RSS

ஒரு முறையேனும்..

08 Jun

ஒருமுறையேனும்
திருமுகம் பார்த்து
திருமணம் செய்தல்
உறவுக்கு நலமே

பலமுறை பார்த்தும்
ஒருமுறையேனும்
பாராது போனால்
நட்புக்குக் கேடே

சில முறையேனும்
உதவிகள் செய்தால்
சினம் கொண்ட பகையும்
சேர்ந்திடும் இனிதே

உனக்கென நானும்
எனக்கென நீயும்
ஒருமுறை மட்டும்
உறவினை அமைத்து
வாழ்வது மகிழ்வே

தனக்கென வாழ்தல்
தரங்கெட்ட வாழ்வே
ஒருமுறையேனும்
பிறரையும் நினைத்தால்
பிறந்திடும் உயர்வே

மனிதனாய் பிறந்து
மரணிக்கும் முன்னே
ஒருமுறையேனும்
புனிதனாய் வாழ்தல்
படைத்தவன் கணக்கில்
போற்றிடும் சிறப்பே

கனிதரும் மரமும்
ஒருமுறையேனும்
காய்வது இயல்பே

பினிவருமுன்னே
புரிந்திட நடந்து
பேணிடல் முறையே

இனிவரும் காலம்
ஏற்றமாய் இருக்க
ஒருமுறையேனும்
உணர்வது நலமே

இனியொரு பிறவி
இகத்தினில் இல்லை
ஒருமுறையேனும்
உயர்வுடன் வாழு

ஒருமுறை பிறப்பும்
ஒருமுறை இறப்பும்
இயற்கையின் நியதி

அறிந்திட்டு உணர்ந்து
திருந்திட்ட வாழ்வு
பிறப்புக்குச் சிறப்பு

10958855_872678729420381_8339101138542594110_n

அதிரை மெய்சா
ஒரு முறையேனும்.. [ லண்டன் வானொலியில் வாசகரின் பாராட்டை பெற்ற கவிதை ! ]

கடந்த 27-11-2014 வியாழன் அன்று இலண்டன் பாமுகம் FA TV-யில் கவிதை நேரம் நிகழ்ச்சிக்காக ஒருமுறையேனும் என்கிற தலைப்புக் கொடுத்து பல கவிஞர்களின் கவிதையும் வாசிக்கப்பட்டது. அதில் நமது பங்களிப்பாளர் அதிரை மெய்சாவின் கவிதையும் இடம் பெற்றது. கவிதை வாசிப்பு முடிந்ததும் வாசகர் ஒருவர் அதிரை மெய்சாவின் கவிதை வரிகளை ரசித்துக்கேட்டு இணைப்பில் வந்து உணர்ச்சிபொங்க பாராட்டிய காணொளிப்பதிவு இத்துடன் பதியப்பட்டுளள்ளது. இதில் 7.38 வது நிமிடத்தில் ஆரம்பமாகிறது.


குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 27-11-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 4 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.

http://adiraimysha.blogspot.ae/2014/12/blog-post_52.html?m=1

 
Leave a comment

Posted by on June 8, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: