RSS

சொல்லத்தான் நினைக்கிறேன் – தொடர்ச்சி 1………….

09 Jun

by.Raheemullah Mohamed Vavar

அதன் பிறகு தம்பி அபூஹாஷிமாவோடு சேர்ந்து ரூபாய் 25,000 என் வாப்பா தந்ததை வைத்து முல்லா ஸ்டோர் என்று சொந்த வியாபாரம், அவ்வருடமே 1976-ல் திருமணமும், சரியாக 100 நாட்கள் கழிந்த நிலையில் துபாய். போய் இறங்கியவுடன் ஒரு பக்கெட், நீண்ட பிரஷ், ஒரு சிறிய ஹேண்ட் பிரஷ், துடைக்கிற இரண்டு துண்டு எல்லாம் கொண்டு வந்து தந்து, தூத்து துடைக்கும் பணி என்றான், இல்லை ஸ்டோர் கீப்பர் என்று அப்பாயிண்ட்மென்ட் காட்டினேன், என்றாலும் முதல் மூன்று மாதங்களுக்கு, எல்லா வேலையிலும் பழக வேண்டும் என்று மறுத்து விட்டான், டாய்லெட் கிளீன் பண்ணுகிற வேலையும் சேர்த்தேதான், ஒரு பி.ஏ.பி.எட் வாத்தியாரும், ஒரு வக்கீலும் என் தூப்புக் கோஷ்டியில் இடம் பெற்றிருந்தனர். 1977-ல் என் சம்பளம் ஓவர் டைம் எல்லாம் சேர்த்து வெறுமனே 350 திர்ஹம் மட்டுமே, சாப்பாடு, தங்கும் இடம், 2 வருடம் ஊருக்கு ரிட்டன் டிக்கட் உண்டு. ஊர் ரூபாய்க்கு அப்போது அந்த 350 திர்ஹம் 1,500 ரூபாய் மட்டுமே. மாலை 5 மணிக்கு பிறகு, அங்கே தங்கி இருந்த அமெரிக்கர்களின் 4 கார்கள் கழுவி, அதில் மாசம் 400 டாலர்கள் சேர்த்தேன், அப்படி எல்லாம் ஒப்பேறியது அன்றைக்கு. கடைசியில் அந்த நிறுவனத்திலேயே, Camp Boss என்கிற நிலைக்கு உயர்ந்தது தனிக்கதை.

அதன் பிறகு 5 கடைகளும் ஒரு பெரிய ரெஸ்ட்டாரண்டும் திறந்து சார்ஜாவில் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய முதலாளியாக உருவெடுத்து, 3 வருடங்களில் அப்போதைக்கான ஒரு இலட்சம் திர்ஹம்ஸ்களை நஷ்டப்பட்டு ஊர் வந்து மீண்டும் 2 வருடங்களில் மஸ்கட், சலாலாவுக்குப் போய், ஒரு குரூப் ஆஃப் கம்பெனியில், படித்த தலைமுறையினராக இருந்த ஓமானி இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளி, பெர்சனல் மானேஜராய் தொடர்ச்சியாய் 5 வருடங்கள் பணி செய்து, இழந்ததை எல்லாம் மீட்டு, கடன் எல்லாம் தீர்த்து விட்டு, அங்கிருந்தும் ஊர் திரும்பி, 1996 ஏப்ரல் 26-ல் இங்கே உகாண்டா வந்து இன்றைக்கு 20 வருடங்கள் முடியப் போகிற நிலையில், இன்னமும் இங்கே தொடர்கிறது. அன்றைக்கு திரும்பிப் பார்க்காத கடவுள், கோபம் தீர்ந்து இன்றைக்கு வலிய வந்து வேண்டும் மட்டும் உணவளித்துக் கொண்டிருக்கிறார், அதற்கான காரணம் தெரிந்தவனும் அவனே என்றாலும், வாப்பாவின் மௌத்துக்கும், உம்மாவின் மௌத்துக்கும் கலந்து கொள்ள முடியாத கேடான காலங்கள் அவை., வெளி நாட்டு பயணத்தில் மிக மிக மோசமான தருணங்கள் அவை.
(தொடரும் )

10858410_509656449177069_5663572308532446822_n
Raheemullah Mohamed Vavar
 
Leave a comment

Posted by on June 9, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: