழுத்தாளர்கள் இப்போது இல்லை.
காசு கொடுத்து எழுதும் விளம்பர செய்திகளே இப்போது முக்கிய பத்திரிகைகளை அலங்கரிக்கின்றன.சில ஆங்கில நாளிதழ்களின் பக்கங்கள் தேர்வு செய்யப்பட்ட சுப்ரமணியசாமி, குருசாமிகளின் கருத்துக்களை மட்டுமே பதிவு செய்கின்றன.மற்ற இனத்தவரின் கட்டுரைகள் இன்றும் இவர்களால் புறம் தள்ளப்படுகின்றன.

மேநாட்டு எழுத்தாளர்கள் அவர்களின் புத்தகம் வெளிவந்த மறுநாளே,கோடீஸ்வரர் ஆகி விடுகின்றனர்.ஒருமுறை சவுதி அரேபி யாவில் மக்கா மாநகரில்,மருத்துவ பணி நிமித்தமாக நான் தங கியிருந்த போது ஒரு ஆங்கில கவிதை ஒன்றை, ஆன்லைன் மூலம் சவுதியின் புகழ் பெற்ற “ஆரப் நியூஸ்” பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ‘ஆரப் நியூஸ்’ எந்த கவிதைகளையும் பிரசுரிப்பது இல்லை.எவரும் நம்ப இயலாத ஆச்சரியம் என்னவென்றால் என் கவிதையை, கவிதை யின் தரம் கருதி தேர்ந்தெடுத்து, ஒரு முழு பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்து கெளரவித்தது அந்த பத்திரிகை.அந்த பத்திரி கையின் ஆசிரியர் குழு முழுமையும் என்னை பாராட்டி கவுரவித்தது, இன்று என்னால் மறக்க இயலாத நிகழ ச்சியாகும். இப்போது கதைகளும, கட்டுரைகளும், கவிதைகளும் நான் பத்திரிகைகளில் எழுதுவதில்லை.
சாக்ரடீஸ்களையும், பிளேட்டோக்களையும், அரிஸ்டாடில்களையும், கலீல் ஜிப்ரான்களை யும், ரூமிகளையும், பாவலர்களையும், ஞானியார்களையும், அப்பாக்களையும் யார்!? என்று கேட்கும் இந்த உலகிற்கு மீண்டும் அவர்களை அறிமுகம் செய்வது எப்படி?
முடிந்தால் இதை முயன்று பார்க்கலாம்.!

Vavar F HabibullahVavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on May 27, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: