RSS

சொல்லத்தான் நினைக்கிறேன்- தொடர்ச்சி .2………….

09 Jun

by.Raheemullah Mohamed Vavar

இங்கே வந்து முதலில் ஒரு தனியார் வங்கியிலும், அதன் பிறகு உலக வங்கி 45% மூலதனமும், உகாண்டா அரசு 30%, இன்னொரு லண்டன் ஃபைனான்ஸ் இன்ஸ்டிடூட் 25% வைத்திருந்த, அப்போது இங்கே இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டிருந்த ஒரு வங்கியில், முதலில் மேனேஜராக பதவி ஏற்று, பின்னர், மேற்கு மண்டலம் முழுமைக்குமாக ரீஜனல் பொறுப்பேற்று, 2005- ல் அதிலிருந்து ரிட்டையர்ட் ஆகி, மீண்டும் பழைய முதலாளி கூப்பிட்டதின் பேரில் அந்த குரூப் ஆஃப் கம்பெனியில் ஒரு கிளையில் ஃபைனான்ஸ் கண்ட்ரோலராக தொடர்ந்து இன்னமும் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இடையில் இங்கேயும் ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பார்டனர்ஷிப்பில் தொடங்கிய அதில் எல்லாம் சேர்த்து உத்தேசமாக 60 மில்லியன் வரை பாழானது.

முழுவதுமாய் 43 வருடங்கள் உழைத்த அனுபவம், இதனால் எல்லாம் சொல்ல வருவது……

காக்கா எவ்வளவு நீதமான விஷயங்களை எப்படி போட்டு உடைக்கிறீர்கள், எப்படி எல்லாம் வளைத்து நெளித்து வார்த்தைகளை முகநூலில் வெளியிடுகிறீர்கள், அல்லது எவ்வளவு சாமர்த்தியத்துடன் செயற்கையாக சில செய்திகளையும் திணிக்கிறீர்கள், கற்பனை பறவை உங்கள் முகவானில் இறக்கை கட்டி அல்லவா பறக்கிறது என்று, சிலர் உள்ளில் வந்து மிகுந்த ஆச்சரியப்பட்டு, அல்லது பெரும் குறைப்பட்டு கேட்கும் போது, கடந்து வந்த கடினமான பாதை கற்றுத் தந்த நெளிவு, சுழிவுகளே அல்லாது, என் எழுத்துக்களில் வேறொன்றும் இல்லை, யதார்த்த நிலைகளே என் வார்த்தைகள், நடப்புக்களுக்கு சாத்தியமானதே என் யோசனைகள், அதுவல்லாமல்….
கற்பனைகள் என்பது, .ஓய்வில் ஒய்யாரமாய், உப்பரிகைகளில் அமர்ந்து, உயரமான சாளரங்களின் வழி பார்வைகள் நீளும் போது, உயிரினங்கள் எல்லாமும் மண்ணில் அற்பமாய் ஊர்ந்து போவது போல் தெரியும் வேளையில் மட்டுமே ஏற்படக் கூடியவை, இன்னமும் அந்த சோம்பேறித்தனமான நிலையை நான் அடையவில்லை !

(எதையோ சொல்ல ஆரம்பித்து எப்படியோ முடிந்திருக்கிறது, ஒருவகையில் இதுவும் சரிதான், இங்கே சிலருக்கு சில விபரங்கள் கட்டாயம் தெரிந்துதான் ஆகணும்)

Raheemullah Mohamed Vavar10858410_509656449177069_5663572308532446822_n
Advertisements
 
Leave a comment

Posted by on June 9, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: